BREAKING NEWS

மாகாணத்தை ஆளுகின்ற முஸ்லிம் முதலமைச்சருக்கு இற‌க்காம‌ம் ஏன் தெரியாமல் போனது??


நல்லாட்சி அரசை நிறுவுவதில் அளப்பரிய பங்கை வகித்தவர்கள் முஸ்லிங்கள்.அதிலும் குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம்கள்.
எமது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் எமது தலைவர்கள் இந்த ஜனாதிபதியை கொண்டுவருவதட்க்கு தயங்கி பின்நின்ற போது அச்சமின்றி மௌனப்புரட்சியினால் இந்த ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் நாமே என்பதை ஜனாதிபதி அடங்கலாக சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க கடந்த ஆட்சியை கவிழ்த்து சில குழுக்கள் நன்மையடைய வேண்டிய தேவையை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுகொண்டு அவர்களின் தரகர்களாக கோஷமிட்டு ஒட்டிக்கொண்ட சில அரசியல்வாதிகளால் இந்த சமுகத்திற்க்கு எதனையும் பெற்றுத்தர முடியாது என்பதை நன்றாக அறிந்தும் நமது புத்திஜீவிகளும் பொது மக்களும் அவர்களின் தயவையும் அந்த‌க்க‌ட்சி இன்ன‌மும் ந‌ம‌க்கு வ‌ர‌ம் த‌ரும் என்றும் எதிர்பாத்திருப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என கேட்க விரும்புகிறேன்.
தயாவின் நிகழ்ச்சி நிரளுக்கு இயங்கும் ஐ தேக‌ த‌ர‌க‌ர்க‌ளான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அரசியல்வாதிகளிடத்தில் தயவை எதிர்பார்ப்பது மலடி வயிற்றில் குழந்தை எதிர்பார்ப்பது போன்றதாகும்.
இறக்காமத்தில் புத்த பெருமானின் வருகை நிகழ்ந்த போது அதனை தட்டிக்கேட்கவும், அநியாயத்தை எதிர்த்து குரல்கொடுக்கவும் முன்வந்த இளம் போராளிகளை நயவஞ்சகமாக சூட்சகமான பேச்சுக்களை பேசி அடக்கிவைத்தவர்களும் ,இந்த சிலை வைப்பின் மூலம் எந்த மதமாற்றமும் நடக்காது என்றவர்களும் இப்போது செய்வதறியாது நிற்பதை என்னவென்று சொல்வது ? இப்படியேல்லாம் நடக்கும் என எதிர்வு கூறிய அரசியல்வாதிகளையும்,புத்திஜீவிகளையும் வார்த்தைகளால் துவம்சம் செய்த போராளிகள் இதற்கு கொடுக்கப்போகின்ற பதில் என்ன?

 மாகாணத்தை ஆளுகின்ற முஸ்லிம் முதலமைச்சருக்கு இறக்காமம் தனது ஆட்சிக்கு உட்பட்டதுதான் எனது ஏன் தெரியாமல் போனது??
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைவர்கள் சகலரும் பிரதேசவாதங்கள் இல்லாது குரல் கொடுத்து சாதிக்க முடியுமாக இருந்தால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் முடியாது?
மு.கா பணம்பெற்றதன் பின்னர்தான் இந்த ஆட்சியை ஆதரித்ததாகவும்,அதனை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதாகவும் கௌரவ நாமல் ராஜபக்ஸ எம் பி அவர்கள் பேரின மக்களிடம் உரையாற்றும் அளவிற்க்கு நமது சமுகம் நாரிக்கிடக்கின்றது என்றால் கசப்பான உண்மைதான்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடம் பேரமாக பேசி தீர்த்து வைத்து அரசை நிறுவிய கட்சியும் அதனை சார்ந்த சமூகமும் இன்று செல்லும் பாதையை நோக்குகின்ற போது எதிர்வரும் காலங்களில் இந்த சமுகம் படப்போகின்ற அவலத்தை நன்றாக உணரக்கூடியதாக உள்ளது.

ஆட்சியாளர்களிடமிருக்கும் தமது கோப்புக்களுக்கும்,பணத்துக்கும்,கட்சிசார் உறுப்பினர்களின் பதவியாசைகளுக்குமே எமது தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள் என்பதுக்கு அரச ஊடகங்களிலும்,தனியார் ஊடகங்களிலும் ஒவ்வொருவராக மாறிமாறிக்கொடுத்த வாக்கு மூலங்களே போதுமானது. அல்லாஹ்வையும் ரசூலையும் மேடைகளில் பேசுகின்ற இவர்கள் ஒப்பந்தம் செய்கின்ற போது மறந்துபோகின்ற மர்மம் என்ன??
அல்லாஹ்வை பயந்து கொண்டு நாளைய கேள்வி கணக்குகளையும் நினைவில் கொண்டு,உங்களுக்கு அமானிதங்களை கையளித்த மக்களை மறக்காமல் அவர்களின் தேவைகளை இந்த ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க நமது அரசியல் வாதிகள் இனியாவது முன்வாருங்கள் என‌ ச‌மூக‌ம் வ‌லியுறுத்த‌ வேண்டும். இல்லாவிட்டால் இவ‌ர்க‌ளுக்கெதிராக‌ கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம் ஜ‌ன‌நாய‌க‌ரீதியில் வீதிக்கு இற‌ங்க‌ வேண்டும். முஸ்லிம்க‌ளை விற்று பிழைக்கும் முஸ்லிம் காங்கிர‌சுக்கெதிராக‌ ம‌க்க‌ள் ஒன்று திர‌ள‌ வேண்டும்..
வில்பத்து மக்களின் கண்ணீருக்கும், இறக்காம மக்களின் அச்சத்துக்கும்,கல்முனை மக்களின் அபிவிருத்தி ஏக்கத்துக்கும்,சாய்ந்தமருது மண்ணின் கனவுக்கும்,நுரைச்சோலை வீட்டின் கதவுகளுக்கும்,முதிர்கன்னிகளின் கண்ணீருக்கும்,பட்டதாரிகளின் குரலுக்கும் தீர்வு காண்ப‌தாயின் அன்று முத‌ல் இன்று வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌த்துக்காக‌ தைரிய‌மாக‌ குர‌ல் எழுப்பும் உல‌மா க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்துங்க‌ள் என‌ அழைப்பு விடுக்கின்றேன்.
அல்-ஹாஜ் ஹுதா உமர்
உல‌மா க‌ட்சி உய‌ர் ச‌பை உறுப்பின‌ர்.
மாளிகைக்காடு.😉😬😬

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar