Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

வை எல் எஸ் ஹ‌மீத் கொச்சிப்ப‌டுத்தியுள்ள‌மை அவ‌ர‌து அர‌சிய‌ல் அறிவுக்குறையை காட்டுகிற‌து

த‌ம‌து க‌ட்சி கிழ‌க்கு மாகாண‌ ச‌பையை கைப்ப‌ற்றுமாயின் ஐந்து வ‌ருட‌ங்க‌ளுள் குடிசை வீடுக‌ளில் ஒழிப்போம் என‌ அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் தேசிய‌ த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் சொல்லியிருப்ப‌தை வை எல் எஸ் ஹ‌மீத் கொச்சிப்ப‌டுத்தியுள்ள‌மை அவ‌ர‌து அர‌சிய‌ல் அறிவுக்குறையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
அக்க‌ட்சி மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

அர‌சிய‌ல் அதிகார‌த்தின் மூல‌ம் ந‌ட‌க்க‌ முடியாத‌ எதையும் சாதிக்க‌ முடியும் என்ப‌தை இந்த‌ நாட்டின் அர‌சிய‌ல் காட்டித்த‌ந்துள்ள‌து. ஒரு ஆளும் க‌ட்சி உறுப்பின‌ர் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராக‌ இருந்தால் அவ‌ர் மாகாண‌ ச‌பையின் ஒதுக்கீடு ம‌ட்டும‌ன்றி ச‌ர்வ‌தேச‌ உத‌விக‌ளையும் பெற‌ முடியும். இத‌னால்தான் க‌ல்முனை முஸ்லிம் காங்கிர‌சின் மேய‌ராக‌ இருந்த‌ நிசாம் காரிய‌ப்ப‌ர் க‌ல்முனையை ஜேர்ம‌ணியுட‌ன் இணைக்க‌ப்போவ‌தாக ம‌க்க‌ளை ஏமாற்றினார். ஒரு மாந‌க‌ர‌ மேய‌ரால் ச‌ர்வ‌தேச‌த்தின் நிதியுத‌வியை பெற‌ முடியாது என்றிருப்பின் ச‌ட்ட‌த்த‌ர‌ணியான நிசாம் காரிய‌ப்ப‌ர் இவ்வாறு சொல்லியிருக்க‌ மாட்டார்.

உண்மையில் நிசாம் காரிய‌ப்பரால் அவ்வாறு செய்ய‌க்கூடிய‌ அர‌சிய‌ல் அதிகார‌ம் இருந்தும் செய்யாமைக்கு கார‌ண‌ம் ம‌க்க‌ள் ப‌ற்றிய‌ க‌வ‌லை இல்லாமையும், ம‌க்க‌ளிட‌ம் பொய் சொல்லி ஏமாற்றும் கொள்கை கொண்ட‌ முஸ்லிம் காங்கிர‌சின் பிர‌திநிதியாக‌ அவ‌ர் இருந்த‌துமாகும்.

ஆனால் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌ன‌க்கிருக்கும் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ளையும் தாண்டி ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌க்கூடிய‌வ‌ர் என்ப‌தை நாட்டு ம‌க்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இன‌வாதிக‌ள் கூட‌ அறிவ‌ர். அத‌ன் கார‌ண‌மாக‌வேதான் அவ‌ரை இன‌வாதிக‌ள் எதிர்க்கின்ற‌ன‌ர்.

அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் வ‌ட‌மாகாண‌ முஸ்லிம்க‌ளின் வீட்டுப்பிர‌ச்சினையை தீர்க்க‌வில்லை என‌ வை எல் எஸ் போன்றோர் சொல்வ‌து பிழையான‌ குற்ற‌ச்சாட்டாகும். அம்ம‌க்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அகதியாக‌ வாழ்ந்த‌ ம‌க்க‌ள் என்ப‌தால் அவ‌ர்க‌ளின் தேவைக‌ளை முழுமைப்ப‌டுத்துவ‌து என்ப‌து இலேசுப்ப‌ட்ட‌ விட‌ய‌ம‌ல்ல‌. இருந்தாலும் அமைச்ச‌ர் ரிசாத் த‌ன‌க்கிருக்கும் அதிகார‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி அம்ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை தீர்த்து வ‌ருகிறார். அவ‌ரின் வேண்டுகோளை ஏற்று ஜாசிம் சிட்டி என்ற‌ பெய‌ரில் வெளிநாட்டு நிறுவ‌ன‌ம் வீடுக‌ள் க‌ட்டிக்கொடுத்திருப்ப‌தைக்கூட‌ சிங்க‌ள் இன‌வாதிக‌ள் குத‌றிய‌தை நாம் அறிவோம்.
அமைச்ச‌ர் ரிசாதுக்கு சிங்க‌ள‌, த‌மிழ் இன‌வாதிக‌ள் த‌டையாக‌ இல்லாம‌ல் இருந்திருந்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் க‌ணிச‌மாக‌ தீர்ந்திருக்கும்.
ஆனால் கிழ‌க்கின் க‌ள‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டிய‌ல்ல‌. கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் அதிகார‌ம் அமைச்ச‌ர் ரிசாதின் க‌ட்சிக்கு கிடைத்தால் கிழ‌க்கின் குடிசைக‌ளை ஒழிப்ப‌து இல‌குவான‌தாக‌ அமையும் என்ப‌தை நாம் ந‌ம்ப‌லாம். கார‌ண‌ம்  ம‌க்க‌ளை ஏமாற்ற‌ நினைக்காத‌ ஒரு க‌ட்சி மாகாண‌ ச‌பையின் பொறுப்பை ஏற்றால் நிச்ச‌ய‌ம் அக்க‌ட்சியால் ச‌ர்வ‌தேச‌ உத‌வியுட‌ன் மாகாண‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும்.

நாம் இவ்வாறு சொல்வ‌தால் அமைச்ச‌ருக்கு ஒரு ப‌க்க‌ ஆத‌ர‌வாக‌ பேசுவ‌தாக‌ நினைக்க‌லாம். ஆனால் நாம் எந்த‌ நிலையிலும் உண்மை பேசும் அர‌சிய‌ல்வாதிக‌ளாகும். எம‌து க‌ட்சி அமைச்ச‌ர் ரிசாதின் க‌ட்சியுட‌ன் மீண்டும் இணைவ‌த‌ற்கு முன்பு அமைச்ச‌ர் என்னிட‌ம் தேசிய‌ ப‌ட்டிய‌ல் எம் பியை புத்த‌ள‌த்துக்கு கொடுத்த‌து பிழையா என‌ கேட்ட‌ போது, வை எல் எஸ் மிக‌ மோச‌மான‌ அர‌சிய‌ல்வாதி என்று நாம் அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ நிலையிலும் புத்த‌ள‌த்துக்கு தேசிய‌ ப‌ட்டிய‌ல் வ‌ழ‌ங்குவ‌து த‌வ‌றில்லை. ஆனாலும் முத‌ல் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் வை எல் எஸ்சுக்கு கொடுத்து விட்டு அடுத்த‌ இரு வ‌ருட‌ம் புத்த‌ள‌த்துக்கு கொடுத்திருக்க‌லாம் என்ற‌ எம‌து ப‌க்க‌ நியாய‌த்தை சொன்னோம். அக்க‌ருத்தை அமைச்ச‌ர் ரிசாதும் அமைதியாக‌ செவி ம‌டுத்தார்.

ஆக‌வே கிழ‌க்கு மாகாண‌ ச‌பை மீண்டும் ம‌து, மாது, சூது என‌த்திரியும் முஸ்லிம் காங்கிர‌சிட‌ம் கொடுத்து முஸ்லிம்கள் த‌ம‌து த‌லையில் தாமே மீண்டும் ம‌ண்ணை அள்ளிப்போடாமல் க‌ட்சி மாற்ற‌த்திற்கும் ஆட்சி மாற்ற‌த்திற்கும் த‌யாராக‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கிழ‌க்கு ம‌க்க‌ளை கேட்டுக்கொள்கிற‌து.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத