குறையை ம‌றைத்த‌ல் என்ப‌த‌ற்கும் குற்ற‌ச்செய‌லை ம‌றைத்த‌ல் என்ப‌த‌ற்குமிடையிலான‌ வித்தியாச‌ம்


ஒருவ‌ரின் குறையை ம‌றைத்த‌ல் என்ப‌த‌ற்கும் குற்ற‌ச்செய‌லை ம‌றைத்த‌ல் என்ப‌த‌ற்குமிடையிலான‌ வித்தியாச‌ம் ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை.
இஸ்லாம் ஒரு ம‌னித‌னின் குறையை ம‌றைக்கும் ப‌டி சொல்கிற‌து. ஆனால் குற்ற‌ச்செய‌லை ம‌றைக்கும்ப‌டி வ‌ழி காட்ட‌வில்லை.

குறை என்றால் என்ன‌ குற்ற‌ச்செய‌ல் என்றால் என்ன‌ என்ப‌த‌ற்கிடையிலான‌ வித்தியாச‌த்தை நாம் புரிந்து கொள்ள‌ வேண்டும். குறை என்ப‌து ம‌னித‌னிட‌ம் உள்ள‌ இய‌ற்கையான‌ குறைக‌ள். அத்துட‌ன் பிற‌ருக்கு கெடுதியில்லாத‌, ச‌மூக‌ குற்ற‌மில்லாத‌ செய‌லாகும். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் பேசும் வித‌ம், ப‌ழ‌கும் வித‌ம், அவ‌னின் த‌னிப்ப‌ட்ட‌ குடும்ப‌ பிர‌ச்சினை போன்ற‌வ‌ற்றை சொல்ல‌லாம்.

குற்ற‌ச்செய‌ல் எனும் போது ச‌மூக‌த்தை பாதிக்கும் ஒரு செய‌லாகும். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ன் இர‌வில் ஊருக்குள் புகுந்து திருடுகிறான். அவ‌ன் பெய‌ர் அஹ்ம‌த் என‌ வைத்துக்கொள்வோம். அவ‌ன் யார் என்றும் ந‌ம‌க்குத்தெரிந்த‌ நிலையில் அவ‌னைப்ப‌ற்றி ச‌மூக‌த்திட‌ம் சொன்னால் அவ‌ன் குறையை நாம் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்துகிறோம் என இஸ்லாம் ந‌ம்மை குற்ற‌ம் காணுமா அல்ல‌து அவ‌ன‌து குற்ற‌ச்செய‌லை ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என‌ சொல்கிற‌தா என்ப‌தை சிந்தித்தால் போதும் இத‌ற்கான‌ தெளிவு கிடைக்கும்.

ஒரு முறை க‌ள‌ஞ்சிய‌ம் ஒன்றுக்கு பொறுப்புச்சாட்ட‌ப்ப‌ட்ட‌ ஒரு ச‌ஹாபி அந்த‌ க‌ள‌ஞ்சிய‌த்துக்குள் புகுந்து திருடிய‌ ஒருவ‌னை பிடித்தார். பின்ன‌ர் அவ‌ன் ஷைத்தானின் தீங்கிலிருந்து விடுப‌டும் குர் ஆன் வ‌ச‌ன‌த்தை க‌ற்றுத்த‌ருகிறேன் என்னை விட்டு விடு என்றான். அத‌ன் ப‌டி ஆய‌த்துல் குர்சியை ஓதினால் சைத்தான் ஓடி விடுவான் என‌ அந்த‌ ம‌னித‌ன் சொன்ன‌தால் அவ‌னை
ச‌ஹாபியும் விட்டு விட்டு ம‌றுநாள் காலை இது ப‌ற்றி ந‌பிய‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌ஹாபாக்க‌ள் முன்னிலையில் ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்கிறார்.  அத‌ற்கு ந‌பிய‌வ‌ர்க‌ள் அவ‌ன் ஷைத்தான் என்றும் ஆனால் உண்மை சொல்லியுள்ளான் என்றும் சொன்னார்க‌ள்.

இங்கு முஸ்லிமான‌ ம‌னித‌ன் தோற்ற‌த்தில் சைத்தான் வ‌ந்து திருடிய‌ ச‌ம்ப‌வ‌ம் அந்த‌ ச‌ஹாபிக்கும் அவ‌னுக்கும் தான் தெரியும். ஒரு முஸ்லிமின் குறையை ம‌றைக்க‌ வேண்டும் என‌ அந்த‌ ச‌ஹாபி இது ப‌ற்றி யாருக்கும் சொல்லாம‌ல் இருந்திருக்க‌ வேண்டும். ஆனால் அப்ப‌டி அவ‌ர் இருக்க‌வில்லை. ந‌பிய‌வ‌ர்க‌ளிட‌ம் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தினார்.
அத்துட‌ன் அந்த‌ ச‌ஹாபி அந்த‌ திருட‌ன் ப‌ற்றி ந‌பிய‌வ‌ர்க‌ளிட‌ம் முறையிட்ட‌ போது நீர் ஏன் அடுத்த‌வ‌ன் குறையை ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்கிறீர் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் அந்த‌ ச‌ஹாபியை கேட்க‌வில்லை.

ஆக‌ ச‌மூக‌க்குற்ற‌ச்செய‌ல்க‌ளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளின் குற்ற‌ச்செய‌லை ஆதார்பூர்வ‌மாக‌ ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌துதான் இஸ்லாத்தின் க‌ட்ட‌ளையாகும். ஒரு திருட‌னின் குற்ற‌ச்செய‌லையே இங்கு ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் போது அர‌சிய‌லின் பெய‌ரால் ச‌மூக‌த்தை ஏமாற்றி ஏப்ப‌மிடுவோர் ப‌ற்றி ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌ முடியுமா? ம‌னித‌ன் போல் வேட‌மிட்டு சைத்தான் திருட‌ வ‌ந்த‌து போல் த‌லைவ‌ர்க‌ள் என்ற‌ வேட‌த்தில் பெரும் பாவ‌த்தில் ஈடுப‌டுவோர் ப‌ற்றி அவ‌சிய‌ம் ச‌மூக‌த்தில் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தி ம‌க்க‌ளை விழிப்பூட்ட‌ வேண்டும். இத்த‌கைய‌ மோச‌மான த‌லைமைக‌ளுக்கு விசார‌ணை வ‌லியுறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.
-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்