நாட்டில் நடைபெறும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதலை அமெரிக்க தூதரகம் கண்டித்திருப்பதை
முஸ்லிம் உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் இதனை சகல முஸ்லிம் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும்
பகிரங்கமாக வர வேற்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது
அண்மைக்காலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற
வேண்டுமெனவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தனது
டுவிட்டரில் தெரிவித்துள்ளமை நொந்து போயிருக்கும் முஸ்லிம்களுக்கு
ஓரளவு ஆறுதல் தரும் விடயமாகும். அமெரிக்க தூதுவரின் இக்கண்டனம்
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் அதே வேளை முஸ்லிம்
நாடுகள் வெளிப்படையாக தமது கண்டனங்களை தெரிவிக்காமல்
இருப்பது கவலை தருவதாகவும் உலமா கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் இன்று வரை எந்தவொரு பயங்கரவாத செயல்களிலும்
ஈடு படவில்லை. ஒரு பௌத்த பன்சலைக்கேனும் கல் வீசியதில்லை.
பல தாக்குதல்கள் சிங்கள இனவாதிகளால் தொடுக்கப்பட்ட
போதும் இன்று வரை எதிர் தாக்குதல் நடத்தியதில்லை. அந்தளவுக்கு
பொறுமையாக இருக்கும் முஸ்லிம்களுக்கெதிராக அரச பின்புலத்துடன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது
கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த மஹிந்த அரசிலும்
இவ்வாறு சில தாக்குதல்கள் நடை பெற்றன. அது விடயத்தில் மஹிந்த
அரசு கண் மூடியிருந்தது. முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு ஒரு போதும் பெரு
வாரியாக வாக்களிக்கவில்லை என்பதற்காக மஹிந்த அரசு சிரத்தை எடுக்கவில்லை
என்பதைக்கூட ஒரு நியாயமாக ஏற்கலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினால்
கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துக்கு 98 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்தும் இத்தகைய
அநியாயங்கள் நடப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இந்த வகையில் இவற்றுக்கு
அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற அமெரிக்க தூதரின் கருத்தின்
மூலம் இப்பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம்
சமூகம் சாதகமாக பயன்படுத்த வேண்டுமாயின் அனைத்து முஸ்லிம் கட்சிகளும்
ஜமாஅத்துக்களும் அமெரிக்க தூதுவரை வெளிப்படையாக பாராட்ட முன் வர
வேண்டும்.
Post a Comment