மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று பகல் 1.30 மணிவரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அங்கு சென்றுள்ளார்.
இதன்போது பிரதேச மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமைச்சருடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்காருக்கு ஊ கூச்சலிட்டு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment