BREAKING NEWS

மைத்திரி அரசின் போக்கில் பாரிய ஏமாற்று மோசடிகள் உலமாக் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்

எமது நாட்டை வளமாக்கப்பபோவதாக மக்களிடம் படம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய மைத்திரி அரசின் போக்கில் பாரிய ஏமாற்று மோசடிகள் இருந்தும் அதனை மக்கள் வாக்குகளால் நாடாளுமன்ற ஆசனங்களை சூடாக்குகின்ற பதவியாசை முதலைகளால் எதனையும் தட்டிக்கேட்க முடியாமல் மௌனமாக இருப்பது ஏன் ? மக்கள் முன்னிலையில் மேடைகளில் கோஷமிடுகின்ற போது தெரிகின்ற விடயங்கள் சகலதும் உரிய

இடங்களுக்கு போகின்ற போது மறந்து போகின்ற மர்மம் என்ன ? முஸ்லீம் மக்களின் பிரசினைகள் சகலதிறக்கும் தீர்வுகள் பெற்றுத்தர எங்களை பாராளுமன்ற / மாகாண சபை ஆசனங்களுக்கு அனுப்புங்கள் என்ற முஸ்லீம் அரசியல் பச்சோந்திகள் இன்று சாதித்து இருப்பது என்ன ? எமது பிரதேசங்களின் முக்கிய பல தேவைகளை வைத்து மக்களை மடையர்களாக்கும் முஸ்லீம் தலைமைகள் இந்த நல்லாட்சியில் சாத்தித்தது என்ன ?
ஒலுவில் துறைமுகம் வந்தால் முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரம் ஓங்கும் என முஸ்லீம் காங்கிரஸின் கனவால் இன்று பாலமுனை,ஒலுவில் மக்கள் படுகின்ற அவஸ்தைகளுக்கு பொறுப்பு கூறுவது யார் ? ஹக்கீம் வந்தால் றிசாட் வருவார்.றிசாட் வந்தால் ஹக்கீம் வருவார் ..... என்கின்ற நிலையும் அவர்கள் கூறுகின்ற வீர வசனங்களும் தவிர இந்த மக்கள் அடைந்த பயன் என்ன ??
சாய்ந்தமருது மண்ணின் கனவாக இருக்கின்ற நம்மை நாம் கட்டியெழுப்ப நமக்கான சபை என்கின்ற அந்த உள்ளுராட்சி சபை கனவை வைத்து சகலரும் நாடகம் நடிப்பது ஏன் ? ஒரே இரவில் அக்கரைப்பற்றில் சபை பிரகடனம் செய்ய தேசிய காங்கிரஸுக்கு வக்கு (இயலுமை)இருக்கின்றது என்றால் ஏன் மக்களின் வாக்குகளால் சுகபோகம் அனுபவிக்கும் எமது பிரதிநிதிகளுக்கும் அதை வைத்து அரசியல் செய்கின்ற அரசியல் வியாபாரிகளுக்கும் முடியாமல் இருக்கின்றது.?? இந்த சபை கிடைக்காமல் அமைச்சு பதவியை எடுக்கப்போவதில்லை என ஒரு அரசியல் வாதி மேடையில் கூறியதை மக்கள் மறந்து விடவில்லை.......
சவூதி அரசின் நன்கொடையால் கட்டப்பட்டு இன்று காடாக மாறி இருக்கின்ற நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள் பயன்படுத்த வழங்க முடியாது இருப்பது ஏன் ? நல்லாட்ச்சியின் பங்காளிகள் நாங்கள் என மார்தட்டும் அரசியல் வாதிகளின் இயலாமையா? அல்லது இந்த அரசின் பக்கமும் இனவாத கை ஓங்கியுள்ளதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா ? அதாவுல்லாவையும் பேரியலையும் காரணம் காட்டியவர்கள் கையில் இன்று மத்திய அரசின் பலம் பொருந்திய அமைச்சும் மாநில அரசும் இருப்பதை மறந்து விட்டார்களா? இஃப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள சாய்ந்தமருது வந்த காங்கிரஸ் கடசியின் தலைவர்களில் ஒருவர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மீனவர் நிகழ்வில் வைத்து சாய்ந்தமருது கடலும் அங்கு நின்ற மக்கள் சாட்சியாகவும் ஒருவாரத்தில் இந்த நுரைச்சோலை வீட்டுத்திட்ட பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார் . ஆனால் அங்கு நடந்தது எதுவுமில்லை. வாக்குறுதியளித்தால் அதை மீறுவதையே முஸ்லீம் தலைவர்களாக தம்பட்டம் அடிப்பவர்கள் செய்துவருகிறார்கள் என்றால் அவர்களால் சுகபோகம் அனுபவிப்பவர்கள் தவிர்த்து சிந்திக்க தெரிந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நல்லாட்ச்சியின் பக்கம் பல கோடிக்களை பெற்றுக்கொண்டு வந்தகாரணத்தால் இந்த பிரசினைகளுக்கு தமது குரல்களை உயர்த்த முடியாது உள்ளார்கள் என்பதே அப்பட்டமான உண்மை (இந்த நல்லாட்ச்சிக்கு ஆதரவு வழங்க சகல கடசிகளும் கோடிக்கணக்கில் பணம் பெற்றதை நான் கூறவில்லை அந்தந்த கட்சி முக்கியஸ்தர்கள் மக்கள் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்கள்.அதனை அந்த தலைவர் மறுக்கவுமில்லை )

இப்படியாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை பட்டியலிட ஆரம்பித்தால் பட்டியல் இலங்கை முஸ்லிங்களின் சனத்தொகையை விட பெரிதாக உள்ளது. இதற்க்கு காரணமாக இருப்பது நமது முட்டாள்தனமான சில முடிவுகளும் முஸ்லிங்களின் தலைமை பொறுப்பை வகிக்க இஸ்லாமிய சரி ஆ வுடனான தலைமை இல்லாததுமே ஆகும்.

இப்படியான திருடர்களிடமிருந்து இந்த நாட்டையும் முஸ்லீம் உம்மத்தையும் பாதுகாக்க சுயசிந்தனையுள்ள முஸ்லீம் இளம் சந்ததிகளை நேரடியாக சுயாதீன அரசியலில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன்.
இந்த நல்லாட்சியை நிறுவுவதில் முக்கிய காரணமாக இருந்தது அரசியல் வாதிகள் இல்லை என்பதையும், இளம் தலைமுறையின் சமூக வலைத்தள மற்றும் ஊடகங்களின் புரட்சிகளுமே காரணம் என்பதை மறவாதீர்கள். பின்னர் ஊழல் அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தினால் இன்று நல்லாட்ச்சியும் படுகேவலமான செயல்களை அச்சமின்றி அதிரடியாக செய்வதை பார்த்தும் மௌனமாக இருந்தால் பயனில்லை என்பதை நீங்கள் அறியாமலுமில்லை. கட்சிவெறிகளையும்,தலைமைத்துவ பக்தர்களாக செயற்படுவதையும் தவிர்த்து தலைமை பிழைசெய்கின்ற போது தட்டிக்கேட்கின்ற இளம் புனித அரசியலை இஸ்லாமிய விழுமியங்கள் நிறைந்த தலைமையை உருவாக்கி ஆளுமை மிக்க செழிப்பான அரசியல் பயணத்தில் சகலரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கிறேன் என அல் மீஸான் பௌண்டஷன் தலைவரும் இலங்கை உலமாக் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினருமான அல்-ஹாஜ் நூருல் ஹுதா உமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar