Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

மாலபே சைட்டம் கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாருத்துவப்பீட மாணவர்கள் சிலர்  யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில்  உள்ள பிரதேச மக்களுடன் இணைந்து அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம்  கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (26) ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாற்பட்டத்தின் கண்டன உரையை
மருத்துவப்பீட மாணவன் பிரபாத் வழங்கினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் மலபே செய்டம் திருட்டுக் கல்விக்கடையை மூடுமாறும் தகுதியற்ற மாணவர்களை பணத்துக்காக இணைத்துக்கொண்டு மருத்துவப்பட்டத்தை வழங்குகிறார்கள். நாம் இங்கு போராடுவது எதிர்காலத்தில் தகுதியற்ற வைத்தியர்கள் உருவாகிவிட கூடாது என்ற நோக்கத்திலுமாகும்.

ஓர் சமுககத்தின்  முன்னேற்றதுக்கு அடிப்படையானது கல்வியாகும் அதனை இல்லாது  ஒழிப்பது என்பது முழு மானிட  சமூகத்துக்கும் இளைக்கும் அநீதியாகும். கல்விக்கு அநியாயம்  இழைப்பது என்பது அந்த சமுகத்தில் மாணவர்களை தாழ்வு படுத்தும் ஒரு செயலாகும். இதனை எவரும் மேற்கொள்ள முடியாது. கல்வியை இழக்க செய்வது என்பது மாணவ சமுகத்தின் உரிமையை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாடாகும். கல்வி என்பது ஒரு உரிமையாகும் அதனை ஒரு தனி நபரால் நிறுத்த முடியாது கல்வி என்பது மானிட சமுகத்தின் நீண்ட நாட்களாக ஒன்று திறக்கப்பட்ட ஒரு பொக்கிசமாகும் இதனை யாரும் விற்பனை செய்யவோ உரிமை கோரவோ முடியாது. கல்வியின் மூலம் ஒரு தனி நபர் இலாபம் அடையவோ முடியாது கல்விக்காக பலர் பல்வேறு முயற்சிகளை செய்து வளர்த்து வந்துள்ளனர். அத்துடன் ஏராளமான நல்ல மனிதர்கள் உயிர் தியாகமும் செய்து உள்ளனர்.முழுமையான கல்வி அறிவு இல்லாமல் மனிதர்கள் அபிமானத்துடன் வாழ முடியாது இது தான் உண்மையான கதையாகும் கல்வியை பணத்துக்கு விற்பனை செய்வது என்பது ஒரு சாராருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கும் ஒரு செயற்பாடாகும் பண வசதி உள்ள்ளவர்கள் மட்டும் கல்வி பயிலவும் ஏனையவர்கள் பாதிப்படைய செய்வதும்  அநியாயமாகும்

பணத்துக்கு விற்பனை செய்வது என்பது பணம் படைத்தவர்களுக்கு மாத்திரம் வழங்கும் ஒரு சலுகையாகும். இது சுகாதார துறைக்கு பாதிப்படைய செய்யும் ஒரு செயல்பாடாகும். மாலபே போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையின் மூலம் தற்பொழுது காணப்படும் நோய்களின் தாக்கத்தை விட கூடுதலான நேயாளிகள் பாதை பாதையாக, பஸ் பஸ்சாக பணம் திரட்டும் நடவடிக்கைகள் தான் அதிகரிக்கும். நாங்கள் கோஷம் இடுவது கல்வியின் உரிமைக்காகவும் அதனை பாதுகாக்கவும் ஆகும் இந்த அரசாங்கத்துக்கு ஒரு கொள்கை இல்லாமல் இருக்கிறது அவர்களின் கொள்ளகை கல்வியை விற்பனை செய்வதாகும் பாதை பாதையாக சென்று கல்வியின் உரிமையை பாதுக்கக்கவே நாங்கள் செயற்படுகின்றோம் எங்கள் வேண்டுகோள்களை செவியேற்கா விட்டால் இதனை விட வித்தியாசமான நடவடிக்கைகளை முன்னெடுக்க  நேரிடும். சைட்டம் நிறுவனம் பணம் சம்பாரிக்கும் ஒரு நிறுவனமாகும் இதில் கல்வி கற்க எந்த கல்வி தகமையும் தேவையில்லை 120 இலச்சம் பணம் இருந்தால் அதுவே போதுமானது பணம் உழைப்பது தான் சைட்டம் நிறுவனத்தின் நோக்கமாகும் இது சமுக சேவைகள் சட்டத்தின் கீழ் உயர் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்படுள்ள்ளது இதில் எந்த சலுகையும் இலாபமும் இல்லை நெவில் பெர்னாண்டோவின் இத் திட்டமானது பணம் உழைப்பதாகும். அவர் ஊடகத்துக்கு வந்து சொல்வது  அனைத்தும் போய் ஆகும் சைட்டம் எனும் திருட்டு தனமான பட்ட படிப்பு கடையை உடனடியாக மூடுமாறு கேட்டு கொள்கிறோம்
கல்வியும் சுகாதாரமும் பணத்துக்கு விற்கப்படும் போது அதன் தரம் குறைவடையும் இவாறான செயற்பாடுகளின் மூலம் கல்வியின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதை கண்டு ஏனைய நிறுவனங்களும் இவ்வாறான திருட்டு தனமான பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்வதற்காக காத்து கொடிருக்கிறது எனவே சைட்டம் நிறுவனத்தை தடை செய்து கல்வி சுகாதார உரிமைகளை பாதுக்காபோம்  
என்று கண்டன உரையில் கூரியிருந்தார்

அஸீம் கிலாப்தீன்

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத