BREAKING NEWS

தமிழர்களைடைய போராட்டத்துக்குத் துணை நின்ற ஒரேஒரு சமூகமென்றால் அது முஸ்லிம்கள் தான்

Mukinthan  Thurairajasingham  மற்றும்  Antony Emmanuve  அவர்களே!
நீங்கள் எல்லோரும் வரலாற்றை மறந்து அல்லது மறைத்துப் பேசுகின்றீர்கள். மனச்சாட்சியுடன் வரலாற்றைப்பின்நோக்கிப்பார்த்தால் தமிழர்களைடைய போராட்டத்துக்குத் துணை நின்ற ஒரேஒரு சமூகமென்றால் அது முஸ்லிம்கள் தான். ஆனால் பிற்பட்டகாலங்களில் தமிழர்களுடொய ஈனச்செயல்களினால்தான் முஸ்லிம்கள் தற்போதைய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

1. தமிர்களின் ஆயூதப் போராட்டத்துக்கு அத்திவாரமிட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் ஈழம் பெறுவதற்கு தமிழ் தலைமைகளால் முடியாவிட்டால் முஸ்லிம்கள் அதைச்செய்வார்கள் என்பதை உரத்த குரலில் "அண்ணன் அமிர்தலிங்கம் ஈழத்தைப் பெற்றுத்தரா விட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத்தருவான்" என்று 1976ம் ஆண்டு அதே வட்டுக்கோட்டை மாநாட்டில் மறைந்த தலைவர் அஷ்ரப் உணர்வுபூர்வமாகக்கூறி தமிழ்தலைவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் 1985, 86, 87களில் தமிழர்களின் ஆயுதங்கள் முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்பப்பட்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் கிராமங்கள் அழிக்ப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் வர்த்தக நிலையங்கள் சாம்பலாக்கப்பட்டும்  (மூதூர், கிண்ணியா, ஓட்டமாவடி, ஏறாவூர், வாழைச்சேனை,கல்முனை, இஸ்லாமாபாத்,மாளிகைக்காடு, சம்மாந்துறை) கொடுமைகள் செய்தபோதுதான் மனமுடைந்து மு.காவை ஆரம்பிதாதார்.

2. தமிழர்களின் ஆயுதப்போராப்டம் ஆரம்பமானபோது முஸ்லிம் இழைஞர்களின் பங்களிப்பு அபரிவிதமாகக் காணப்பட்டது. சில இடங்களில் முஸ்லிம்களே தளபதிகளாகக் காணப்பட்டனர். இதில் கெப்டன் பாறூக் கந்தளாய் ஹஸன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய சமையற்காரனே ஒரு முஸ்லிம் ( மன்னார் நெய்னா முஹம்மது) ஆனால் 1990ல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் படலம் ஆரம்பித்தது. இயக்கத்திலிருந்த முஸ்லிம் இழைஞர்களையும் சமூகத்திலிருந்த புத்திஜீவிகளையும் சுட்டுத்தள்ளினார்கள். முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து துவம்சம் செய்து உடுத்த உடையுடன் வடக்கிலிருந்து வெளியேற்றியதுடன் பொலநறுவை பள்ளியாகொடல, அஹமட்புர, அழிஞ்சிப்பொத்தானை கிழக்கில் காத்தான்குடி, ஏறாவூர்,ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிருமிச்சை, ஆகியபகுதியி பள்ளிவாயல்களிலும் கிராமங்களுக்குள்ளும் மனிசவேட்டையாடி வகைதொகையற்று மனித உயிர்களை சுட்டும் வெட்டியும் அறுத்துக்குவித்து பச்சிளம் குழந்தைகளை நிலத்தில் தூக்கியடித்தும் மழலைகளை சூடேற்றிய றொட்டிக்கல்லில் வைத்தும் கர்ப்பிணித்தாய் மார்களின் வயிற்றைக் கீறிப்பிழந்து சிசுக்களை வெளியிலெடுத்தும் சம்மாந்துறை சாய்ந்தமருது அக்கரைப்பற்று போன்றபகுதிகளில் பள்ளிகளுக்குள்ளும் சந்தைகளுக்குள்ளும் குண்டுகளை வெடிக்கச் செய்தும் அக்கரைப்பற்று சம்மாந்துறை போன்றபகுதியில் வயலுக்குள் சென்றவர்களை சுட்டும் வெட்டியும் ஹஜ்ஜுக்குப் போய்திரும்பி வந்த கல்முனையைச் சேர்ந்த அப்பாவி ஹாஜிகள் 110 பேரை வேனுடன்கடத்தி உயிருடன் தீயிட்டுக்கொழுத்திய பிற்பாடுதான் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடந்தது. நீங்கள் மேற்கூறிய அவலங்களையெல்லாம் எங்களுக்கெதிராக அரங்கேற்றிய பின்னர் நீங்கள் தேடிக்கொண்ட வினைக்காக நாங்கள் உங்களுக்காகக் கவலைப்பட வேண்டுமென்றோ வருத்தப்பட வேண்டுமென்றோ எதிர்பார்ப்பது உங்கள் முட்டாள் தனமாகும்.

3. அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் நீங்கள் எடுத்த தூரநோக்கற்ற புத்திசாதுரியமற்ற முடிவுகளே உங்களுக்குப் புதைகுழிகளைத் தேடித்தந்தன. உதாரணமாக தேனும் பாலுமூட்டி வளர்த்த பாரதத் தலைமையின் மார்பின்மேல்
நன்றிமறந்த கடா பாய்ந்து கதையை முடித்தது. உங்கள் சீமான்களின் பார்வையில் ராஜீவை முடித்ததாகத் தென்பட்டபோதும் யதார்த்தத்தில் அது வடகிழக்குத் தமிழர்கள்மீது விழுந்த மரணஅடி என்பதை தீர்க்கதரிசனமாகச் சிந்திக்கத் தவறிவிட்டனர். அத்துடன் நீங்கள் நன்றி கெட்டவர்கள் என்பதையும் உலகறியச் செய்துவிட்டீர்கள்.

உங்கள் பிழையன முடிவின் இன்னுமொரு பரிமாணம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் தமிழர்களின் உரிமைகளும் தாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சந்திரிக்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு தங்களைத்தாங்களே ஆழும் சுயாட்சியாக அமையவேண்டும் என்னும் தீர்வுத்திட்டத்தை நகல் யாப்பாக வடிவமைத்து பாராளுமன்றத்திவ் முன்வைத்தார். அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற 8 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் த.தே.கூட்டமைப்புடன் பேசினார். கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாதெனச் சிந்திக்காமல் சோனிக்கும் தீர்வு கிடைக்கப் போகுதே என்று நச்சுத்தனமாக சிந்தித்துக் காலைவாரினார்கள். அன்று 8 வாக்குகளைக் கொடுத்திருந்தால். இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்பட்டிருக்கும். இன்று தமிழர்கள் மண்ணையும் மானத்தையும் வென்று சுயாட்சியுடன் தலை நிமிர்ந்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் வரைச்சென்று 40ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

5. உங்கள் தூரநோக்கற்ற தீர்மானத்தின் மற்றுமொரு வடிவம். 2001ம் ஆண்டு ரணிலும் மஹிந்தயும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினர். தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமல் தடுப்பதற்கு மஹிந்தவிடம் 350 கோடிக்குக் கைநீட்டினீர்களே அன்றே முடிந்தது உங்கள் போராட்டம். போராளிச்சீமான்கள் என்று சொல்வதற்கு யாருமிவ்லாதவாறு முள்ளிவாய்க்காலில் வைத்து கதையை முடித்தான் மஹிந்த. அன்று 8 வாக்குகளைக் கொடுத்திருந்தால் தேவையா இந்த அழிவு?.

ஆகவே? நச்சுத்தனமான சிந்தனையாலும் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளாலும் தங்களுக்குத் தாங்களே புதைகுழிகளைத் தேடிக்கொண்டீர்கள்.

இப்போது சில காவியுடைக் காடையர்கள் செய்வதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ஒப்பீட்டளவில் உங்களைவிட அவனுகள் பறவாயில்லை. சிங்களப்பகுதிகளில் முஸ்லிம்கள் சிறு சிறு குழுக்களாக சிதறிவாழ்கின்றனர். எங்கேயாவது ஊரைவிட்டும் துரத்தப்பட்டுள்ளனரா? எங்கேயாவது பள்ளிகள் பாழடைந்துள்ளனவா? எங்கேயாவது மீள்குடியேற்றத்துக்குத் தடைபோடுகின்றனரா? சில காவாலிகள் செய்தால் ஏனைய சிங்களப் பொதுமக்களும் தேரர்களும் தலையிட்டு முஸ்லிம்களுக்குத் துணை நிற்கின்றனர். சிங்களத்தலைவர்கள் முஸ்லிம்களுக்குக் குரல்கொடுக்கின்றனர். உங்களில் யாரும் அப்படிச்செய்வீர்களா?

அவர்கள் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படாதீர்கள். ஏனெனில் எங்களை விடவும் அவர்கள் உங்களுக்குத்தான் ஆபத்தானவர்கள். உங்களின் தோற்கடிக்கப்பட்ட போராட்டத்தின் பக்கவிளைவுதான் அவர்களின் தோற்றம். அவர்களிருக்கும் வரை உங்களுக்கான தீர்வு எட்டாக்கனி. அவர்களிருக்கும் வரை வடகிழக்கு இணைக்கப்படுமோ என்று நாங்கள் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.
அதையும்தாண்டி இணைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு வருமாயின் காத்திருங்கள் உங்களுக்குத் தங்கத்தட்டில் வைத்து தாரைவார்த்துத் தருகிறோம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar