Skip to main content

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

த‌ம்புள்ள‌ ப‌ள்ளியை ந‌ல்லாட்சி உடைக்க‌ப்போகிற‌து

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு வழங்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவை நேரில் சந்­தித்து வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில் தான் அக்­கறை கொண்­டுள்­ள­தாகத் தெரி­வித்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அடுத்­த­வாரம் அமைச்சர் ஹலீ­முடன் மீண்­டுமோர் சந்­திப்­பினை நடாத்தி விரி­வாக ஆராய்­வ­தாகக் கூறினார். இதே­வேளை, அடுத்­த­வாரம் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் ஒன்­று­கூட்டி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் தீர்­மா­னத்தை விளக்கி அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் பெற்றுக் கொள்­ள­வுள்­ள­தாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார். 

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில் தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் சவா­லுக்­குள்­ளாகி வரு­கின்ற நிலையில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்றுக் கொடுப்­பது முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் கட­மை­யாகும். எனவே இவ்­வி­வ­கா­ரத்தில் தான் மிகவும் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தா­கவும் கூறினார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுடன் இது தொடர்பில் ஏற்­க­னவே கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்­ள­தா­கவும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை பள்­ளி­வா­ச­லுக்­கான காணியை இனங்­கண்­டுள்ள நிலையில் எவ்­வ­ளவு காணி பள்­ளி­வா­ச­லுக்­காக ஒதுக்­கப்­பட வேண்டும் என்­ப­திலே நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கும் கருத்து வேறு­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் கூறினார். 

இந்தப் பிரச்­சி­னையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒரே குரலில் கருத்து வேறு­பா­டு­க­ளின்றி தீர்த்து வைப்­ப­தற்கு முன்­வர வேண்டும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து அழுத்­தங்­களைக் கொடுத்தால் நிச்­சயம் நல்ல தீர்­வினை எய்த முடியும். 

தம்­புள்­ளையின் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க கோர­வில்லை. பல­த­சாப்த கால­மாக இயங்கி வரும் பள்­ளி­வா­சலை நல்­லி­ணக்க நோக்­கோடு இடம்­மாற்­றிக்­கொள்­ளவே விரும்­பு­கி­றார்கள் என்­பதை இதற்­கெ­தி­ராக செயற்­ப­டு­ப­வர்கள் உண­ர­வேண்டும் என்றார். 

பாரிய நகரம் மற்றும் மேற்­குப்­பி­ராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அண்­மையில் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், கோயில் நிர்­வா­கிகள் மற்றும் தம்­புள்ளை விகா­ரையின் தேரர்­களை தனது அமைச்சின் காரி­யா­ல­யத்­துக்கு அழைத்து பேச்­சு­வார்த்­தை­யொன்­றினை நடாத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. இப்­பேச்­சு­வார்த்­தையின் போது பள்­ளி­வா­ச­லுக்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியில் 20 பர்ச் நிலமே வழங்க முடியும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

என்­றாலும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­ச­லுக்கு 80 பர்ச் காணியும் தற்­போது பள்­ளி­வா­சல்­களைச் சூழ வாழ்ந்து கொண்­டி­ருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள 28 குடும்பங்களுக்கு அப்பகுதியில் காணியும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசலின் வரைபடம், காணியின்உறுதி, பள்ளிவாசலின் யாப்பு, அமைச்சர் ஹலீமின் சிபார்சுக் கடிதம் என்பனவற்றை ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ARA.Fareel

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய