BREAKING NEWS

ஞான‌சார‌ ப‌ற்றி வாய் திற‌ந்தார் ம‌ஹிந்த‌

சிங்களவர்களிடம் ஞானசாரர் முஸ்லிம்கள் பற்றி, நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார் - மஹிந்த

இலங்கை முஸ்லிம்களை சீண்டிப்பார்க்க ஆரம்பித்துள்ள ஞானசாரர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவருக்கு நெருக்கமான முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் சந்தித்த போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் எத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அப்துல் சத்தார், சேர் தற்போது ஞானசார தேரரின் செயற்பாடுகள் அத்துமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையில் கடந்த மூன்று நாட்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான ஏழுக்கும்மேற்பட்ட பாரிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்திகளை நானும் ஊடகங்களில் அவதானித்துவருகிறேன். முஸ்லிம்கள் அறியாதவாறு கூட பல விடயங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. எங்கள் காலத்தில் சிறிய விடயங்களையும் ஊதிப் பெருப்பிக்கவென்றே சிலருக்குகொந்தராத்து வழங்கப்பட்டது போன்று நாமும் வழங்கியிருந்தால் அவைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.ஞானசாரதேரர் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் மீதான நச்சுக் கருத்துக்களை விதைத்து வருகிறார். இதை நிறுத்தாதுபோனால் இலங்கை நாடு மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடலாம்.அதை செய்ய வேண்டியது நாம் அல்ல அதுஅரசாங்கத்தின் வேலை அதிகாரத்தில் இருப்பவர்களின் வேலை என பதில் அளித்துள்ளார்.

சேர் இவர்களது நோக்கம் எதுவாக இருக்கலாம்? இன்று இலங்கை அரசு வடக்கு, மற்றும் கிழக்குஇணைப்பு,அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளை செய்து வருகிறது.அவற்றுக்கு முஸ்லிம்களே தடையாகஉள்ளனர்.இவர்களை களமிறக்கி முஸ்லிம்களை அச்சமடையச் செய்து,கோழைகளாக்கி,அவர்கள் வாய்மூடியிருக்கும் தருணம் தங்களது விடயங்களை சாதிப்பது இவர்களது நோக்கமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறதுஎன பானதுறை பிரதேசசபை முன்னாள் தலைவர் முன்னாள் ஜனாதிபதியிடம் வினவினார்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி இருக்கலாம்..இருக்கலாம்.. இவற்றில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்கவேண்டும்.இவற்றை விட பெரிய திட்டங்களும் இருக்கலாம்.அன்று எனது ஆட்சியை கவிழ்க்கவே பொது பல சேனாகள மிறக்கப்பட்டது. மீண்டும் அவர்களது வருகை இவ்வாட்சியாலர்களின் தேவை ஒன்றை நிறைவு செய்வதற்காகவேஇருக்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என பதில் அளித்தார் .

அப்போது அங்கு முஸ்லிம் முற்போக்கு முன்ன்னி ஊடக செயலாளர் அஹமட் "சேர் நீங்கள் இதனை கட்டுப்படுத்தமுன் வர வேண்டும்.இவர்களை எதிர்க்கும் தைரியம் உங்களிடம் மாத்திரமே உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இலங்கை நாட்டை அமேரிக்கா போன்ற  சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது ஆட்சி செய்த துணிவு அதனைநிருபணமாக்குகின்றது என கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனை கட்டுப்படுத்த என்னால் எதுவெல்லாம் செய்ய முடியுமே அத்தனையையும் செய்ய தயாராகவுள்ளேன்.நான்முஸ்லிம்கள் தொடர்பில் கதைதால் அது அரசியல் லாபத்துக்கு என சிலர் விமர்சிக்க்கிறார்கள். இவர்களை நான்எனது ஆட்சிக் காலத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.அந்த தவறை விட்டமைக்கு இன்றும்வருந்துகின்றேன்.இன்று என்னிடம் எந்தவிதமான ஆட்சி அதிகாரங்களுமில்லை. நாங்கள் நடாத்திக் காட்டிய  மேதின மக்கள் திரளை கண்டு அஞ்சி எனது பாதுகாப்பையே குறைந்து எனது உயிருக்கு அச்சுறுத்தலைஏற்படுத்தியுள்ளனர்.இதனை வைத்து சிந்தித்தாலே இதனை என்னால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நீங்கள் மிகஇலகுவாக அறிந்துகொள்ளலாம் என பதிலளித்தபோது குறுக்கிட்ட அஹமட் சேர் நீங்கள் அப்படி கூறி நழுவ முடியாதுஉங்களுக்கு 30 வீதமான மக்கள் 2010 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர் நாமும் தொடர்ந்து உங்கள் கூடஉள்ளோம் என குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக,இன்றைய ஆட்சி அவ்வளவு உறுதியானதல்ல.எந்நேரத்திலும் கவிழலாம்.நாங்கள் தனித்து ஆட்சியமைக்க கூட சிறிதளவு ஆதரவே தேவைப்படுகிறது.இது பற்றி சிலஎதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு கதைக்க விரும்பவில்லை.இன்றுள்ள முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் அனைவரும் இவ்வாட்சியிலிருந்து வெளியேறினால் இவ்வரசின் ஸ்திரத் தன்மைகேள்விக்குட்படுத்தப்படும்.உடனடியான தனது படையை (ஞானசார தேரர்) இவ்வரசு மீளப் பெறும்.

எனது காலத்தில் எனக்கு வழங்கிய அழுத்தத்தில் நூறில் ஒரு பகுதியேனும் இவ்வரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்கவில்லை என அதனாலாயே ஞானசார குழு இன்று சுதந்திரமாக திரிகிறார்.காலம் செல்ல செல்ல முஸ்லிம்கள் இந்த நல்லாட்சியாளர்களின் சூழ்சிகள் பற்றி அறிந்துகொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar