Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகத்தையும், தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற புத்தகத்தையும் ஒப்பீடு செய்தபோது


தாருஸ்சலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகம் அண்மையில் வெளியாகியிருந்தது, அந்த புத்தகம் என் கைக்கும் கிடைத்திருந்தது, அதனை முற்று மழுதாக வாசித்து விட்டு நான் முகநூலில் ஒரு பதிவையிட்டேன்.
அதில் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் தரவேண்டும், அப்படி பதில் கிடைக்கவில்லை என்றால் இந்த புத்தகத்தில் கூறப்பட்டவிடயம் பொய்யாக இருந்தாலும், நீங்கள் இதற்கு பதில் தறாதுவிட்டால் அதில் சொல்லப்படும் விடயம் உண்மையென்று ஆகிவிடும், ஆகவே இதற்கு பதில் வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தேன்.
இந்த கோரிக்கை இந்த புத்தகத்தை வாசித்த எல்லாமக்களின் ஆவலாகவும் இருந்தது.
அந்த வகையில் "தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்" என்ற புத்தகம் வெளியாகி என் கைக்கும் கிடைத்தது.
அதனை முற்றுமுழுதாக வாசித்தது மற்றுமன்றி, மற்ற புத்தகத்தையும் திரும்பவும் வாசித்து எந்தெந்த விடயங்களுக்கு பதில் உள்ளது என்று ஒப்பீடு செய்தபோது சில கேள்விகள் எனக்கு எழுந்தது.
என்னெவென்றால், குற்றச்சாட்டு வைக்கப்பட்ட புத்தகத்தில், நம்பிக்கை சார்ந்த விடயங்களுக்கும், நிர்வாகம் சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பூரணவிளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது,
அதே நேரம் முக்கிய குற்றச்சாட்டுக்களான,
கார்சன் அன்ட் கம்பர்பச் கம்பனியிடம் வாங்கப்பட்ட காணியின் தொகை 1125000/= ரூபாவுக்கு வாங்கப்பட்டதாகவும், அது தலைவரின் மரணத்துக்கு பிறகு 4250000/= என்று உறுதியை வெட்டி திருத்தி மாற்றி எழுதப்பட்டதாகவும் ஆதாரம் காட்டி எழுதியுள்ளார்கள் அதற்கு இவர்களின் பதில் புத்தகத்தில் ஏன் வெட்டித்திருத்தினோம் என்று பதில் கூறவில்லை.
பின்னர் இதுசம்பந்தமாக 2002ம் ஆண்டு கட்சியின் செயளாலரினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாம்,
அது பொய்யா மெய்யா என்றும் பதில் கூறப்படவில்லை.
பின்னர் இக்காணியை மீட்டுக்கொள்வதற்கு கட்சியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாம் (வழக்கு இல.7350/ஸ்பெசல்) என்று கூறப்பட்டுள்ளது, அந்தவழக்கு பொய்யா மெய்யா என்றும் அங்கே பதில் கூறப்படவில்லை.
அடுத்தது அந்த வழக்கின் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னே அந்த காணி திரும்பவும், திருத்திய தொகையுடனே மீண்டும் கட்சிக்கு எழுதப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் அதற்குமுன் யாருடைய அதிகாரத்தில் அந்த ஆதனம் இருந்துள்ளது என்ற கேள்விக்கு அந்த பதில் புத்தகத்தில் பதிலே கிடைக்கவில்லை.
ஆனால், பதில் பத்தகத்தின் முடிவுரையில் சிறியதாக ஒருபதில் அளித்துள்ளார்கள் எப்படியென்றால்,
(எனவே, குறிப்பிட்ட காணியானது கட்சிக்குரியதாக எழுதப்பட்டு இந்த விடயம் இப்போது முடிந்த கதையாகிவிட்டது. இதைப்பற்றி இனி கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் பயனற்ற செயலாகும்)
என்று கூறி சுருக்கமாக முடித்துள்ளார்கள்.
அப்படியென்றால் கட்சிக்கு யாரால் எழுதிக்கொடுக்கப்பட்டது?
எழுதிக்கொடுக்கப்படுவதற்கு முதல் யாருடைய கட்டுப்பாட்டில் இந்த ஆதனம் இருந்தது?
என்ற கேள்வி கேட்க்கவேண்டியுள்ளது, அதற்கு அங்கே பதில் தறப்படவில்லை.
ஆகவே, அந்த புத்தகத்தின் முக்கிய குற்றச்சாட்டுக்கு இதுதான் பதிலா என்று என்னத் தோன்றுகிறது.
இது போன்ற இன்னும் பல விடயங்களுக்கு அங்கே பதில் இல்லாமல் உள்ளது முதலில் இதற்கு பதில் கிடைக்கமா ? என்றுதான் இதை மட்டும் எழுதிகிறேன்.
அவசிமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பல பக்கங்களை செலவிட்டிருக்கும் இவர்கள், முக்கியமான குற்றச்சாட்டுக்கு ஒரு பந்தியோடு பதில் கூறி முடித்தது ஏன் என்று புரியவில்லை.
இப்படி பல விடயங்களில் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.
இந்த விடயம் பொதுமக்களின் கவணத்துக்கு வரவேண்டும் என்றுதான் இந்த புத்தகத்தை அச்சடித்து வெளியாக்கியுள்ளீர்கள் அதனால்தான் நாங்களும் இதில் கரிசனை செலுத்தி பார்க்கவேண்டி ஏற்பட்டது.
அதனால்தான் நாங்களும் அது சம்பந்தப்பட்ட ஐயங்களை முன்வைக்கின்றோம்.
இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதுடன். தெளிவு பெறுவதற்கே முயற்ச்சிக்கின்றோம், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கின்றோம்...
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை...

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத