ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கும் உலமா கட்சியினருக்குமிடையில் இன்று நடந்த சந்திப்பை தொடர்ந்து ஐ.ம.சுதந்திர முன்னணிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் ஆதரவளிப்பது என முடிவு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கண்டியில் நடைபெறவுள்ள மேதினத்தில் உலமா கட்சியினர் கலந்து கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், இணைச்செயலாளர் இஸ்ஸதீன் பொருளாளர் அர்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment