Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

முஸ்லீம் காங்கிரஸ் - குடும்ப ஆதிக்கத்துக்குள்

ஹஸனலி, பஷீர் கட்சிக்கு வெளியில்!
குடும்ப ஆதிக்கத்துக்குள் மு. கா!!

ஏ. எச்.எம். பூமுதீன்

முஸ்லீம் காங்கிரஸ் - குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்குண்டுள்ளதாக கட்சியின் உயர்மட்ட பிரமுகர்களால் கடும் தொனியில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஹஸனலி, பஷீர் போன்றோர் கட்சியில் இருந்து வெளியேட்டப்பட்டதன் பின்பு இந்த நிலை மோசமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஹக்கீம், அவரது சகோதரர்கள், அவரது நண்பர்கள், மச்சான் என அந்த குடும்ப ஆதிக்கம் விரிவடைவதாக கட்சி பிரமுகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கண்டியில் அண்மையில் இடம்பெட்ட கூட்டமும் கலந்தாலோசனை இன்றி திடீரென குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

'இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெறுவது என்றால் , எம்பீக்கள், உயர்பீட உறுப்பினர்கள் என கலந்துரையாடப்படும். அந்த நிலை இப்போது இல்லை.

ஹஸனலி, பஷீர் போன்றோர் கட்சியில் இருந்தபோது அவர்கள் பிழைகளை தட்டி கேட்போர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஹக்கீம் பயப்பிடும் சூழலும் நிலவியது. இப்போது அவர்களும் இல்லை. தட்டி கேட்கவும் யாரும் இல்லை. இதனால் குடும்பத்தினரின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகின்றது. என உயர்பீட உறுப்பினர் ஒருவர் வேதனைபட்டுக்கொண்டார்.

முஸ்லீம் காங்கிரஸ் இப்போதெல்லாம் கண்டி காங்கிரசாகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறி வேதனைப்பட்டார்.
இந்த நிலைதான் கட்சிக்குள் தொடர்ச்சியாக நீடிக்கப் போகின்றது. அதற்கமைய நாங்கள் கட்சிக்குள்ளேயே இருப்போம். கட்சியின் செயற்பாடுகளில் கரிசனை காட்டும் செயற்பாடுகளில் நாங்கள் இறங்கப் போவதில்லை. மாறாக தத்தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்கின்ற அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஆதரவாளர்களை தம்பக்கம் மட்டும் இழுத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் தான் அக்கறை செலுத்தவுள்ளோம் என்றார்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கு கிழக்கைச் சார்ந்த உயர்பீட உறுப்பினர்கள் எம்பிக்களின் கருத்துமாகும்' என்றார்.

முகா தலைவர் ஹக்கீமுக்கு  சரிசமனான அதிகாரமிக்க பதவிதான் செயலாளர் நாயகம் பதவி என்பது. அந்தப் பதவி ஹஸன் அலி மூலம் கிழக்கையும் மர்ஹூம் அஸ்ரபையும் கௌரவப் படுத்தியிருந்தது.
ஆனால் இப்போது ஹஸன் அலியை தூக்கி எறிந்தது மட்டுமன்றி அவரது அதிகாரத்தையும் பறித்துக் கொண்டனர். அத்துடன் போராளிகளை ஏமாற்றுவதற்காக அதே செயலாளர் நாயகம் பதவியை கிழக்கைச் சேர்ந்த மற்றுமொருவருக்குத் தான் வழங்கியிருக்கின்றோம் என்ற போலிப் பிரச்சாரத்தையும் ஹக்கீம் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஏமாற்றுப் பேச்சில் கிழக்குப் போராளிகள் தெளிவாகவே உள்ளனர். அதுமட்டுமன்றி முகா தவிசாளர் பதவியிலிருந்து பஷீரை விலக்கிய ஹக்கீம், தவிசாளர் பதவிக்கு மற்றுமொருவரை நியமிக்காத சூழ்நிலையில்  பிரதி தவிசாளராக கண்டியைச் சேர்ந்த தனது மச்சான் நயிமுள்ளாஹ்வை நியமித்து ஒட்டுமொத்தமாக போராளிகளை ஏமாற்றியுள்ளார். தேசியப்பட்டியலை தனது சொந்த சகோதரருக்கு கொடுத்த ஹக்கீம், மற்றைய தேசியப்பட்டியலை தனது நண்பருக்கு கொடுத்துள்ளார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

எனவே வடக்கு கிழக்கு முகா போராளிகள் முகா தலைமையை மாற்ற வேண்டும் என்ற கூக்குரலுக்கு முன்பதாக குடும்ப ஆதிக்கத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சியை மீட்டெடுக்க இன்றே போராட துணியவேண்டும். அந்தப் பேராட்டம் நிச்சயமாக தலைமை மாற்றத்திற்கும் விரைவான பதிலைக் கொடுக்கும்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத