( ஐ. ஏ. காதிர் கான் )
கம்பஹா மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அலுவலகத்தினால், இவ்வருடத்திற்கான
(2017) வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் படிவங்கள், கம்பஹா மாவட்ட சகல கிராம
உத்தியோகத்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மினுவாங்கொடை
பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கும் இப்படிவங்கள்
தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப்
படிவங்களைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்கள், தற்போது வீடு வீடாகச் சென்று,
வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக,
மாவட்டத் தேர்தல் திணைக்கள அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யும் நடவடிக்கைக்கு, 1999 மே மாதம்
31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த சகலரும் உள்வாங்கப்படுவார்கள் என்றும்,
எனவே 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் வாக்காளர் இடாப்பில் பதிவு
செய்யப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பதிவு நடவடிக்கைகள் நாடாளாவிய ரீதியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment