BREAKING NEWS

யார் இந்த டயஸ்போராக்கள்....? அவர்கள் சாதிக்கும் விடயம் என்ன...?

யார் இந்த டயஸ்போராக்கள்....? அவர்கள் சாதிக்கும் விடயம் என்ன...?

தமிழர்களுடைய ஆயுத போராட்டம் நடத்திய காலத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பல வழிகளிலும் தும்புறுத்தப்பட்டோம்....!

எம்மை பாதுகாக்க யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிய காலங்களும் உண்டு...!

இன்று அதனையெல்லாம் மறக்கடித்து விட்டு, மஹிந்த காலத்தில் நடந்த அலுத்கம பிரச்சினைதான் என்றென்றும் முஸ்லிம்களின் மனதில் நிற்கவேண்டும் என்று, அழகான முறையில் காய்நகர்த்தி வெற்றியும் கண்டுவிட்டார்கள் இந்த டயஸ்போராக்கள்....!

முஸ்லிம்களுக்கென்று மீடியா ஒன்று இல்லாத காரணத்தினால் சக்தி ரீவியிடமும், வீரகேசரி பத்திரிகையிடமும் வேறுவழியின்றி தஞ்சம் அடைந்து கிடக்கும் நமது முஸ்லிம் சமூகம் , அவர்கள் தினந்தோரும் அடிக்கடி எதைக்காட்டி முஸ்லிம்களை உசிப்பேத்தவேண்டுமோ அதனை அடிக்கடி காட்டி முஸ்லிம்களை திசைதிருப்பி வெற்றியும் அடைந்துவருகின்றார்கள் இந்த டயஸ் போராக்கள்....!

அலுத்கமை பிரச்சினையை குறைத்து மதிப்பிட முடியாதுதான் அதே நேரம் அதற்கு முதல் நடந்த மாவனல்லை பிரச்சினை, புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்களின் பிரச்சின, இந்த அரசாங்கத்தில் நடந்து கொண்டுவரும் இனவாத முன்னெடுப்புக்களையெல்லாம் புரம் தள்ளிவிட்டு, அலுத்கம வேருவலை பிரச்சினைகளை மட்டும் முஸ்லிம் மக்கள் மத்தியிலே நிரந்தரமாக பதியவைத்து வெற்றி கண்டுவருபவர்கள்தான் இந்த டயஸ்போராக்கள்....!

தங்களுடைய போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய தங்களுடைய எதிரியான மஹிந்த ராஜபக்சவை,   முஸ்லிம்களும் எதிரியாக பார்க்கவேண்டும் என்று காய்நகர்த்தி அந்தவிடயத்தில்  வெற்றியடைத்தவர்கள்தான் இந்த டயஸ் போராக்கள்....!

இன்று முஸ்லிம்களுக்கு உயிர்ச்சேதத்தையும், உடைமைகள் சேதத்தையும் ஏற்படுத்தியது மட்டுமல்ல, இனசுத்திகரிப்பும் செய்த இந்த தமிழ் பயங்கரவாதிகளை, அன்றும் இன்றும் தட்டிக்கேட்காத தமிழ் தலைவர்களுடன், நமது முஸ்லிம் தலைவர்கள் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு, முஸ்லிம்களுக்கு நடந்த சோக சம்பவங்கள் ஒன்றுமே தெறியாதவர்கள் போல் அன்னியோன்னியமாக இப்போது பழகுவதற்கு பின்னாலிருந்து செயல்படுபவர்கள் இந்த டயஸ்போராக்கள்தான்...!

தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள், அல்லது சமஷ்டி தாருங்கள் என்கிறார்கள் போதாக்குறைக்கு ஐ.நா சபையிலும் இலங்கையை முன் நிறுத்தி கேள்வி கேட்கின்றார்கள், அப்படி இலங்கை அரசை ஆட்டிப்படைக்கும் தமிழர்களை கண்டிக்காமல், இந்த நாட்டுக்கு விசுவாசமாக என்றென்றும் இருந்துவரும் முஸ்லிம்களை, இந்த பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதிகள் ஏன் குறிவைக்கவேண்டும் என்று சிந்தித்தால், அதற்கு பின்னால் இருப்பதும் இந்த டயஸ்போராக்கல்தான்...!

புலிகளை அடக்கிவிட்டு 2010ம் ஆண்டு முஸ்லிம் மக்களிடம் மஹிந்த ராஜபக்ச வாக்குகேட்டு வந்தபோது, நமது முஸ்லிம் தலைவர் ஹக்கீம் அவர்கள் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு வேண்டிநின்றார். அவருடைய அந்த வேண்டுகோள் அந்த நேரத்தில் புரியாத புதிராகவே இருந்தது, அதற்கும் விடைதேடினால் அதற்கு பின்னால் இருந்து செயல்பட்டதும் இந்த டயஸ்போராக்கள்தான்...!

இன்றும் பல மட்டங்களிலும் தந்திரங்களை பாவித்து காய்நகர்த்தி வருபவர்களும் இந்த டயஸ்போராக்கள்தான்..!
உலகத்தில் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுவதில் வல்லவர்கள் யூதர்கள்தான்.,
அதற்கு அடுத்தபடியாக கடல் தண்ணியில் பணியாரம் சுடுபவர்கள் இந்த டயஸ்போராக்கள்தான்...!

அமெரிக்கா எப்படி யூதர்களின் திறமையறிந்து அவர்களை தங்கத்தட்டில் வைத்து அழகு பார்க்கின்றார்களோ, அதே போன்றுதான் இடம்பெயர்ந்த தமிழர்களையும் அரவணைத்து தங்கத்தட்டில் வைத்து அழகுபார்க்கின்றுது இதை எத்தனைபேர் அறிந்தார்களோ தெறியாது...?

இடம்பெயர்ந்த தமிழர்களின் "நாடு கடந்த தமிழீல அரசு" என்ற பேரவை அமெரிக்காவில்தான் இயங்குகிறது என்பதை யார்தான் அலட்டிக்கொள்வார்..?

ஆக முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் கொஞ்சமாவது கரிசனை எடுத்து இந்த விடயங்களை சிந்திக்கவேண்டும், அப்படி சிந்திக்காத பட்சத்தில் நமது பாடு கோவிந்ததாதான்...!

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar