Skip to main content

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்ற சமூகம்

முஸ்லிம் என்று பெயரை வைத்துக்கொண்டால் தவரே செய்யமாட்டார்களா...?

முஸ்லிம் என்ற நாமத்தை வைத்துவிட்டால் எல்லா முஸ்லிம்களும் அவர்கள் செய்யும் செயல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் நாம் விடும் முதல் தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உலகத்தில் உள்ள அந்த அந்த இனங்களினதும், குழுக்களினதும் மக்களின் உணர்ச்சிகளை, இனம் மதம் என்ற அந்த நாமத்தை வைத்தே உசிப்பேத்தி லாபமடைந்தவர்கள் நிறையப்பேரை நாம் இனம்காணமுடியும்.

முஸ்லிம் என்றால் அவன் செய்வதெல்லாம் சரியென்று ஏற்றுக்கொள்பவர்களினால்தான் இப்படியான தான்தோன்றித்தனமான தலைவர்கள் மக்களை ஏமாற்றி லாபமடைகின்றார்கள்.

இப்படியான சுயலாப சிந்தனை உடையவர்களினால்தான் பல தீர்கப்படமுடியாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உதாரணத்துக்கு...
பலஸ்த்தீன் பிரச்சினை, ஈராக் பிரச்சினை,கஷ்மீர் பிரச்சினை என்று பல பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்தோமேயானால், அந்த பிரச்சினைகளுக்கு மூலவேறாக இருப்பது நமது முஸ்லிம் என்ற நாமத்துக்குள் ஒழிந்திருக்கும் இந்த குட்டிச்சாத்தான்கள்தான் என்பது புரியும்.

தனிநபர் ஆசைகள்தான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்திருக்கின்றன, முஸ்லிம் பேரரசுகள் அழிந்ததற்கும் தனிமனித ஆசைகளும், குடும்ப ஆதிக்கமும்தான் காரணமாக இருந்துள்ளன.

ஆகவே முஸ்லிம் என்றால் வாயைபிளந்து கொண்டு ஏமாறவேண்டிய அவசியமில்லை.
உலக வரலாற்றில் முஸ்லிம்கள் சகல இடங்களிலும் துன்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

சதாம் குவைத்தை பிடித்தது தன்னுடைய சுயநலத்தால்தான்,
அந்த செயல் தனக்கு விரோதமாக வந்தபோது முஸ்லிம்களுக்கும் சைத்தானுக்கும் நடக்கும் போர் என்று கதையை மாற்றினார் சதாம், அதன் பிறகு முஸ்லிம் மக்கள் அவருடைய கள்ளமான திட்டத்தை மறந்துவிட்டு முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவரை ஆதரித்தார்கள்...
அது எவ்வளவு அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுவருகின்றது என்பதை உலகமே அறியும்.

கடாபி லிபியா நாட்டை ஒருவகையான சிந்தனா போக்குடன் வழிநடத்திவந்தார், அவருடைய தவறுகளை மறைப்பற்காக, நான் முஸ்லிம்களுக்காக போராடுபவன் போன்று நடித்துக்கொண்டிருந்தார், அவர் முஸ்லிம் என்ற காரணத்தினால் உலக முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.
அதனை ஒரு கவசமாக பயன்படுத்திக்கொண்டு இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்தார் என்பதை யாரும் அறிய வாய்ப்பிருக்கவில்லை.

பாக்கிஸ்தான் பிரிவினை என்பதும் ஜின்னா என்ற தனிமனிதனின் ஆசையினால் நடந்ததேயாகும், அதன் வரலாற்றை ஆழமாக அறிந்துகொண்டால் அதன் பின் விளைவுகள் இன்றும் கிழக்காசியாவை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் உள்ளது.
சிலபேர் நினைப்பார்கள் பாக்கிஸ்தான் முஸ்லிம் நாடாக வந்தது நல்லதுதானே என்று, அதுதான் நாம்விடும் தவறு என்பதை புரிந்துகொள்ள முஸ்லிம் சமூகம் தவறிவிடுகின்றது.

காஷ்மீர் பிரச்சினைகூட முஸ்லிம் தலைவர்கள் விட்ட தவரினால்தான் ஏற்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெறியும் என்பது புரியாதவிடயம்தான், இன்றும் அங்கே ரத்தஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள நாம் தயாரில்லாத நிலையில்தான் உள்ளோம், காரணம் நாங்கள் முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்ற தப்பான என்னமேயாகும்.

ஆகவே, உலக வரலாற்றில் உத்தமர்கள் என்று கூறிக்கொண்டும், முஸ்லிம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டும் தங்களுடைய சுயலாபங்களை அடைந்துகொள்ளும் நயவஞ்சகர்களை இனம்கான முடியாமல் முஸ்லிம் சமூகம் தவிக்கின்றது.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்ற சமூகம் இருக்கும்வரைக்கும் நமது சமூகத்துக்கு விடிவே கிடைக்காது.

இலங்கை வரலாற்றிலும் இதுதான் நடந்து வருகின்றது, முஸ்லிம் என்ற நாமத்தை வைத்துக்கொண்டு, அரசியல் ஆதாயமடையும் சில பேர்களை நமது சமூக புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களும், போராட்டம் என்றால் என்னெவென்றே தெறியாத போராளிகள் சிலபேரும், முஸ்லிம் என்ற காரணத்தைக் காட்டி அந்த பச்சோந்தி அரசியல் வாதிகளை ஆதரிப்பதையும் நாம் காண்கின்றோம்.

இந்த நிலைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை ஆதாழ பாதாழத்தில் தள்ளவிடும்
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனலாம், உண்மையான முஸ்லிம் தலைவன் அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும், கியாமத்து நாளுக்கும் பயந்து விட்டான் என்று சொன்னால் அவன் மூலம் நிச்சயமாக சமூகத்துக்கு விடிவு கிடைக்கும், அல்லாது போனால், அந்த நாசகார சக்தியினால்தான் நமது சமூகம் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் என்பதே உண்மையாகும்

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…