அப்பம் திண்டிட்டு ஒருவர்
ஆப்பு வச்ச புள்ளியில்
செப்பமான கோலமாய் உருவெடுத்த நீங்கள்
குரங்கு திண்ட அப்பம்போல் - இப்பிடி
அலங்கோலமாகிக் கிடப்பதேன்..?
'அட்லஸ்' பேனையால் அவர்
சைனடிச்சு பதவியேற்றபோது -
ஏதோ பொருளாதாரத்தில் நாமெலாம்
'எவரெஸ்ட் சிகரம்' தொடுவோம் என்ற கனவு
மீத்தொட்டமுல்ல குப்பைமேடாய் சரிஞ்சி
பலநாளாச்சி...!
நீங்க ஆரம்பத்தில் கா(ஓ)ட்டிய
'நூறுநாள் வேலைத்திட்டம்'
என்ற படத்தை இப்ப நினைச்சா
விமல் வீரவன்சபோல்
கண்ட இடத்தில்
உண்ணாவிரதமிருக்கத் தோணுது...!
அப்படி நம்புறம் -
உங்க ஆட்சியில்
கட்டப்பா பாகுபலிய
ஏன் கொண்டான்னு தெரிஞ்சிடும் - ஆனா
தாஜுதீனை ஏன் கொண்டானுவள் என்று
தெரியாமலே போயிடும்..!
நீங்க வரணும்னு
'மடிச்சுக்கட்டிட்டு' நிண்ட நாட்டுமக்கள்
மறிச்சுக்கட்டி மக்களைப்போல்
இப்ப அனாதரவாகி நிக்கானுவள்...!
அப்பப்ப காணிய அபகரிச்சு
அதிலவொரு சிலைய வச்சி -
வடகொரிய ஜனாதிபதிபோல்
கண்டவனெல்லாம் சண்டியனாகிறான்
நீங்க என்னடான்னா
நம்ம முஸ்லிம் அரசியல்வாதிகள் மாதிரி
பார்லிமெண்டுல
'இஸ்ஸுவட' பொரிக்கிறீங்க...!
இத்தன வேதனையோட
காலைல 'பைக்குக்கு'
பெட்ரோல் அடிக்கப்போனா
உங்க மந்திரிசபை போல் நீண்டுகிடக்கு
'போலீன்'..!
மிஸ்டர் நல்லாட்சி..!
பேசாம
ஒட்சிசனுக்கு பதிலா
மீத்தொட்டமுல்ல குப்பைல இருக்கிற
மீதேன் வாயுவ சுவாசிச்சிட்டு
அப்படியே புஷ்வணமாகிடுங்களேன்...!
- இர்ஹாம் சேகுதாவூத்
Post a Comment