BREAKING NEWS

மஹிந்த ஐயாவை நினைவு கூறும் #முஸ்லிம் சமுதாயம்

****************

கடந்த தேர்தலில் மைத்திரியை நம்பி தான் யானை சின்னத்துக்கு முஸ்லிம்கள் வாக்கு அளித்தனர் வேறு ரனிலுக்காக அல்ல  என்பதை ஜனாதிபதி புரிந்து கொண்டு முஸ்லிம்களின் கானியான வில்பத்து கானியை அந்த மக்களிடம் கொடுக்க வேண்டும் 

இந்த நாட்டில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் செய்துள்ளனர் அதில் சிரித்துக் கொண்டு கண்களை பிடுங்கும் தலைவர் என்றால் அது ரனில் விக்கிரமசிங்க அவர்கள் என்பது முஸ்லிம் மக்களுக்கு தெரியும் அதனால்தான் பல தேர்தலில் அவரை முஸ்லிம்கள் தோல்வியடைய செய்தனர் இறுதியாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த மகனை ஜனாதிபதி யாக நியமித்து நாட்டில் நால்லாச்சி வரவேண்டும் என்பதற்காகவே மைத்திரியை நம்பி முஸ்லிம் சமுதாயம் யானை சின்னத்தை வரவேற்றார்கள் அது இன்று குற்றமாகி விட்டது கீழே விழுந்து கிடந்த யானையை தூக்கி எழுப்பியதும் காலால் மிதிக்கிறது தூக்கி எழுப்பியவனின் மார்பில் இனியும் இந்த யானை வேண்டாம் என்று  சிறுபான்மை மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர் அதனால் கஸ்டம் வந்தாலும் கட்டியனைத்த சுதந்திர நாயகன் மஹிந்தயின் ஆட்சியை முஸ்லிம்கள் நினைவு கூறுகின்றனர் 

இலங்கை அரசியல் வரலாற்றில் நாட்டில் இனவாதம் விகிதாசாரம் வெட்டுப் புள்ளி என்று பல திட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அடிமையாக வைத்து அரசியல் நாகர்வுகளை செய்து ஆட்சி செய்த கட்சி என்றால் அது ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைவர்களும் என்று தான் கூற வேண்டும் இந்த நிலையில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக  வாழ்ந்த மக்களை அலுத்கம என்னும் நகரம் திசை திருப்பியது அதனால் இன்று முஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் 

கடந்த அரசாங்க காலத்தில் இந்த நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தனர் அந்த நிலையிலும் நாட்டு மக்களின் மனநிலை அறிந்து பல அபிவிருத்தி பணிகளை செய்து மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து புரையோடி போய் இருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சகல இன மக்களுக்கும் சுதந்திர காற்றை கொண்டு வந்த சுதந்திர கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் என்றால் மிகையாகாது அந்த சிறந்த மனிதரை ஒரு நொடியில் மறக்க செய்த அலுத்கம சம்பவம் என்பது ஒரு சிலரின் திட்மிட்ட சதி என்று இப்போது தெரிய வந்துள்ளது அதனால் இன்று முஸ்லிம்கள் மஹிந்தயின் ஆட்சி வேண்டும் என்று விரும்புகின்றனர் அதனால் ஜனாதிபதி தனது நல்லாச்சியை நிலை நிறுத்தி மக்கள் ஆதரவை பெறுவது என்றால் ஆட்சி மாற்றம் வேண்டும் அதற்கு பிரதமாராக மஹிந்த ராஜபக்ச அல்லது சந்திரிக்கா அம்மையார் வரவேண்டும் 

இந்த நாட்டை சுதந்திர கட்சி  ஐக்கிய தேசிய கட்சி என்ற இரு பிரதான கட்சிகளுமே ஆட்சி செய்து வந்துள்ளனர் அதில் மக்களுக்கு ஏற்ப ஆட்சி செய்த கட்சி என்றால் அது சுதந்திர கட்சி என்று தான் கூற வேண்டும் அதனால் ஐக்கிய தேசி ய கட்சியின் தலைவராக ரனில் இருக்கும் வரை சிறுபான்மை சமுதாயம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை 

