BREAKING NEWS

முஸ்லிம் எம்பிக்கள் சல்வார் அல்லது சாரியுடன் பாராளுமன்றம் செல்லுங்கள் !!நாட்டை வளமிக்க நாடாக மாற்றிகொண்டுவந்த மஹிந்த ஆட்சி பேரினசக்திகளால் முன்னேடுக்கப்படுட்ட தீவிரவாத செயலை கண்டித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தி மஹிந்த ஆட்சியை கவிழ்த்த பெருமைக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளே !! உங்களுக்கு இறைவனின் அருள் கிட்ட பிராத்திக்கிறேன் .

நல்லாட்சி அரசு தீவிரவாத செயலை பகிரங்கமாக செய்கின்ற பொதுபலசேனா அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு முக்கிய பதவிகளையும் கட்சியின் அமைப்பாளர் பதவிகளையும் வழங்கி கௌரவிப்பது போன்று  மஹிந்த ஆட்சியில் சிறிய சிறிய விடயங்களிலையே ஈடுபட்டுவந்த பொதுபலசேனா அமைப்புக்கு மஹிந்த ஆட்சியில் எந்த நேரடி பதவிகளையும் மஹிந்த அரசு வழங்கவில்லை என்பதை நீங்கள் அறீவீர்களா ?

உத்தியோகபூர்வ மற்ற பாதுகாப்புபடையாக பொதுபலசேனா அமைப்பு இயங்கப்போவதாக பகிரங்கமாக தெரிவித்தும் இந்த நல்லாட்சி அவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன ?
தமிழ் இயக்கமும் உத்தியோகபூர்வ மற்ற பாதுகாப்பு படையாக இயங்கியதன் காரணத்தினால் இந்த நாடு அடைந்த துன்பதுயரங்களை உங்கள் புத்திகள் மறந்துவிட்டதா ? அல்லது மறைத்து விட்டதா ? என கேட்க விரும்புகிறேன்.

முஸ்லிங்களின் குடியிருப்பு காணிகளை மஹிந்த அரசில் வழங்கி வைக்கிறார்கள் ஆனால் அந்த மக்களின் அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று நாட்டை குழப்பநிலையில் ஆட்சி செய்யும் இந்த நல்லாட்சி காடாக பிரகடனம் செய்கிறது ஆனால் நமது பிரதிநிதிகள் அரசுக்கு முட்டுக்குடுத்து தனது பதவிகளை காப்பாற்றுவதில் குறியாக இருக்கிறது.

முஸ்லிம் காணிகளில் கிழக்கில் புத்தபெருமானும் வடக்கில் விநாயக பெருமானுமாக ஆட்கொள்கின்றனர்.அதன் உண்மைத்தன்மையை அறிந்து உங்களை பாராளுமன்ற கதிரைக்கு அனுப்பிய மக்களை மதித்து பிரச்சிணைகளை தீர்த்துவைக்க இதயசுத்தியுடன் போராடியவர்கள் யாருமில்லை என்பதே உண்மை.மரிச்சிக்கட்டியை வைத்து அரசியல் செய்யவும்,இறக்காமத்தை வைத்து அரசியல் செய்யவும் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்களும் அடிக்கு ஐம்பதாக இருக்கின்ற முஸ்லிம் சானக்கியர்களும் சத்தியவாங்களும் சாதித்தது என்ன ?

இனவாதம் தலைதூக்கி வருகின்ற நல்லாட்சியில் கேள்விகேட்க்க எந்த அரசியல்வாதியும் முன்வராதது முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற சாபமே தவிர வேறில்லை. முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கின்ற அதி முக்கிய காரியாலயங்கள் இனவாத அமைச்சர்களின் முயற்சியால் அவர்களுக்கு ஏதுவான இடங்களுக்கு போகின்ற போது அமைதியாக வேடிக்கைபார்க்கும் கூட்டமாகவே நாம் இருந்து வருகிறோமே தவிர உருப்படியாக எந்த நடவடிக்கைகளும் எடுத்த பாடில்லை என்பது எனது வாதமாகும்.

மஹிந்த ஆட்சியில் பொதுபலசேனா அமைப்பு சிறிதாக ஏதாவது பேசினாலே அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு தொலைக்காட்சியில், பத்திரிகையில் வாய்கிழிய விவாதம் செய்த கௌரவ முஜீப்ரஹ்மான்,மரிக்கார்,போன்ற ஐ.தே.கட்சி முக்கிய எம்.பிக்களும் இப்போதெல்லாம் பொதுபலசேனா அமைப்பினரின் செயலை பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்பது வேதனையான ஒரு விடயமே. பாராளுமன்ற கதிரையை சென்றடைந்த பின்னர் உங்களுக்கு பொதுபலசேனா அமைப்பினது செயல்கள் மறந்து விட்டதா ? அல்லது சிங்களம் மறந்து விட்டதா ? என கேட்க விரும்புகிறேன்.

வில்பத்து மக்களின் பிரச்சினையை நேரடியாக ஜனாதிபதியின் கவனத்திற்க்கு கொண்டுசென்று சரியான முடிவை அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் சு.கட்சி எம்.பி கௌரவ காதர் மஸ்தான் அவர்களை நினைக்கின்ற போது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

சிங்கள பேரினவாதிகள் புனித இஸ்லாத்தையும், உயிரைவிட  அதிகமாக நேசிக்கும் அல்லாஹ்வையும் நிந்தித்து பேசுகின்ற போது அதனை கேட்டும் கேளாமல் இருப்பதுக்கு பெயர் சானக்கியமில்லை கோளைத்தனம் என கூறிவைக்க ஆசைப்படுகிறேன். பேரின சக்திகளை ஆதரித்து இந்த நல்லாட்சி தொடர்ந்தும் பயனிக்குமானால் இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கும் சகல முஸ்லிம் எம்.பிக்களும் (முஸ்லிம் பெயரை உடையவர்கள் என்பதால் முஸ்லிம் என நம்புகிறேன்.) முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுக்களை இராஜினமா செய்துவிட்டு எதிரணியில் அமர்ந்து இந்த நல்லாட்சிக்கு முஸ்லிங்க்களை பகைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை உணர்த்த முன்வாருங்கள்.
இல்லாது அமைச்சுப்பதவியையே கட்டிக்கொண்டு அலைந்தால் மக்கள் உங்களை வீரமிகு ஆண்மகனாக மதிக்கமாட்டார்கள் நீங்கள் சல்வார் அல்லது சாரியுடன் பாராளுமன்றம் செல்லுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அபிவிருத்தியில் நாட்டை நல்லதொரு பாதைக்கு கொண்டுசென்ற மஹிந்த எனும் இராட்சத மன்னனை மண்கவ்வ செய்த முஸ்லிம் சமுகத்திற்க்கு உங்களை வீட்டில் உட்கார வைக்க நேரம் எடுக்காது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.உங்கள் கண்முன்னாடி பல உதாரணம் உள்ளதையும் நீங்கள் பார்க்காமலும் இல்லை.

உங்களது அமானிதங்கலான அமைச்சுப்பதவிகளுக்கு நீங்கள் மக்களிடம் பதில்சொல்லாமல் போனாலும் உங்களிடம்  அமானிதத்தை ஒப்படைத்த ஆணடவனுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்பதை பாராளுமன்றத்தை முஸ்லிம் உம்மத்தின் சார்பில் அலங்கரிக்கும்  அனைத்து எம்.பிக்களும் நினைவில் கொள்ளுங்கள். !!

கலைமகன் ஹுதா உமர்
தலைவர்,அல்மீசான் பௌண்டசன்
இலங்கை.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar