Kaleelur Rahman
----------------------------------------------------------------------------
அறிவு
ஆதிக்கம்
அபிவிருத்தி
அதிகௌரவமென
அறைகூவிக்கொண்டு ...
எம்மையும்
எம் மண்ணையும்
எம்மஸ் காரியப்பர் தொட்டு
எம்சி அகமதும் பட்டு
ஏயாறெம் மன்சூர் ஊடாய்
எம்மெச்சம் அஷ்ரப் வரை
எம்மை தலை நிமிர்த்தி
எழுச்சி பெற்று வாழச்செய்து ....
அழகுபார்த்த அந்தகாலம்
அரநாயக்க வானில் அன்று
அஸ்தமித்துப் போயே போச்சு
அஷ்ரப் அவர் மரணத்தோடு.
.......
"கட்சிக்காய் கோப்புச் சுமந்தேன்
என் நப்ஸ் அதனை கேட்கிறது,
எனக்கே அதைத் தாரும்" என்று
கெஞ்சி அழுது கூத்தாடி அந்த
கிரீடத்தை அபகரித்தான்,
கொடிய அரக்கன் அங்கு.
"கட்சிக்காய் டீக்கோப்பை சுமந்தேன்
உன்னை விஞ்ச, எனக்கு நெஞ்சுமில்லை
உனை எதிர்க்க, மண்டையில் மதியுமில்லை"
எனப் பிரமாணமும் செய்து கொண்டு
மகுடமமதை சூட்டிக்கொண்டான்,
மகா மக்கன் இவன் இங்கு.
மாமனிதன் மையத்தில் விழுந்த பூக்கள்
இரண்டு குரன்கின் கழுத்தில் பூமாலைகளாய்
இருவருமாய் சூடிக்கொண்ட
இரண்டாயிரம் ஆண்டுதொட்டு
இருண்டுவிட்ட கல்முனைத்தாய்
தனது மண்ணும் மக்களுமாய்
வெட்கித்து தலைகுனிந்து
வக்கற்று அழுது அலைகின்றாள்.
... ... ...
வா இளைஞனே வா..
கண் விழித்துக் கடினமாய் உழைத்து
தம் கண்ணென கல்முனையை
கட்டியமைத்து காத்து வந்த அந்த
எம் எஸ் காரியப்பரை அழைத்து வா
அன்று அவர் அக்கறையாய் கட்டித்தந்த
கல்முனை மாநகர சபை
கட்டிடத்தை இடித்துக் கட்ட,
எம்சி அகமதுவை அழைத்து வா
கல் எறிந்து 'அவனுக்கு' கச்சேரியில்
மண்ணோடு எம் மக்களின்
மனத்தைரியத்தை எடுத்துக் காட்ட,
ஏயாறெம் மன்சூரை அழைத்து வா
பதினேழு ஆண்டுகளாய் ஆண்டு அவர்
அள்ளித் தந்த அபிவிருத்திகள்
பட்டியலைப் படித்துக் காட்ட,
என் தலைவன் அஷ்ரபையும் அழைத்து வா
எமது உரிமை அபிவிருத்தி அபிலாஷை
என ஓங்கியொலித்து நாடாளுமன்றில்
எம்மக்களை முடிசூட்டி அழகு காட்ட,
....
எழு இளைஞனே!
இறுமாப்பாய்க் கிளர்ந்தெழு!!
எமது மடியிலே சிலை வைத்தும்,
எம் மண்ணுக்கே உலை வைத்தும்
இவருக்கு ஒன்றும் விளங்கவில்லை
இவர் தூக்கமின்னும் கலையவில்லை
ஊருக்கொரு எம்பி என்றும்
மண்ணுக்கொரு மைந்தன் என்றும்
மக்களை மக்கனாக்கி
மகுடம் அதை சூடிக்கொண்டு
பதினேழாண்டு தூங்கிவிட்டு
அதையும்தாண்டி தூங்குகின்ற
"அவனா நீ" அவரை,
அள்ளித் தண்ணீர் இறைத்து
அடித்து விரட்டி விடு
அம்பாறைக்கும் அதற்கும் அப்பால்.
எல்லாம் வல்ல
அல்லாஹ் துணை
எமக்கு என்று.
----------------------------------------------------------------------------
அறிவு
ஆதிக்கம்
அபிவிருத்தி
அதிகௌரவமென
அறைகூவிக்கொண்டு ...
எம்மையும்
எம் மண்ணையும்
எம்மஸ் காரியப்பர் தொட்டு
எம்சி அகமதும் பட்டு
ஏயாறெம் மன்சூர் ஊடாய்
எம்மெச்சம் அஷ்ரப் வரை
எம்மை தலை நிமிர்த்தி
எழுச்சி பெற்று வாழச்செய்து ....
அழகுபார்த்த அந்தகாலம்
அரநாயக்க வானில் அன்று
அஸ்தமித்துப் போயே போச்சு
அஷ்ரப் அவர் மரணத்தோடு.
.......
"கட்சிக்காய் கோப்புச் சுமந்தேன்
என் நப்ஸ் அதனை கேட்கிறது,
எனக்கே அதைத் தாரும்" என்று
கெஞ்சி அழுது கூத்தாடி அந்த
கிரீடத்தை அபகரித்தான்,
கொடிய அரக்கன் அங்கு.
"கட்சிக்காய் டீக்கோப்பை சுமந்தேன்
உன்னை விஞ்ச, எனக்கு நெஞ்சுமில்லை
உனை எதிர்க்க, மண்டையில் மதியுமில்லை"
எனப் பிரமாணமும் செய்து கொண்டு
மகுடமமதை சூட்டிக்கொண்டான்,
மகா மக்கன் இவன் இங்கு.
மாமனிதன் மையத்தில் விழுந்த பூக்கள்
இரண்டு குரன்கின் கழுத்தில் பூமாலைகளாய்
இருவருமாய் சூடிக்கொண்ட
இரண்டாயிரம் ஆண்டுதொட்டு
இருண்டுவிட்ட கல்முனைத்தாய்
தனது மண்ணும் மக்களுமாய்
வெட்கித்து தலைகுனிந்து
வக்கற்று அழுது அலைகின்றாள்.
... ... ...
வா இளைஞனே வா..
கண் விழித்துக் கடினமாய் உழைத்து
தம் கண்ணென கல்முனையை
கட்டியமைத்து காத்து வந்த அந்த
எம் எஸ் காரியப்பரை அழைத்து வா
அன்று அவர் அக்கறையாய் கட்டித்தந்த
கல்முனை மாநகர சபை
கட்டிடத்தை இடித்துக் கட்ட,
எம்சி அகமதுவை அழைத்து வா
கல் எறிந்து 'அவனுக்கு' கச்சேரியில்
மண்ணோடு எம் மக்களின்
மனத்தைரியத்தை எடுத்துக் காட்ட,
ஏயாறெம் மன்சூரை அழைத்து வா
பதினேழு ஆண்டுகளாய் ஆண்டு அவர்
அள்ளித் தந்த அபிவிருத்திகள்
பட்டியலைப் படித்துக் காட்ட,
என் தலைவன் அஷ்ரபையும் அழைத்து வா
எமது உரிமை அபிவிருத்தி அபிலாஷை
என ஓங்கியொலித்து நாடாளுமன்றில்
எம்மக்களை முடிசூட்டி அழகு காட்ட,
....
எழு இளைஞனே!
இறுமாப்பாய்க் கிளர்ந்தெழு!!
எமது மடியிலே சிலை வைத்தும்,
எம் மண்ணுக்கே உலை வைத்தும்
இவருக்கு ஒன்றும் விளங்கவில்லை
இவர் தூக்கமின்னும் கலையவில்லை
ஊருக்கொரு எம்பி என்றும்
மண்ணுக்கொரு மைந்தன் என்றும்
மக்களை மக்கனாக்கி
மகுடம் அதை சூடிக்கொண்டு
பதினேழாண்டு தூங்கிவிட்டு
அதையும்தாண்டி தூங்குகின்ற
"அவனா நீ" அவரை,
அள்ளித் தண்ணீர் இறைத்து
அடித்து விரட்டி விடு
அம்பாறைக்கும் அதற்கும் அப்பால்.
எல்லாம் வல்ல
அல்லாஹ் துணை
எமக்கு என்று.
Post a Comment