ஞானசார ஜனாதிபதியை சந்திக்கலாம் என்றால்,
நமது முஸ்லிம் தலைவர்களால் ஜனாதிபதியின் செயலாளரைத்தான் சந்திக்க முடியுமா?
2017 மார்ச் 24ம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மரிச்சிக்கட்டி, கரடிக்குளி பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக அறிவிக்கும் 2011/34 வர்தமானி மூலமான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரி அவர்களினதும், இனவாதிகளினதும் நீண்டநாள் திட்டத்தின் ஒரு காட்சிதான் அந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.
இந்த நல்லாட்சி பதவிக்கு வந்து சில நாட்களில் வில்பத்து விடயம் பற்றி இனவாதிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது, அந்த நேரத்தில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நானும் மேலால் பறந்து சென்று பார்த்தபொழுது அது காடாகத்தான் எனக்கும் தெறிந்தது என்றும் கூறியிருந்தார்.
அந்த நேரம் நமது தலைமைகள் சுதாகரித்து இருக்கவேண்டும், ஆனால் அவர்கள் எறுமை மாட்டில் விழும் மழைநீரைப்போல் சும்மா இருந்துவிட்டார்கள்.
அதன் விளைவுகளே இன்று மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டிவிட்டது இந்த நல்லரசாங்கம்.
இந்த விடயம் சம்பந்தமாக ஞானசார அவர்கள் ஜனாதிபதியுடன் மூடிய அறைக்குள் முழுமந்திரம் ஓதி காரியத்தை சாதித்து விட்டார் என்றே கூறவேண்டும்.
நமது முழு மந்திரிகளும், அரை மந்திரிகளும் இதன் பாரதூரம் தெறியாமல் வாய்ச்சவாடல் விட்டுகொண்டும், கொக்கரித்துக் கொண்டும் தெறிந்தார்களே தவிர, ஆகுமான காரியங்களை உரிய நேரத்தில் செய்யத் தவறிவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.
வர்த்தமானி அறிவித்தல் ரஷ்ய நாட்டில் வைத்து ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்ட விடயம், ஆச்சரியமான விடயமாகவே கணிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இதற்குள் ஏதோ ஒரு மர்மம் உள்ளது என்பது மட்டும் தெளிவாகின்றது.
இருந்தாலும் இது சம்பந்தமாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் காட்டமான அறிக்கை ஒன்றை விட்டதுமல்லாமல், உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் வாங்குமாறு கூறுவேன், இல்லாது விட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கர்ச்சித்திருந்தார்.
அஸாத்சாலி அவர்கள் ஒரு படி மேலே சென்று ஜனாதிபதியிடம் விடயத்தை விளக்கிவிட்டேனென்றும் இதனை ஆராய்ந்துவிட்டு, அதில் தவறு நடந்திருந்தால் வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், ஆகவே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்து காரியத்தை கெடுத்து விடவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கு இது சம்பந்தமாக ஒன்றும் தெறியாதவர் போலும், இப்போதுதான் இவர்கள் அவருக்கு விளங்கப்படுத்துவது போலும், நமது அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் கூச்சமின்றி கூறும் விடயம், முழு பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கும் விடயமாகும்.
எப்படியிருந்தாலும், பல பேரை அழைத்துக்கொண்டு ரிசாட் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க சென்றார், ஆனால் சந்தித்ததோ ஜனாதிபதியின் செயளாலரைத்தான்.
அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாகமட்டுமல்ல, அந்தஸ்த்து உள்ள அமைச்சராகவும் இருந்து கொண்டு முக்கிய விடயத்தை பற்றி பேசுவதற்கு ஜனாதிபதியை சந்திக்க முடியாமல் போனது என்பது, நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு விடயமாகும்.
அதே நேரம் மு.காங்கிரஸ் தலைவராவது ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்த்தோம், அவரும் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து விட்டு, அவரும் அவரது பங்குக்கு அறிக்கைகளை விட்டு விட்டு ஓய்ந்து கொண்டார்.
இலங்கை ஜனாதிபதி நேரம் காலம் இல்லாமல் ஞானசார அவர்களை சந்திக்கலாம் என்றால், இந்த ஆட்சியை கொண்டுவர உதவிய நமது முஸ்லிம் தலைமைகளுக்கு ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கபபடாமல் இருப்பதென்பது, முஸ்லிம் சமூகத்தால் ஜீரணிக்கவே முடியாத ஒரு நிலையாகும்.
ஆகவே, இனவாதிகளின் அஜண்டாவுக்கு ஜனாதிபதி மைத்திரி அவர்கள் செயல்படும் விதத்தை, நமது அரசியல் தலைமைகள் கண்டும் காணாதது போல் நாடகம் ஆடுவதை கண்டு கவலைப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்.
அங்கே வடக்கிலே மரிச்சிக்கட்டி மக்கள் சத்தியாக்கிரகம் இருக்கின்றார்கள், இங்கே கிழக்கிலே இரு தலைவர்களும் கடைகள் திறப்பதிலும், மண்ணெல்லாம் மரவேர் என்றும் கூட்டம் போட்டு கூத்தடித்துக்கொண்டு திரிகின்றார்கள்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் விடயமாக வடக்கு மாகாணசபையில் கண்டன தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட்டுள்ளது,
ஆனால் முஸ்லிம்களின் ஆட்சி நடக்கும் முஸ்லிம் மாகாணமான கிழக்கு மாகாணத்தில் இது சம்பந்தமாக
ஒரு தீர்மானமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை.
இவர்கள்தான் முஸ்லிம்களுக்காக போராடவந்த உத்தமர்கள்.
அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் ரஜீப்,ஜே.ஆர் ஒப்பந்தமூலம் வடக்கையும் கிழக்கையும் இணைத்தபோது, அன்றிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே போல்தான் செயல்பட்டார்கள்.
அன்று அவர்களின் செயல்பாட்டை காரசாரமாக கண்டித்தது மட்டுமல்ல, இப்படியான பேசாமடந்தைகள் எமக்கு தேவையில்லை என்றும், சுதந்திரமாக செயல்பட்டு உரிமைகளை வென்றெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே எமக்கு வேண்டும் என்றும், கோசம் எழுப்பி மக்களின் வாக்குகளை பெற்றுவந்த முஸ்லிம் கட்சி தலைவர்களும் அவர்களைப் போன்றே செயல்படுவது கண்டு முஸ்லிம் சமூகம் வெட்கித்து தலை குனிவதை தவிர வேற என்ன செய்ய முடியும்.
ஆகவே மரிச்சிக்கட்டி விடயம் திட்டமிட்ட செயல்தான் என்பது பொதுமக்களாகிய எங்களுக்கு விளங்குகின்றது, ஆனால் பதவிக்கும் பட்டத்துக்கும் அடிமையாகி கிடக்கின்ற நமது முஸ்லிம் தலைமைகளுக்கு இந்த விடயம் தெறியாமல் இருப்பது என்பது மிகவும் மன வேதனையான விடயமாகவே உள்ளது.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

Post a Comment