Skip to main content

Posts

Showing posts from April, 2017

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

யார் இந்த டயஸ்போராக்கள்....? அவர்கள் சாதிக்கும் விடயம் என்ன...?

யார் இந்த டயஸ்போராக்கள்....? அவர்கள் சாதிக்கும் விடயம் என்ன...? தமிழர்களுடைய ஆயுத போராட்டம் நடத்திய காலத்தில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பல வழிகளிலும் தும்புறுத்தப்பட்டோம்....! எம்மை பாதுகாக்க யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிய காலங்களும் உண்டு...! இன்று அதனையெல்லாம் மறக்கடித்து விட்டு, மஹிந்த காலத்தில் நடந்த அலுத்கம பிரச்சினைதான் என்றென்றும் முஸ்லிம்களின் மனதில் நிற்கவேண்டும் என்று, அழகான முறையில் காய்நகர்த்தி வெற்றியும் கண்டுவிட்டார்கள் இந்த டயஸ்போராக்கள்....! முஸ்லிம்களுக்கென்று மீடியா ஒன்று இல்லாத காரணத்தினால் சக்தி ரீவியிடமும், வீரகேசரி பத்திரிகையிடமும் வேறுவழியின்றி தஞ்சம் அடைந்து கிடக்கும் நமது முஸ்லிம் சமூகம் , அவர்கள் தினந்தோரும் அடிக்கடி எதைக்காட்டி முஸ்லிம்களை உசிப்பேத்தவேண்டுமோ அதனை அடிக்கடி காட்டி முஸ்லிம்களை திசைதிருப்பி வெற்றியும் அடைந்துவருகின்றார்கள் இந்த டயஸ் போராக்கள்....! அலுத்கமை பிரச்சினையை குறைத்து மதிப்பிட முடியாதுதான் அதே நேரம் அதற்கு முதல் நடந்த மாவனல்லை பிரச்சினை, புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்களின் பிரச்சின, இந்த அரசாங்கத்தில் ந

உல‌மா க‌ட்சியுட‌ன் ஒற்றுமைப்ப‌ட்டால் நிச்ச‌ய‌ம் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌ முடியும்.

பௌத்த‌ ம‌த‌ம் அகிம்சையை போதிக்கும் ம‌த‌ம் என்ப‌தும் இப்ப‌டி அட‌க்கு முறைக‌ளுக்காக‌ புத்த‌ர் சிலை வைக்க‌ கூடாது என்ப‌து பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ள் அறியாத‌ விட‌ய‌ம‌ல்ல‌. ஒரு கால‌த்தில் பௌத்த‌ ச‌ம‌ய‌ம் அர‌சிய‌லாக்க‌ப்ப‌ட‌வில்லை. ச‌ரியோ பிழையோ அர‌சிய‌ல் வேறு ச‌ம‌ய‌ம் வேறு என்ற‌ கோண‌த்திலேயே பார்க்க‌ப்ப‌ட்ட‌து. பௌத்த‌  ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுவ‌து அவ‌மான‌தாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து. ஆனால் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் உருவாக்க‌ப்ப‌ட்டு அத‌ன் யாப்பு குர் ஆன் ஹ‌தீத் என‌ ம‌க்க‌ள் முன் பொய்யான‌ மாயையை உருவாக்கிய‌து முத‌லே பௌத்த‌ இன‌வாதிக‌ள் விழித்துக்கொண்ட‌ன‌ர்.  அத்தோடு நின்று விடாம‌ல் ஹ‌க்கீம் த‌லைவ‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின் ச‌ந்திரிக்கா அர‌சாங்க‌ம் அவ‌ர‌து வில‌க்க‌ல் கார‌ண‌மாக‌ வீழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது, எங்க‌ளால் அர‌சை உருவாக்க‌வும் முடியும் வீழ்த்த‌வும் முடியும் என‌ முஸ்லிம் காங்கிர‌சால் வீறாப்பு பேச‌ப்ப‌ட்ட‌ போது பௌத்த‌ இன‌வாத‌ம் விழித்துக்கொண்ட‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ ஹெல‌ உறும‌ய‌ என்ற‌ அமைப்பு அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ தோற்ற‌ம் பெற்ற‌து. கொழும்பில் ஆயிர‌ம் சிலைக‌ளை திற‌ப்ப‌தே எம‌து இ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் தம்முடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பொருத்தமான பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வின் மேதின‌ கூ‌ட்ட‌த்துக்கு செல்வ‌தை ப‌கிஷ்க‌ரிக்க‌ வேண்டும்

பௌத்த‌ர்க‌ள் வாழாத‌ இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலையை வைத்த‌ த‌யா கம‌கே ம‌ற்றும் அத‌ற்கு துணை போன‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி ம‌ற்றும் முஸ்லிம் காங்கிர‌சைக் க‌ண்டிக்குமுக‌மாக முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வின் மேதின‌ கூ‌ட்ட‌த்துக்கு செல்வ‌தை ப‌கிஷ்க‌ரிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ள‌தாவ‌து கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளின் விகிதாசார‌த்தை குறைப்ப‌த‌ற்காக‌ ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி 1960 க‌ளிலிருந்தே முய‌ற்சி எடுக்கிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ளை மிக‌ப்பெரும்பான்மையான‌ மாவ‌ட்ட‌மாக‌ கொண்டிருந்த‌ அம்பாரை மாவ‌ட்ட‌த்துட‌ன் ப‌ல‌ சிங்க‌ள‌ பிர‌தேச‌ங்க‌ள் இணைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதே போல் அம்பாறையில் இருந்த‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வால் விர‌ட்டி அடிக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் காணிக‌ள் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. இன்று வ‌ரை அவை மு. காவால் பெற்றுத்த‌ர‌ முடிய‌வில்லை. இவ‌ற்றின் தொட‌ராக‌வே மாணிக்க‌ம‌டுவில் ஐ தே க‌ ம‌ற்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஆத‌‌ர‌வுட‌ன் புத்த‌ர் சிலை வைக்க‌ப்ப‌ட்டு முஸ்லிம்க‌ளை விர‌ட்டிய‌

அதாவுள்ளா ஜ‌னாதிப‌தி மைத்திரியுட‌ன்.

ந‌ல்லாட்சி வ‌ந்த‌பின் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கப்ப‌ட்டிருந்த‌ மேல‌திக‌ பொலிஸ் பாதுகாப்பு உட்ப‌ட‌ ப‌ல‌ முக்கிய‌ஸ்ட்க‌ர்க‌ளுக்கான‌ பாதுகாப்புக‌ள் ர‌த்துச்செய்ய‌ப்ப‌ட்ட‌ன. இத‌ன் கார‌ண‌மாக‌ முன்னாள் அமைச்ச‌ர் அதாவுள்ளாவின் பாதுகாப்பும் ர‌த்துச்செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் அதாவுள்ளா ஜ‌னாதிப‌தி மைத்திரியுட‌ன் இணைந்து கொண்டார். ஆனாலும் அவ‌ருக்கான‌ பாதுகாப்பு உட்ப‌ட‌ வர‌ப்பிர‌சாத‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. இம்முறை அது ச‌ம்ப‌ந்த‌மான‌ பேச்சு வார்த்தைக‌ள் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌தை தொட‌ர்ந்து ஒரு க‌ட்சியின் த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் மீண்டும் அதாவுள்ளாவுக்கு பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு அரச‌ த‌ர‌ப்பில் உத்த‌ர‌வாத‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னை தொட‌ர்ந்து அதாவுள்ளா இம்முறையும் ஜ‌னாதிப‌தி மைத்ரி த‌லைமையிலான‌ க‌ண்டி மே தின‌க்கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்வார் என‌ எதிர் பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

ஒலுவில் துறை முக‌த்தை மூடுவ‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை- உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்பு-

ஒலுவில் துறை முக‌த்தை மூடுவ‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாக‌ அமைச்ச‌ரும் ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் செய‌லாள‌ருமான‌ ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌ தெரிவித்துள்ள‌மையை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்றுள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் அமைச்ச‌ருக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்தில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து ஒலுவில் துறைமுக‌ம் என்ப‌து தூர‌ நோக்க‌ற்ற‌ திட்ட‌மாகும் என்ப‌தை அன்று முத‌ல் நாம் சொல்லிவ‌ருகிறோம். இத்திட்ட‌ம் கார‌ண‌மாக‌ ஒலுவில் பிர‌தேச‌ ம‌க்க‌ள் த‌ம‌து காணிக‌ளையும் வாழ்வாதார‌ங்க‌ளையும் இழ‌ந்தார்க‌ளே த‌விர‌ எந்த‌ வ‌ள‌த்தையும் காண‌வில்லை. அதே போல் இத்துறைமுக‌ ஏற்பாடு கார‌ண‌மாக‌ க‌ல்முனை க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ளும் ப‌ல‌ க‌ஷ்ட‌ங்க‌ளுக்கு முக‌ம் கொடுக்கிறார்க‌ள். மேற்ப‌டி துறைமுக‌ம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் உல‌மா க‌ட்சியால் அர‌சிட‌ம் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அந்த‌ வ‌கையில் அமைச்ச‌ரின் இந்த‌ முடிவை உல‌மா க‌ட்சி பாராட்டுவ‌துட‌ன் இத‌ற்காக‌ ஒலுவில் ம‌க்க‌ள் சார்பிலும் க‌ல்முனை க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ள் சார்பி

“முஸ்லிம்களது பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டு

++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  நாளை வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அம்மக்களது பிரச்சினைகள் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் அவ்வப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளன. அந்தவகையில், காணாமல் போனவர்களுக்கு நீதி கோரி நாளை வியாழக்கிழமை ‘வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினால்’  மேற்கொள்ளப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மேலதிகமாக முஸ்லிம் கட்சிகளான ஸ்ர

ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியது யார்

ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தை வழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார். இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் டபுள் ப்ரோமோஷன் வழங்கப்பட்டுள்ளது.நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர் அவரது வேலையை அரச உயர் மட்டத்தில் இருந்து தற்போது செயல்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது. மஹிந்த ராஜபச்ஷ காலத்தில் ஊர் ஊராக கத்தித் திரிந்தவர் இப்போது அரசாங்கத்தின் உயர் மட்ட கூட்டங்களில் பிரதான பாத்திரம் ஏற்று கலந்துகொள்கிறார்.அதிகாரிகளை மிரட்டுகிறார்.கட்டளையிடுகிறார்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் அவருக்கு முன்வரிசை வழங்கப்படுகிறது. மஹிந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அவரது கோரிக்கைகளும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.வில்பத்து விவகாரத்தில் இருந்த

உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தி மைத்ரி ம‌ற்றும் ஐ. ம‌. சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட‌ முடிவு.

ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் செய‌லாள‌ர் அமைச்ச‌ர் ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌ அவ‌ர்க‌ளுக்கும் உல‌மா க‌ட்சியின‌ருக்குமிடையில் இன்று ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை தொட‌ர்ந்து ஐ.ம.சுத‌ந்திர‌ முன்ன‌ணிக்கும் ஜ‌னாதிப‌தி மைத்ரிபால‌ சிறிசேனாவுக்கும் ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என‌ முடிவு எட்ட‌ப்ப‌ட்ட‌து. இத‌னை தொட‌ர்ந்து க‌ண்டியில் ந‌டைபெற‌வுள்ள‌  மேதின‌த்தில்  உல‌மா க‌ட்சியின‌ர் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ உறுதிய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ ச‌ந்திப்பின் போது ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியின் செய‌லாள‌ர் அமைச்ச‌ர் துமிந்த‌ திசாநாய‌க்க‌வும் உல‌மா க‌ட்சி சார்பில் அத‌ன் த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், இணைச்செய‌லாள‌ர் இஸ்ஸ‌தீன் பொருளாள‌ர் அர்சாத் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். 

மிஸ்டர் நல்லாட்சிக்கு...!

அப்பம் திண்டிட்டு ஒருவர் ஆப்பு வச்ச புள்ளியில் செப்பமான கோலமாய் உருவெடுத்த நீங்கள் குரங்கு திண்ட அப்பம்போல் - இப்பிடி அலங்கோலமாகிக் கிடப்பதேன்..? 'அட்லஸ்' பேனையால் அவர் சைனடிச்சு பதவியேற்றபோது - ஏதோ பொருளாதாரத்தில் நாமெலாம் 'எவரெஸ்ட் சிகரம்' தொடுவோம் என்ற கனவு மீத்தொட்டமுல்ல குப்பைமேடாய் சரிஞ்சி பலநாளாச்சி...! நீங்க ஆரம்பத்தில் கா(ஓ)ட்டிய 'நூறுநாள் வேலைத்திட்டம்' என்ற படத்தை இப்ப நினைச்சா விமல் வீரவன்சபோல் கண்ட இடத்தில் உண்ணாவிரதமிருக்கத் தோணுது...! அப்படி நம்புறம் - உங்க ஆட்சியில் கட்டப்பா பாகுபலிய ஏன் கொண்டான்னு தெரிஞ்சிடும் - ஆனா தாஜுதீனை ஏன் கொண்டானுவள் என்று தெரியாமலே போயிடும்..! நீங்க வரணும்னு 'மடிச்சுக்கட்டிட்டு' நிண்ட நாட்டுமக்கள் மறிச்சுக்கட்டி மக்களைப்போல் இப்ப அனாதரவாகி நிக்கானுவள்...! அப்பப்ப காணிய அபகரிச்சு அதிலவொரு சிலைய வச்சி - வடகொரிய ஜனாதிபதிபோல் கண்டவனெல்லாம் சண்டியனாகிறான் நீங்க என்னடான்னா நம்ம முஸ்லிம் அரசியல்வாதிகள் மாதிரி பார்லிமெண்டுல 'இஸ்ஸுவட' பொரிக்கிறீங்க...! இத்தன வேதனையோட கால

சு.க. மட்டு மாவட்ட புதிய அமைப்பாளர் சுபைருக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் காத்திரமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 7 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான இளம் அரசியல் வாதியான எம்.எஸ்.சுபைர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையான கட்சிக்கு பல நன்மைகளை ஈட்டித்தரு

மர்ஹூம் எம்.எச்.முஹம்மத் ; முதலாம் ஆண்டு நினைவு தினப் பேருரை கொழும்பில்

( ஐ. ஏ. காதிர் கான் ) முன்னாள் சபாநாயகரும், சவூதி அரேபியா ராபிததுல் ஆலமுல்  இஸ்லாமி - இலங்கைக் கிளையின் தலைவருமான மர்ஹூம் எம்.எச். முஹம்மதுவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொழும்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.    மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம், தேசிய நல்லெண்ணம் மற்றும் தெளிவுக்கான மன்றம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுகளை  ஒழுங்கு செய்துள்ளன.     இவ்விரு நிறுவனங்களின் தலைவராக மரணிக்கும் வரை ஆளுமையுடன் பணியாற்றிய மற்றும் இன, மத ஒற்றுமைக்கும் நல்லெண்ண செயற்பாட்டுக்கும் முனைப்புடன் சேவையாற்றிய அன்னாரின் நினைவாக புத்திஜீவி ஒருவரைக் கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய நிலையத் தலைவரும் முன்னாள் கொழும்பு மேயருமான எம். ஹுஸைன் முஹம்மத் தெரிவித்துள்ளார்.     இதேவேளை, சவூதி அரேபிய அரச அனுசரணையில் இஸ்லாமிய நிலைய ஏற்பாட்டில் உலக இஸ்லாமிய மகா நாடொன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     மர்ஹூம் எம்.எச். முஹம்மத், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலமானார் என்பது கு

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்ற சமூகம்

முஸ்லிம் என்று பெயரை வைத்துக்கொண்டால் தவரே செய்யமாட்டார்களா...? முஸ்லிம் என்ற நாமத்தை வைத்துவிட்டால் எல்லா முஸ்லிம்களும் அவர்கள் செய்யும் செயல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் நாம் விடும் முதல் தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். உலகத்தில் உள்ள அந்த அந்த இனங்களினதும், குழுக்களினதும் மக்களின் உணர்ச்சிகளை, இனம் மதம் என்ற அந்த நாமத்தை வைத்தே உசிப்பேத்தி லாபமடைந்தவர்கள் நிறையப்பேரை நாம் இனம்காணமுடியும். முஸ்லிம் என்றால் அவன் செய்வதெல்லாம் சரியென்று ஏற்றுக்கொள்பவர்களினால்தான் இப்படியான தான்தோன்றித்தனமான தலைவர்கள் மக்களை ஏமாற்றி லாபமடைகின்றார்கள். இப்படியான சுயலாப சிந்தனை உடையவர்களினால்தான் பல தீர்கப்படமுடியாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணத்துக்கு... பலஸ்த்தீன் பிரச்சினை, ஈராக் பிரச்சினை,கஷ்மீர் பிரச்சினை என்று பல பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்தோமேயானால், அந்த பிரச்சினைகளுக்கு மூலவேறாக இருப்பது நமது முஸ்லிம் என்ற நாமத்துக்குள் ஒழிந்திருக்கும் இந்த குட்டிச்சாத்தான்கள்தான் என்பது புரியும். தனிநபர் ஆசைகள்தான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்திருக்கின்றன, முஸ்லிம்

மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே !

மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே ! அதற்கான சன்மானமாக ...... மரிச்சுகட்டி முஸ்லிம்களை ஜும்மா தினத்திலேனும் குளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ள  நல்லாட்சி அரசு . மலையக முஸ்லம் கவுன்சில் தலைவர் – ஏ எம் எம் முஸம்மில்           மரிச்சுகட்டி முஸ்லிம்களின் மண் மீட்பு போராட்டம் கடந்த 26 நாட்களாக மரிச்சுகட்டி ஜும்மா பள்ளிவாயில் முன்றலில் நடந்து வருகின்றது. இப்போராட்டத்தில் நாடாளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்குமுகமாகவும், எல்லைகடந்த முஸ்லிம் சகோதரத்துவத்தை உறுதி செய்து மேற்படி போராட்டத்தில் கை கோர்குமுகமாகவும் மலையக முஸ்லிம் கவுன்சில் – (UCMC) கடந்த 21ந் திகதி வெள்ளிக்கிழமை மரிச்சுகட்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருன்தது. மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் முன்னாள் அதிபர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள், “  மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே ! அதற்கான சன்மானமாக இந்த  நல்லாட்சி அரசு மரிச்சுகட்டி முஸ்லிம்களை ஜும்மா தினத்திலேனும் குளிக

மாகாணத்தை ஆளுகின்ற முஸ்லிம் முதலமைச்சருக்கு இற‌க்காம‌ம் ஏன் தெரியாமல் போனது??

நல்லாட்சி அரசை நிறுவுவதில் அளப்பரிய பங்கை வகித்தவர்கள் முஸ்லிங்கள்.அதிலும் குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம்கள். எமது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் எமது தலைவர்கள் இந்த ஜனாதிபதியை கொண்டுவருவதட்க்கு தயங்கி பின்நின்ற போது அச்சமின்றி மௌனப்புரட்சியினால் இந்த ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் நாமே என்பதை ஜனாதிபதி அடங்கலாக சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க கடந்த ஆட்சியை கவிழ்த்து சில குழுக்கள் நன்மையடைய வேண்டிய தேவையை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுகொண்டு அவர்களின் தரகர்களாக கோஷமிட்டு ஒட்டிக்கொண்ட சில அரசியல்வாதிகளால் இந்த சமுகத்திற்க்கு எதனையும் பெற்றுத்தர முடியாது என்பதை நன்றாக அறிந்தும் நமது புத்திஜீவிகளும் பொது மக்களும் அவர்களின் தயவையும் அந்த‌க்க‌ட்சி இன்ன‌மும் ந‌ம‌க்கு வ‌ர‌ம் த‌ரும் என்றும் எதிர்பாத்திருப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என கேட்க விரும்புகிறேன். தயாவின் நிகழ்ச்சி நிரளுக்கு இயங்கும் ஐ தேக‌ த‌ர‌க‌ர்க‌ளான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அரசியல்வாதிகளிடத்தில் தயவை எதிர்பார்ப்பது மலடி வயிற்றில் குழந்தை எதிர்பார்ப்பது போன்றதாகும். இறக்காமத்தில் புத்த பெருமானின்

இன்னுமொரு குண்டை முகா மீது வீசியுள்ளார் நாமல் ராஜபக்ஷ.

அஷ்ரப் விட்ட இடத்தில் ரிஷாத் ! அஷ்ரப் விடாத இடத்தில் ஹக்கீம்!! (ஏ.எச். எம். பூமுதீன்) நோர்வே அரசிடம் முகா பணம் வாங்கியது என்ற குற்றச்சாட்டு அப்படியே இருக்கத்தக்கதாக, இன்னுமொரு குண்டை முகா மீது வீசியுள்ளார் நாமல் ராஜபக்ஷ. மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்தியா முகாவுக்கு பணம் வழங்கியது என்பதுதான் நாமல் போட்ட குண்டு. நாமலின் இந்த கருத்தை இலகுவில் விட்டுவிட முடியாது. நாமல் என்பவர் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர். அதனால் நாமலின் கருத்தை மஹிந்தவின் கருத்தாகவே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன், பகிரங்கமாக இந்திய பணம் வழங்கியது என்றும் கூறும்போது இதன் தாத்பரியம் ஹக்கீமுக்கு நன்றாகவே புரியும். நாமலின் கருத்துப்படி, மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்திய அரசு முகாவை ஆரம்பத்திலேயே பயன்படுத்த முனைந்துள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான போக்குடைய மஹிந்தவை வீழ்த்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்துள்ளது. இதட்க்கு, வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் எனும் கொள்கைகொண்ட  முகாவை வளைத்துப்போட்டு முஸ்லிம்களை இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க தூண்ட வைப்பதட்கே இந்திய அரசு குறித்த பணத்தை வழங்கியுள்ளது என்ற அ

ச‌ட்ட‌த்தின் அனும‌தியுட‌ன் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம்

ச‌ட்ட‌த்தின் அனும‌தியுட‌ன் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம் ந‌ட‌ந்த‌து ம‌ஹிந்த‌ ஆட்சியில்தான் ஆர‌ம்ப‌ம்  என‌ அர‌சிய‌ல் வ‌ர‌லாறு தெரியாத‌ சில‌ர் கூறுகிறாக‌ள். ம‌ஹிந்த‌ ஆட்சியில் ச‌ட்ட‌ம் பார்த்துக்கொண்டிருக்க‌ முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ ஒரேயொரு ச‌ம்ப‌வ‌மான‌ அளுத்க‌ம‌ ச‌ம்ப‌வ‌ம் ஒரே இர‌வில் விடிவ‌த‌ற்கு முன்ன‌ரே ச‌ட்ட‌ம் க‌ட்டுப்ப‌டுத்திய‌து. அத‌ற்கு முன்ன‌ரே க‌ட்டுப்ப‌டுத்தாத‌து த‌வ‌றுதான். ஆனாலும் வேறு ஊர்க‌ளுக்கு ப‌ர‌வாம‌ல் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இதை விட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ ச‌ட்ட‌ அனும‌தியுட‌ன் அத்துமீற‌ல்க‌ள் வ‌ர‌லாற்றில் ந‌ட‌ந்த‌ன‌. 90ல் பிர‌ம‌தாச‌ unp அர‌சின் அனும‌தியுட‌ன்  ச‌ட்ட‌ம் கை க‌ட்டி வாய் பொத்தி நிற்க‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ல‌ர் புலிக‌ளால் பிடித்து செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். இன்று வ‌ரை அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் இல்லை. அவ‌ர்க‌ள் பொலிசாரும் இராணுவ‌மும் பார்த்துக்கொண்டிருக்க‌ அவ‌ர்க‌ள் க‌ண் முன்பாக‌வே பிடித்துச்செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.  அதே போல் மாவ‌ன‌ல்லை க‌ல‌வ‌ர‌த்தை ச‌ட்ட‌ம் 2 நாட்க‌ள் பார்த்துக்கொண்டிருந்த‌து. 2001ல் வாழைச்சேனையில் ச‌ட்ட‌மும் நீதியும் வாய் பொத்தி

மஹிந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 21 சம்பவங்கள் இடம்பெற்றன.

கடந்த 10 வருட மஹிந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 21 சம்பவங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்று சேர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது. ஆனால், இந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு அதைவிட பேரிடி காணப்படுகிறது. நல்லாட்சி அரசு உருவாகி 3 வருடங்கள் நிறைவடையாத போதும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசில் 80 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பெடியே போனால் இந்த ஆட்சி நிறைவுக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக 500 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெறலாம். ஆனால், இது தொடர்பாக தமிழ் , முஸ்லிம் ஊடகங்கள் பேசுவதில்லை. காரணம், இந்த ஊடகங்கள் பெரிதும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுடன் இயங்குபவைகள் ஆகும். 1. 22.02.2015 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு  வந்து ஒரு மாதத்திற்குள் அவரது சொந்த தொகுதியான பொலன்னறுவையில்  50 இற்கும் மேற்பட்ட  முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்த ஒரு சிற்றூரான போகஹதமனயில் (அத்தமுனை மின்னேறிய செயலாளர் பிரிவு, இல.40 கிராம சேவைகள் பிரிவு)  ஒரு குர்-ஆன் மதரசா நடைப்ற்று வந்தது. இந்த மதரஸா எதிர்காலத்தில் பள்ளிவாசலாக மாற்றமடையகூடும் என

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும்

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்தி்ப்பொன்று இடம் பெற்றுள்ளது. வியாட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்தி்ப்பு ஹனோயில் அமைந்துள்ள ஹோட்டல் மிலீயாவில் இடம் பெற்றது. குறி்ப்பாக சீனா அரசாங்கம் இலங்கையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும்,எதிர்கால த்தில் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையின்  போது  பேசப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி சீற்றத்தினையடுத்து இம்மக்களது வாழ்வாதார மற்றும் அவசர தேவைகளுக்காக சீன கூட்டுறவு சங்கம் உதவியதாக சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் இதன்  போது சுட்டிக்காட்னார். இந்த மனிதாபிமான உதவிகளுக்காக தமது நன்றியினையும் ,இலங்கை அரசாங்கத்தின் நன்றியினையும் இதன்  போது அமைச்

மஸ்தான் எம் பியிடம் உருக்கமான கோரிக்கை

தமிழ் மக்களின் பிரச்சினையிலும் கவனம் செலுத்துங்கள் , மஸ்தான் எம் பியிடம் உருக்கமான கோரிக்கை . கெளரவமஸ்தான்அவர்களே , நான்வவுனியாவைபிறப்பிடமாககொண்டவன் . கடந்தபொதுத்தேர்தலில்தங்களுக்கே வாக்களித்தவன் . அதேபோன்றுமாகாணசபைத்தேர்தலில்தமிழ்த்தேசியகூட்டமைப்பில்போட்டியிட்டவிக்னேஸ்வரன் ஐயா , முதலமைச்சராகவரவேண்டுமென ஆசைப்பட்டுஅவரின்வெற்றிக்காகஉழைத்தவன் . ஏனெனில் அபிவிருத்தி ஒரு புறம் இருக்க தமிழர்கள் இழந்த உரிமையை பெறவேண்டுமென்பதே எனது ஆசையாகும் . தேர்தலில்புதுமுகமாகஇருந்ததாலும்வவுனியா மண்ணைச்சேர்ந்தவராக , நீங்கள்இருந்ததாலுமே , எம் . பியாகிதமிழ்ப்பிரதேசங்களுக்குஏதாவதுசெய்வீர்கள்என்ற நம்பிக்கையிலேயேமதவேறுபாடுகளுக்குஅப்பால்மொழியால்ஒன்றுபட்டுஇருந்த காரணத்தால்உங்களுக்குவாக்களித்தேன் . அனால்தேர்தல்முடிந்துசுமார்இரண்டுவருடங்களாகியும்வவுனியாமாவட்டத்திற்குகுறிப்பாகதமிழ்ப்பிரதேசத்துக்குஉங்கள் சேவை கிடைக்கவில்லைஎன்பதைமிகவும் மனவேதனையுடன்தெரிவிக்கின்றேன் . பத்திரிகைகளில்மட்டும்உங்கள்அறிக்கைகளையும் , பேச்சுக்களையும்பார்க்கின்றோம் . “ மாவட்டஅபிவிருத்திகுழுவில்இணைத்தலைவரா

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய