Skip to main content

. திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும்- Minister Hakeem

பிறவ்ஸ்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், நேற்றிரவு (14) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சர்ச்சைகளாக இருக்கின்ற பிரச்சினைகளுக்கு அப்பால், தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதலில் இனம்கண்டு அவற்றைத் தீர்க்கவேண்டும். அதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்வுகாண்பது என்பது தொடர்பில் முதலில் கவனம் செலுத்தவேண்டும். வறுமை காரணமாகவே அதிகளவில் இளவயது திருமணங்கள் நடக்கின்றன. அதனை நிவர்த்திக்கும் வழிமுறைகளை தேடவேண்டும் என்று குறிப்பிட்டார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த திருத்தங்கள் ஷரீஆ சட்டத்துக்கு முரண்படாத வகையில் இருந்தால் மாத்திரமே, அதற்கு அனுமதியளிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக உலமா சபை இதன்போது சுட்டிக்காட்டியது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் கட்டாயம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சில மகளிர் அமைப்புகள் சார்பிலும், சில பெண்ணியல் செயற்பாட்டாளர்கள் சார்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையிலும், உலமா சபை மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் விடயங்களை தெளிவுபடுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணமொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உலமா சபையினால் கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் உலமா சபை மேற்கொள்ளவுள்ள திருத்தங்களை அரசியல்வாதிகள் மூலம் அரசாங்கத்துடன் பேசுவதற்கும், மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கும் தீர்மானித்துள்ளதாக உலமாசபை பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த திருத்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் பேசுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உலமா சபை கோரிக்கை விடுத்தது.
திருமண வயதெல்லையில் கட்டுப்பாடு, பெண் காதிகளை நியமித்தல், பெண் பதிவாளர்களை நியமித்தல், ~வலி| இல்லாமல் பெண்ணின் விருப்பத்துடன் திருமணம், பலதார திருமண கட்டுப்பாடு போன்றவற்றை தனியார் சட்டத்தில் திருத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

திருமண வயதெல்லை என்ற விடயத்தில், பருவமடைந்ததும் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதித்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் முடிப்பதற்கு தடை என்று நிபந்தனை விதிக்காமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருமணம் முடிக்கலாம் என்று சிபார்சு செய்யப்பட்டது. இதேவேளை, பராமரிப்பதற்கு ஆளில்லாதவர்கள், சொத்துகளை கையாள்வதற்கு உரிய வயதை அடையாதவர்கள் என்று 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் முடிப்பதை தடைசெய்ய முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

2011 – 2016 வரையான காலப்பகுதியில் 14,737 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 5 சதவீதமானோர் மாத்திரமே 17 வயதுக்குட்பட்ட வயதில் திருமணம் முடித்துள்ளனர். வடக்கிலிருந்து புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்வோர் அதிகளவில் இருப்பதினாலும், வறுமை காரணமாகவுமே அப்பகுதியில் அதிகளவில் இளவயது திருமணங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டன. அதேவேளை, இலங்கையில் ஒரு நாளைக்கு 16 வயதுக்கு குறைந்த 6 பேர் சராசரியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக புள்;ளிவிபரங்கள் கூறுகின்றன.

அத்துடன், பெண்கள் தரப்பு பிரச்சினைகளை முன்வைப்பதற்காக காதி நீதிபதிகளுக்கு துணையாக பெண்களை நியமித்தல், பள்ளிவாசல்களை அண்டியவாறு திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு மத்திய நிலையத்தை ஸ்தாபித்தல், தலாக் சொல்லப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், திருமண பதிவாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் போன்ற பல கோரிக்கைகள் உலமா சபையினால் முன்வைக்கப்பட்டன.
மகளிர் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக ஜம்இய்யத்துல் உலமாவில் விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் விவாகம் மற்றும் விவாகரத்தினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பிரிந்துபோகவிந்த பெண்கள் பலர் அவர்களது கணவன்மாருடன் சேர்த்துவைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…