வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலையத்திற்கு மஸ்தான் எம்.பி திடீர் விஜயம்


வவுனியா தமிழ் மத்திய மகாவித்யாலயத்திற்கு நல்லெண்ண நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று (14.03.2017) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது பாடசாலை அதிபர்.T தர்மலிங்கத்தினால் மஸ்தான் எம்.பி வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் பாடசாலையின் அத்தியவசிய தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில மைதானப்புணரமைப்பு, பாடசாலைத்தளபாடப்பற்றாக்குறை என்பனவற்றுடன் மழை காலங்களில் வவுனியா பிரதான பொலிஸ் நிலையம், வீடுகள் உட்பட மேட்டுப்ப்பகுதியில் இருந்துவரும் மழை நீர் பாடசாலை வளாகத்தினூடாக சென்றடைவதினால் பாரிய அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாக அதிபர் தர்மலிங்கம் தெரிவித்தார்.
இதனையப்டுத்து குறித்த சிக்கல் நிலைமையினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக மஸ்தான்.எம்பி தெரிவித்தார்
குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன் பாடசாலை வளாகத்தின் பிரச்சினைக்குரிய பகுதிகளை அவதானித்த மஸ்தான் எம்.பி மிக விரைவில் தாம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்