நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள்

ஒருவ‌ர் கேட்டுள்ளார் நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள் என‌.
நான் என‌து 14 வ‌ய‌து முத‌ல் த‌லைவ‌ர் அஷ்ர‌பின் சிஷ்ய‌ன். முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ 86ம் ஆண்டு பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து முதல் அக்க‌ட்சியில்தான் இருக்கிறேன். 1988ம் ஆண்டு க‌ட்சி ப‌திய‌ப்ப‌ட்டு 89ல் நான் முஸ்லிம் காங்கிர‌சின் இணைப்பாள‌ராக‌ த‌லைவ‌ர் அஷ்ர‌பால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டேன்.
என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் சில‌ த‌னிப்ப‌ட்ட‌ முர‌ண்பாடுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. புலிக‌ளால் என‌து த‌ம்பி உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ல்முனை இளைஞ‌ர்கள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌த்தில் அஷ்ர‌ஃப் ச‌ரியான‌ அணுகு முறையை கையாண்டு அவ‌ர்க‌ளை விடுவிக்க‌ முய‌ல‌வில்லை என்ப‌து என‌க்குள் ம‌ன‌ வ‌ருத்த‌ம். அப்போது அஷ்ர‌ஃபால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ பிரேம‌தாச‌வுக்கும் புலிக‌ளுக்குமிடையில் நெருங்கிய‌ ந‌ட்பு இருந்த‌து.
ஆனாலும் நான் மு. காவிலிருந்து வில‌க‌வில்லை. அத‌ன் பின் 95ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் முர‌ண்பாடு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர் ச‌ந்திரிக்காவை ஆத‌ரிக்க‌ வேண்டும் என‌ அறிக்கை விட்டார். ச‌ந்திரிக்கா த‌லைவ‌ரின் க‌ப்ப‌ல் அமைச்சை ப‌றித்த‌வ‌ர் என்ப‌தால் முஸ்லிம்க‌ள் அவ‌ரை ந‌ம்ப‌ முடியாது என்ப‌தால் ச‌ந்திரிக்காவை ஆத‌ரிக்க‌ முடியாது என‌ நான் அறிக்கை விட்டேன்.
த‌லைவ‌ரையே எதிர்க்கிறார் என‌ வால்க‌ள் குதித்த‌ போதும் த‌லைவ‌ர் என‌க்கெதிராக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை. நான் சொன்ன‌து உண்மை என்ப‌தை க‌டைசிக்கால‌த்தில் இறைவ‌ன் அவ‌ருக்கு புரிய‌ வைத்தேன்.
இன்று வ‌ரை நான் முஸ்லிம் காங்கிர‌சிலிருந்து வில‌கிக்கொண்ட‌தாக‌ க‌டித‌ம் கொடுக்க‌வுமில்லை. அவ‌ர்க‌ள் என்னை நீக்கிய‌தாக‌ க‌டித‌ம் அனுப்ப‌வுமில்லை, அனுப்ப‌வும் முடியாது. கார‌ண‌ம் நான் த‌லைவ‌ர் அஷ்ர‌பால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்.

நான் த‌லைவ‌ருக்கு ஜால்ரா அடிப்ப‌வ‌னாக‌ இருக்க‌வில்லை. ந‌ல்ல‌ விட‌ய‌ங்க‌ளை பாராட்டினேன். தீய‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்தேன். த‌லைவ‌ர் உயிரோடு இருக்கும் வ‌ரை என‌து க‌ட்சியை ப‌திவ‌து ப‌ற்றி நான் சிந்திக்க‌வில்லை. மாறாக முஸ்லிம் காங்கிர‌ஸ் ம‌ட்டுமே முஸ்லிம்க‌ளின் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ நிலைப்பாட்டிலேயே இருந்தேன்.
ஹ‌க்கீம் தலைமை பொறுப்பை எடுத்த‌ போது அவ‌ரை ஆத‌ரித்தேன். 2001ம் ஆண்டு த‌னித்த‌ர‌ப்பு த‌னி மாகாண‌ம் என்ப‌தெல்லாம் இப்போது பேச‌ முடியாது என‌ ஹ‌க்கீம் சொன்ன‌ போது அவ‌ரை ச‌மூக‌த்துரோகி என்றேன். இன்று வ‌ரை ஹ‌க்கீம் அப்ப‌டியேதான் இருக்கின்றார்.
உல‌மாக்க‌ள் த‌லைமையில் அர‌சியல் க‌ட்சி தேவை என்ப‌தை 1993ம் ஆண்டு முத‌ல் என‌து க‌ருத்தாக‌ இருந்த‌து.  ஆனாலும் நான் என‌து தொழிலில் கூடிய‌ க‌வ‌ன‌ம் செலுத்திய‌தால் அர‌சிய‌லில் முழு மூச்சாக‌ ஈடுப‌ட‌வில்லை.
அத‌ன் பின் 2005ம் ஆண்டு உல‌மா க‌ட்சியை ஆர‌ம்பித்தோம். அது ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில் காத்தான்குடியின் இணைப்பாள‌ராக‌ காத்தான்குடி அப்துல் ர‌ஹீம் மௌல‌வி சிற‌ப்பாக‌ க‌ட‌மையாற்றினார். பின்ன‌ர் அவ‌ர் த‌ன‌து தொழில் நிமித்த‌ம் ஒதுங்கிக்கொண்டார். நாம் அவ‌ரை வில‌க்கவில்லை.
உல‌மா க‌ட்சி இன்ன‌மும் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தில் ப‌திவு பெற‌வில்லை. அத‌ற்கான‌ முய‌ற்சியில் உள்ளோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்