பாராளுமன்ற உறுப்பினர்கள் நமது சமூக பிரச்சினைகளை பார்க்கின்றார்களா.?

நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் நமது சமூக பிரச்சினைகளை பார்க்கின்றார்களா.? அல்லது வேறு வேலை பார்க்கின்றார்களா..?

முஸ்லிம்கள் மக்கள்  வாக்குபோட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாருங்கள் பேசுங்கள் என்று அனுப்பிய வைத்தார்களா..?  அல்லது அரசாங்கம் தறும் அமைச்சி பதவிகளை கவனிக்கபடி அனுப்பிவைத்தார்களா.? என்ற கேள்வியை நமது சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்து பார்ப்பார்களா?

முன்பெல்லாம்  இனங்கிய அரசியல் செய்து கொண்டு அவர்கள் கொடுக்கும் பதவியை பெற்றுக்கொண்டு அந்தவேலைகளை கவனித்துக் கொண்டு "பார்ட்டைமாக" முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசிக்கொண்டும் இருந்தவர்களை நீக்கிவிட்டு, முழுநேரமும் முஸ்லிம்களை பற்றி சிந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை சட்டப்படி உரிமையோடு உரியவர்களிடம் பேசியும் கதைத்தும் பெற்றுக்கொடுப்போம் என்று வந்தவர்கள்,
இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்..?

நமது சமூகத்தின் வேலைகளை பார்க்கச்சென்றவர்கள் வேறு வேலையை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள், இவர்களுக்கு விடிந்து எழும்பினால் இருக்கும் நேரத்தில் எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், அரசாங்க வேலைகளை செய்வார்களா.? முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை யோசிப்பார்களா.?

முஸ்லிம்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை பெற்றுக்கொண்டு போய், ஊரான் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கா முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கபோகின்றது.

ஆகவே தனித்துவக்குரல் கொடுப்போம், முஸ்லிம்களின் பிரச்சினைகளைத்தான் இருபத்திநான்கு மணித்தியாலயமும் சிந்திப்போம் என்று கூறி முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுச் சென்று அதனை செய்யாமல் வேறுவேலைபார்க்கும் இந்த பச்சோந்திகளை இறைவன் மன்னிப்பானா.?
இவர்கள் எம் சமூகத்தை ஏமாற்றுகின்றார்கள் என்று தெறிந்தும் அவர்களுக்கு திரும்பத் திரும்ப வாக்களிக்கும் மக்களையும் இறைவன் மன்னிப்பானா? என்ற கேள்வியையும் முஸ்லிம் மக்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.

தன் சமூகத்தின் பிரச்சினைகளை சிந்திப்பதை " பார்ட் டைமாகவும்" அரசாங்கம் போடும் பதவி பிச்சைகளுக்காக "முழு டைமும்"  நேரத்தை செலவு செய்யும் நமது அரசியல்வாதிகளை இனம்காணாதவரை நமது முஸ்லிம் சமூகம் இனவாதிகளால் பந்தாடப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

"வேலி பலமாக இருந்தால்தானே வயலுக்குள் மாடுகள் வராது" என்பதுதானே உண்மை, ஆனால் இங்கே என்ன நடக்கின்றது என்று பாருங்கள் வேலி சாய்ந்து போய்கிடக்கின்றுது அப்படியென்றால் மாடுகள் வயலுக்கு வராமல் என்னசெய்யும் என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை நமது சமூகத்தை எல்லோரும் பந்தாடத்தான் வருவருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்