ஏக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் :

பிரதான வீதியை மறைத்து ஜா-எல
ஏக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு: போக்குவரத்து முற்றாக பாதிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

    "கொழும்பில் உள்ள குப்பைகளை ஏக்கல பகுதிக்கு கொண்டு வரவேண்டாம்" எனத் தெரிவித்து, ஜா-எல  ஏக்கல மடம சந்தியில், இன்று (09) வியாழக் கிழமை காலை  முதல், ஏக்கல பிரதேச  மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில் ஜா-எல ஏக்கல  மடம சந்திப் பகுதியில் பாதையை இடை மறைத்து, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
   இதனால்,  போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஜா-எல முதல் மினுவாங்கொடை வரையில் வீதிப் போக்குவரத்தும் காலை வேளையில் முற்றிலும் தடைப்பட்டிருந்தது.    இதன் காரணமாக, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு, பாரியளவில்  மேலதிக போக்குவரத்துப் பொலிஸாரும்   வர வழைக்கப்பட்டுள்ளனர்.    இதேவேளை, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, சீதுவ, ஜா-எல, கந்தானை, வத்தளை,  பேலியகொடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும் மேலதிக சேவைக்காக ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

  (ஐ. ஏ. காதிர் கான்)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்