முஸ்லிம்களின்
வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் என
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு
இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
திருகோணமலை
மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில்
இடம்பெற்ற மேதினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான
கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் மஸ்தான்.எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
கடந்த
காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12
வீதமாக காணப்பட்டது எனினும் தற்பொழுது 4 வீதமாக காணப்படுவதாக அமைச்சர்
தெரிவித்தார் எனினும் மீண்டும் நல்லாட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களை முஸ்லிம்கள் ஆதரிப்பதால் கட்சியின் வாக்குவீதம்
அதிகரிக்கும் சாத்தியங்கள் காணாப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும்
ஸ்ரீலங்கா சுதந்திரக்காட்சியை திருகோணமலை மாவட்டத்திலும் பலப்படுத்த
தேவையான நடவடிக்கைளை முன்னாள் முதலைமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான
நஜீப் ஏ மஜீத் அவர்களுடன் இணைந்து எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் தாம்
முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.
மஸ்தான் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி மாகாண சபை உறுப்பினர் நஜீப்
ஏ.மஜீத் உட்பட திருகோண மலை மாவட்டத்திலுள்ள அமைப்பாளர்கள், பிரதேச சபை
உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment