நல்லாட்சி வந்தபின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மேலதிக பொலிஸ் பாதுகாப்பு உட்பட பல முக்கியஸ்ட்கர்களுக்கான பாதுகாப்புகள் ரத்துச்செய்யப்பட்டன. இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவின் பாதுகாப்பும் ரத்துச்செய்யப்பட்டிருந்தது.
கடந்த வருடம் அதாவுள்ளா ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொண்டார். ஆனாலும் அவருக்கான பாதுகாப்பு உட்பட வரப்பிரசாதங்கள் வழங்கப்படவில்லை. இம்முறை அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் மீண்டும் அதாவுள்ளாவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு அரச தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதனை தொடர்ந்து அதாவுள்ளா இம்முறையும் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான கண்டி மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.
Post a Comment