ஜனாதிபதி மைத்ரியுடன் உலமா கட்சி இணைந்திருந்தாலும்
அது அரியாசணத்தில்
உட்காரவில்லை என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
குறிப்பிட்டார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உயர் சபை உறுபினர்களுடனான
ஆலோசனைக்கூட்டத்தின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலமா கட்சி என்பது தனியான, தனித்துவமான
அரசியல், சமயம்
சார்ந்த கட்சியாகும்.
இப்படியான கட்சி இலங்கை வரலாற்றில் இதுவே முதலாவது என்பதால் பலருக்கும்
எம்மை பார்த்து வியப்பாக இருக்கிறது.
முஸ்லிம் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடு
அவசியம் என்பதை முதலில் வலியுறுத்திய கட்சி உலமா கட்சியாகும்.
சொல்லில் மட்டும் இராமல் செயலிலும் காட்ட வேண்டும் என்பதற்காக
அமைச்சர் ரிசாதின் தலைமையிலான அ.இ. மக்கள் காங்கிரசுடன்
முஸ்லிம் சமூக அரசியலுக்காக கூட்டிணைந்து செயற்படுகிறது.
கூட்டுக்கட்சி என்ற வகையில் தனித்து தீர்மானம்
எடுக்க முடியும் என்பதால் கடந்த மூன்று வருடங்களாக உலமா கட்சி
மஹிந்த அணியை பலப்படுத்தியது. மஹிந்த அணிக்காக ஒரு முஸ்லிமோ
மௌலவியோ பகிரங்கமாக பேச ஆதரவு வழங்க முன்வராத நிலையில் உலமா
கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இன்று மஹிந்தவுக்காக பேசும் பலரை
உருவாக்கிவிட்டுள்ளோம். முஸ்லிம் சமூகம் இப்போது பகிரங்கமாக மஹிந்தவை
ஆதரிக்க தொடங்கியமைக்கான காரணம் நாமே என்பதை உலகம் அறியும்.
அதே வேளை ஜனாதிபதி மைத்ரியின் அழைப்பை
ஏற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் மீண்டும்
இணைந்துள்ளோம். இக்கூட்டமைப்புடன் 2005 முதல் உலமா கட்சி
இணைந்து செயற்படுகிறது.
ஒரு முஸ்லிம் கட்சி தேசிய அரசியலில்
எவ்வாறு தனது தனித்துவத்தை காத்துக்கொண்டு தேசிய கூட்டணியில்
இணைந்து செயற்பட வேண்டும் என்பதையும் அதேவேளை தனது தனித்துவத்தை
காத்துக்கொண்டு முஸ்லிம் கட்சிகளுடன் எவ்வாறு சமூக நலனுக்காக
இணைந்து செயற்பட முடியும் என்பதையும் இந்த நாட்டில் முதலில் செயற்படுத்தி
காட்டி வருவது உலமா கட்சியாகும். இந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் நன்மைகளுக்காக
கடுமையாக உழைக்கும், முஸ்லிம் சமூகத்தின்
தேசியத்தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ள அமைச்சர்
ரிசாதின் கரங்களை பலப்படுத்துவதில் உலமா கட்சி திருப்தியுடன்
பிரதிபலன் எதிர் பாராமல் செயற்படுகிறது. இது விடயத்தில்
நாம் கட்சியின் நலனை விட சமூக நலனையே பார்க்கிறோம். அமைச்சர்
ரிசாதின் கட்சியில் இருக்கும் பலர் சமூக அக்கறையற்றவர்களாக, தாம் மட்டுமே
அனுபவிக்க வேண்டும் என்பவர்களாக இருந்த போதும் தமிழ், சிங்கள இனவாதிகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டே
தனது சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைச்சர்
ரிசாதை பலப்படுத்துவதில் எமது சமூக பொறுப்பை காட்டுகிறோம்.
இதே வேளை நாம் மைத்ரிக்கு ஆதரவு என்பதற்காக மஹிந்தவின்
கொள்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அதே போல் தனிப்பட்ட வகையில் அவரை
நாம் வெகுவாக மதிக்கிறோம். இந்த நாட்டின் யுத்த வரலாற்றை
முடிவுக்கு கொண்டு வந்த மாவீரர் அவர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுடன்
இணைந்துள்ள உலமா கட்சி முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு
ஜனாதிபதியுடன் இணைந்து தீர்வு காண முடியாதா என எமக்கு ஒரு போதும்
வாக்களிக்காத, ஒரு உதவியையேனும் செய்யாத பலர்
எம்மிடம் கேட்கிறார்கள். உலமா கட்சியை ஜனாதிபதி அழைத்து
இணைத்துக்கொண்டது அக்கட்சிக்கு வாக்கு பலம் உள்ளது என்பதற்காக
அல்ல. மாறாக உலமா கட்சியிடம் அறிவுத்திறமை, சமூக அக்கறை, சமூகத்துக்காக
துணிச்சலுடன் பேசும் போராட்ட குணம் போன்றவை இருப்பதன் காரணமாக
எம்மை அவர் கௌரவப்படுத்தியுள்ளார். இதனை சமூகம்
புரிந்து உலமா கட்சிக்கு பகிரங்கமாக ஆதரவளிக்கும் வகையில் கூட்டங்கள்
நடத்தினால் எம் பின்னால் மக்கள் திரள்வதற்காய் நிச்சயம் ஜனாதிபதி
எமது சமூக கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து தீர்வையும்
பெற்றுத்தருவார். அவ்வாறில்லாத பட்சத்தில் அரசுடன்
இருக்கும் ஏனைய பலம் உள்ள கட்சிகளுக்கே முன்னுரிமை
கொடுப்பார் என்பதுதான் யதார்த்தம்.
இருந்த போதும் முஸ்லிம் சமூகத்தில் மிகவும்
பிரபல்யமான உலமா கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிக்கும்
வகையில் ஜனாதிபதி அவர்கள் எமக்கு உதவுவார் என்ற நம்பிக்கை எமக்கு
உள்ளது. அவ்வாறு நடந்தால் எதிர் காலத்தில் ஐ. ம.
சுதந்திர கூட்டமைப்பை பலப்படுத்த எம்மால் முடியும். தனியொரு
கட்சியை ஆரம்பித்து எந்த மனிதனதும் உதவி இன்றி அதனை வளர்த்தெடுத்து
இன்று ஜனாதிபதியுடன் அக்கட்சியை வைத்த எமக்கு, அரசியல் பலம்
கிடைக்கும் பட்சத்தில் இதுவெல்லாம் பாரிய சவால் அல்ல.
இன்று நாம் ஜனாதிபதி மைத்திரியுடன்
இருந்தாலும் திறமை இருந்தும் வேலையில்லாத பட்டதாரிகள் போன்று திறமை
இருந்தும் அதிகாரம் கிடைக்காமல்
சமூகத்தின் சமூக வலையத்தளங்களில்
மட்டுமே நிற்கின்றோமே தவிர நாம் அரியாசனத்தில் உட்காரவில்லை
என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள்
இந்த யதார்த்தத்தை, உண்மையை
புரிந்து எம்மை ஆதரிக்கும் வரை நாம் மக்களோடு மக்களாக
நின்று அவர்களுக்காக குரல் எழுப்புவது மட்டும்தான் எம்மால் செய்ய
முடியுமான ஒன்று. அதனை நாம் நூறு வீதம் செய்து கொண்டிருக்கிறோம்
என தெரிவித்தார்.
Post a Comment