முஸ்லீம் காங்கிரஸ் கொள்கை அடிப்படையற்ற கட்சி

 
முஸ்லீம் காங்கிரஸ் கொள்கை அடிப்படையற்ற கட்சி என்று நன்றாக தெரிந்தும் தனிமனித மற்றும்  மக்கள் மூளைச்  சலவை மூலம் பாதிக்கப் பட்டு  செல்வாக்கு முறையில்தான்  கிழக்கின் முஸ்லிம் களிடையே ஆதரவு பெற்றுள்ளது . தற்போதுள்ள கிழக்கு முஸ்லிம்களின் அரசியலில் குளப்பம், குளறு படி ,தில்லு முள்ளு , மக்கள் தலைமை மீது  திருப்தி  இன்மை என்பன துளிர் விட்டுள்ள காரணம் அதுவே.கிழக்கில் முஸ்லிம்கள்  படித்த பல மக்கள் இருந்தும் இக் கால நவீன யுகத்தில் இன்னும் அரசியல் அறிவில் பரிதாப நிலையில் தான் உள்ளனர் .  மக்களால் விரும்பப் படாத ஒரு கட்சித் தலைமையை வீழ்த்த வேண்டும் என்றால் வேற்றுக் கட்சிக்கோ அல்லது தனிப் பட்டவர்களுக்கோ வாக்களித்து வெற்றி பெற வைப்பதன் மூலம் அக் கட்சி தலைமையை மிக இலகுவில் செல்வாக்கு இழக்கச் செய்ய முடியும் . இல்லாவிடின் கிழக்கு முஸ்லீம் மக்களின் முதுகில் ஏறி தான்   நினைத்தபடி மேற்கு   நோக்கி   சவாரி செய்வார்  . இங்கு நீங்கள் நோக்க வேண்டிய தலைமையினால் கூறப் படும் முக்கிய சாக்கு அதாவது கிழக்கு முஸ்லீம் அரசியல் வாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை , மேலும் தன்னைப் போல் திறமையான நேர்மையான அரசியல் வாதிகள் கிழக்கு முஸ்லிம்களில் இல்லை. இவ் வகையான  கேவலமான தலைமயின் கருத்து  உங்கள் பிரதேசத்தை அவமானப் படுத்துவது அல்லவா , சிந்தியுங்கள். கிழக்கு முஸ்லிம்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் புறப் பட வேண்டும். 

இந்தியாவில் கொடி கட்டிப் பறந்த தி மு க  அதன்  தலைவர் கருணா நிதியின் பிடியில் சிக்கி இருந்தது , அவரது சர்வாதி காரப்  போக்காள்  மக்கள் அபிதிருப்தியை பெற்றார் , ஆனால் கட்சி என்ற அடிப்படையில் அக் கட்சிக்கு  மக்கள் வாக்கு அளித்தனர் . இதை உடைத்து எறியப் புறப் பட்டவர்தான் எம். ஜி. ஆர் , மக்கள் படை  திரண்டது .தி மு க வின்  சர்வாதிகார தலைமை வீழ்ந்தது.  அக் கட்சியும் செல்வாக்கு இழந்தது .

இதை நாம் ஒரு பாடமாக எடுத்து செயல் பட் டால் அன்றி கிழக்கு முஸ்லிம்களுக்கு அரசியலில்  விமோசனம் இல்லை.   இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்