கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (05. 04. 2017) காலை 09.45 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு நடைபெற்றது.
இச்சந்திப்பில் இராணுவ , கடற்படை, வான் படை நிறைவேற்று அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை பாதுகாப்பு படைகளிடமிருந்து மிட்டெடுக்கின்ற செயற்பாட்டில் தோப்பூர் 10 வீ ட்டுத் திட்டம், கருமலையூற்று, மூதூர் தக்கவா நகர் கடற்படை முகாம் போன்றவற்றோடு பாலமுனை படையினர் முகாம் இன்னும் பல இடங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது மேற்படி இடங்களை பொதுமக்கள் பாவணைக்காக விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

Post a Comment