முதாயத்தின்
உள் முரண்பாடுகள், பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியே சமுதாய மாற்றத்திற்கும் அதன் முன்னோக்கிய நகர்விற்கும் களம் அமைக்கின்றது.இந்த வகையில் சமூகமானது அது தற்போது இருக்கின்ற நிலையிலிருந்து சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத்தில் முன்னேறிய கட்டம் ஒன்றிற்கு நகர வேண்டும். முக்கியமாக அரசியலில் முஸ்லீம் சமூகம் முப்பது வருடங்களுக்கு
முந்திய நடை முறைப் படுத்த முடியாதா ஷரியா என்னும் சட்டம் இயற்றி மக்களை குழப்பியது மட்டும் அல்லாது இயற்றியவர்களும்
குழம்பி, அதன் பின் வந்த இளம் சமூகத்திலும் அதை புகட்டி நாறடித்து
கொண்டு இருக்கின்றனர். இவைகளை உடைத்து எறிய வேண்டும்
என்றால் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் முஸ்லிம்கள்
மத்தியில் "சமூக அசைவியக்கம்" ஓன்று ஏற்படவேண்டும்.அதாவது தற்போதுள்ள இந்த மூடு பனி போல் உள்ள ஷரியா அரசியல் பாதயை மாற்றுங்கள், மாற்றுவதன் மூலமே அதில் வெற்றி காணலாம். இல்லையேல் எதிர் காலத்தில் ஷரியா வோடு சரிந்து கொண்டே போவீர்கள் மட்டும் அல்ல இருள் மயமான எதிர்காலத்தில்தான் இளம் சமூகம் வாழும் என்பது திண்ணம்
என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment