சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் நடத்தப்பட்ட  டிவிசன் 3 கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் நடத்தப்பட்ட  டிவிசன் 3 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2017.03.18 அன்று சாய்ந்தமருது பொது ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் என்பன மோதின 

இதில் முதலில் துடுப்படுத்தாடிய  நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்தினர் 28 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில்  மொத்தமாக 152 ஓட்டங்களை பெற்றனர்.

இம்ரான் விளையாட்டுக் கழகத்தினர் சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக நஜாத் 37 ( 68 ) யும் இர்பான் 25 ( 16 ) பெற்றனர்.

பந்து வீச்சில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் சார்பாக ரஜீப் 3 விக்கெட்டுக்களையும் , இஜாஸ் அஹமட் 3 விக்கெட்டுக்களையும் , பயாஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

153 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் கழம் நுளைந்த ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றனர்.

இதில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக றிஸ்கான் 50 ( 55 ) யும் நஜாஹ் மெளலானா 35 ( 63 ) பெற்றனர்.

பந்து வீச்சில் இம்ரான் விளையாட்டுக் கழகத்தினர் சார்பாக சர்ஜுன் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை 50 ஓட்டங்களை பெற்ற ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் வீரர் றிஸ்கான் பெற்றுக்கொண்டார்.

அதனோடு போட்டியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கான புதிய வெள்ளை சீருடை பெருவதர்க்கான ஒருதொகை பணமும் பிரதம அதிதி டாக்டர். MHK. சனுாஸ் காரியப்பர் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கு பிரதம அதிதியாக 

கொழும்பு தேசிய வைத்திசாலையின் சிறுநீரக மாற்றீடு மற்றும் குருதிக்குழாய் சத்திர சிகிச்சைப்பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர். MHK. சனுாஸ் காரியப்பர் அவர்கள் கழந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மற்றும் விசேட அதிதிகளாக 

ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா அவர்களும் 

ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயளாலர் மற்றும் ஆசிரியர் அலியார் பைசர் அவர்களும் கழந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்