ஹசன் அலியின் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்கத் தயார் - கல்முனை ஜவாத்https://www.facebook.com/kalasemnet/ 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும், அதன் உச்சபீட உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எம்.அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்) அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியாக செயல்படும் அதன் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலியுடன் இணைந்துகொள்ளப்போவதாக கசிந்த சில செய்திகள் தொடர்பாக கலசம்.கொம் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களை தொடர்புகொண்டு வினவியது.
அதற்கு அவர்...... 

ஹசன் அலி விவகாரமானது, நேற்று முன்தினம் நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியில் ஹசன் அலி தமது பேச்சில், அவர் வேறு எந்த அணியுடனும் இல்லை என்ற அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார். அவரின் இந்த நிலைப்பாட்டை நான் வரவேற்கின்றேன் 

ஆனால்,
நியாயபூர்வமாக பாதிக்கப்பட்ட ஹசன் அலியின் நியாங்களை, நியாயபூர்வமற்ற ஒரு அணியானது தமது கைகளுக்குள் கொண்டுவந்து, அவர்கள், தாம், நியாயவாதிகள் என்பதை நிரூபணம் செய்ய முயற்சிக்கின்றனர். என்பதை அக்கூட்டமானது வெளிக்காட்டியிருந்தது.

ஹசன் அலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்ற விவகாரத்தை நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கும் ஒருவனாகவே நான் இருந்து கொண்டிருக்கின்றேன்.

எமது கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் செயலாளர் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த சமயங்களிலெல்லாம், அவர் சார்பாக வாதாடும் தனியொருவனாக நான் மட்டுமே இருந்துவந்துள்ளேன். அதற்கு காரணம் அவர்  மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து இக்கட்சியை உருவாக்க பாடுபட்டவர்களில் ஒருவர் என்பது மட்டுமல்லாது, தலைவரின் மறைவுக்குப் பின் கட்சியின் அடிப்படை கொள்கைகளை காக்கும் பணிகளை செய்தவர்களில் பிரதானமானவராகவும் காணப்படுவதாகும்

கட்சியின் நடவடிக்கைகள் மீளமைக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்துக்கள் இல்லை.

ஏனெனில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆனது இலங்கை முஸ்லிம்களுக்காக தூய்மையானவர்களால், தூயமையான சிந்தனைகளுடன் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இந்தக் கட்சியில் இருந்து வெளியேறி யாராவது இக்கட்சியை அளிக்க நினைத்தால் அது பகல் கனவாகவே அமையும்.

ஆனபடியால் ஹசன் அலி அவர்கள் இந்தக் கட்சிமீது உண்மையான பற்றுறுதியுடையவராக இருந்தால், அவர் இக்காட்சியை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு துணைபோய்விடக்கூடாது. என்பதுடன் இக்கட்சியின் வரம்புக்குள் இருந்துகொண்டு, இக்கட்சியின் மீட்புப் புரட்சியில் ஈடுபடுவாரேயானால் அவரது போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்க நான் எப்போதும் சித்தமாகவே உள்ளேன்.என்றார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்