தென்கிழக்குப் பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு புதிய மாணவர்களின் முதல்நாள் வருகை


-எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி பயில்தற்காய் உயிரியால் விஞ்ஞான பிரிவுக்கு 97மாணவர்களும் பௌதிக விஞ்ஞான பிரிவுக்கு 70 மாணவர்களும் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் 2017-02-27 ஆம் திகதி வருகை தந்து ஆரம்ப நாள் நிகழ்வுகளில் பங்குகொண்டனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்த்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல்.செயினுடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் இங்கு உரையாற்றும்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு சட்டரீதியாக உள்ள தண்டனைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
நிகழ்வின்போது உயிரியால் விஞ்ஞான பிரிவின் தலைவர் ஏ.நஸீர் அகமட் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பிரதிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர் மற்றும் பதில் நூலகர் எம்.எம்.மஷ்றுபா உள்ளிட்டவர்களும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்