எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா? இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன். பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங்கிலாந்தை சேர்ந்தோரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் அமெரிக்கரும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால் அமெரிக்கர் தம்மை இங்க்லிஷ்காரர்கள் என அழைப்பதில்லை. இவ்வாறு பல உதாரணங்களை உலகில் காண முடியும். அதே போல் ஒரே மொழி பேசினாலும் மதம், கலாசார ரீதியில் தாங்கள் தனியான இன