ஹஜ்ஜுக்கு செல்வோர் தம்மை பதிவு செய்வதற்காக இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்து தம்மை பதிவு செய்ய வேண்டுமென்ற சட்டத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டு வந்துள்ளமை ஹஜ்ஜின் பெயரிலான அரசின் கொள்ளையடிப்பும் ஹாஜிகளின் பணத்தை வைத்து வட்டி பெறுதலுமாகும் என உலமா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது
கடந்த ஆட்சியின் போது ஹாஜிகள் தமது பெயரை பதிவு செய்ய இருபத்தையாயிரம் ரூபா வங்கியில் இட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை உலம கட்சி மட்டுமே கடுமையாக எதிர்த்தது. ஆயிரம் பேர் இருபத்தையாயிரம் ரூபாய் வீதம் செலுத்தும் போது சேரும் இருபத்தைந்து லட்ச ரூபாவை அரசு வங்கிகளில் இட்டு வட்டி மூலம் பணம் ஹராமான சம்பாத்தியத்துக்கு ஹஜ்ஜுக்கு செல்வோர் துணை நிற்பதாக முடிகிறது நாம் சுட்டிக்காட்டினோம். அதனைத்தொடர்ந்து இச்சட்டம் நீக்கப்பட்டது.
தற்போது வந்த நல்லாட்சி மீண்டும் ஹாஜிகளின் பணத்தை கொள்ளையடிக்கவும் ஹாஜிகளை வட்டிக்கு உதவும் பாவத்தில் சேர்த்து விடவும் மீண்டும் இச்சட்டத்தை முஸ்லிம் சமய விவகார அமைச்சு மூலம் கொண்டு வந்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். இஸ்லாம் கற்ற உலமாக்கள் பாராளுமன்றம் சென்று ஒரு மௌலவி மேற்படி அமைச்சராக இருந்திருந்தால் நிச்சயம் இச்சட்டத்தை கொண்டு வர இடமளித்திருக்க மாட்டார்.
இதன் மூலம் உலமாக்களின் பாராளுமன்ற பிரவேசத்தின் அவசியத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே ஹஜ்ஜுக்காக பதிவு செய்யும் போது கட்டணம் அறவிடுவது முற்றாக நீக்கப்படுவதுடன் கிராம சேவகரின் அத்தாட்சியுடன் இலவசமாக பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வரும்படி அரசை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Post a Comment