அத்தோடு கடந்த அரசாங்க காலத்தில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது அதனால் தமிழ் மக்கள் மஹிந்த மீது கோபம் கொண்டனர் மஹிந்தயை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு அலுத்கமயில் நாடகம் ஆடினார்கள் அதனால் முஸ்லிம்கள் மஹிந்த மீது கோபம்  கொண்டனர் ஆட்சி மாற்றம் நடைபெற்றது ஆனால் மஹிந்தயின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை முஸ்லிம் சமுதாயம் மறந்து விட்டது அதனால் அரசியல்வாதிகள் மக்களின் தீர்ப்புக்கு அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது அந்த நிலையின் தாக்கம்  தான் மானிக்கமடு வில்பத்து  பயிரிட முடியாத விவசாய காணிகள் இப்படி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியயுள்ளது இவைகளை சிந்தித்தால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தங்கம் என்று தான் கூற வேண்டும் 

கடந்த ஆட்சி காலத்தில் வட பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர் அதில் முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் தனது இருப்பிடத்தை விட்டு பலவந்தாமாக வெளியேற்றப்பட்டனர் அந்த மக்களை தனது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அயராத முயற்சி செய்தவர் அமைச்சர் றிசாத் அவர்கள் அதற்கு பக்க துணையாக முன்னாள் ஜனாதிபதி இருந்தார் அவர் மக்களின் வீடுகளில் வளர்ந்துள்ள அடர்ந்த காடுகளை அகற்றி அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் ஆனால் இன்றைய நல்லாச்சி வில்பத்து என்பது வனவிலங்கு பிரதேசம் என்று வர்த்தகமாணி அறிவித்தல் செய்துள்ளது என்றால் இதில் யார் நல்லவர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் 

கடந்த அரசாங்கம் இனவாத அரசியல் செய்தவதாக குரல் எழுப்பியவர்கள் இன்று பொட்டி பாம்பாக அடங்கி விட்டனர் நல்லாச்சி என்று சொல்லிக்கொண்டு நாடகம் ஆடும் ரனில் விக்கிரமசிங்க பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதற்கு மைத்திரியை சிறுபான்மை மக்களிடமிருந்து பிரிப்பதே இன்றைய அரசியல் நாடகமாகும் இந்த வலையில் முஸ்லிம்களை மாட்டி விடாமல் ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும் அப்படி செய்ய தவறும் பட்சத்தில் வெண்தாமரையை முஸ்லிம்கள் ஆதரிக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை 

சிறுபான்மை மக்களிடம் ஜனாதிபதியை குற்றவாளியாக காண்பித்து எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள திறைமறைவில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பதை முஸ்லிம் சமுதாயம் புரிந்து விட்டது ஆனால் ரனில் விக்கிரமசிங்கயின் உதவியுடன் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை அது தான் கவலை ஆனால் அவர்கள் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் 

மஹிந்த இனவாதி என்று மக்கள் கூறினார்கள் அவர்தான் இன்று முஸ்லிம்களின் காணி வில்பத்து என்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றார் அத்தோடு மஹிந்தயின் ஆட்சியில் நடக்காத காரியங்கள் நல்லாச்சியில் நடக்கிறது இனவாதம் தலைவிரித்து ஆடுகின்றது இவைகளை பார்த்தால் கடந்த காலத்தில் நடைபெற்ற இனவாத செயல்களுக்கு இந்த நல்லாச்சியின் தரகர்களே காரணமாக இருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் 

ஆகவே சுதந்திர காற்றை மக்களுக்கு கொடுத்த சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள்  முயற்சி செய்ய வேண்டும் அப்போது தான் மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ள முடியும் 

ஜெமீல் அகமட்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar