11 வயது சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள செய்தியானது முஸ்லிம் பெண்களின் திருமண வயது பற்றிய இஸ்லாத்தின் சட்டத்தில் உள்ள நியாயங்களை வலியுறுத்துகிறது.
இதே போன்று 14 வயது மாணவியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு குழந்தைக்கும் தாயாகியுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வேண்டி அவளை இந்த நிலைக்கு இட்டுச்சென்றவர்களுக்கு நீதி மன்றம் தண்டனையை கொடுக்கலாம். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவளது குழந்தைக்கும் இலங்கை திருமண சட்டத்தில் இடமே இல்லை.
அவள் அந்தக்குழந்தையை பெற்ற போதும் அவளுக்கு 18 வயதாகும் வரை அக்குழந்தையை தகப்பன் பெயர் தெரியாத ஹராமியாகவே வளர்த்தெடுக்க வேண்டும். காரணம் ஒரு பெண் 18 வயது வரை திருமணம் முடிக்க முடியாது என்பது இலங்கையின் பொதுச்சட்டமாகும்.
அந்தப்பெண்ணை இந்த நிலைக்கு ஆக்கியவன் அவளை மண முடிக்க முன் வந்தாலும் அவள் திருமணம் முடிக்க முடியாது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் குழந்தை என தெரிய வந்ததும் அந்தக்குழந்தையையும் அவளையும் பொறுப்பெடுக்க நல்ல உள்ளம் படைத்த யாரும் முன் வந்தாலும் அவளை திருமணம் செய்ய முடியாது என்பது எந்தளவுக்கு இலங்கையின் திருமண பொதுச்சட்டம் என்பது பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை காட்டுகிறது.
இந்த இடத்தில் இஸ்லாமிய திருமண சட்டம் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்ணுக்கு திருமண பாதுகாப்பை தருகிறது என்பதை காண்கிறோம். அதன் மூலம் பெண்ணின் திருமணத்துக்கென குறிப்பிட்ட வயதை இஸ்லாம் நிர்ணயிக்காததன் மூலம் இஸ்லாமிய திருமண சட்டம் என்பது மனிதன் எழுதிய சட்டம் அல்ல எல்லாம் அறிந்த இறைவனின் சட்டம் என்பது மிகத்தெளிவாகிறது.
ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் பெண்களின் திருமண வயது என்பது அவள் பருவமடைதல் என்றிருப்பதை மாற்றி வயதை நிர்ணயிப்பதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்க முடியாது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.
- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment