Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

மு.காவும் கொள்கை மாற்றங்களும். சஹாப்தீன் -


இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமானதொரு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால்
தோற்றுவிக்கப்பட்டது. இக்கட்சி தோற்றம் பெற்ற போது முஸ்லிம்கள் ஆயுதக்
குழுக்களினதும், அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளினாலும்,
பேரினவாதிகளின் சதிகளினாலும்; வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வேளைகளில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு தனித்துவமானதொரு
அரசியல் கட்சி இருக்கவில்லை. இதனால் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஸ்ரப்புக்கு பூரண ஒத்துழைப்பு
வழங்கினார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின்
பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுக் கொண்டது. இதனால், அரசாங்கத்தை
தீர்மானிக்கும் சக்திகயாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது.
மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸிற்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியிகள், தலைவர் ரவூப்
ஹக்கீமுடனான முரண்பாடுகள் காரணமாக கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டன.
இப்பிளவுகளுக்கு விட்டுக் கொடுக்காமையும், பொறுமை இன்மையும், கொள்கைப்
பற்றில்லாத தன்மையும், பதவி மோகமும், பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற
எண்ணமும், ஏற்றுக் கொள்ளாத அற்ப ஆசைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இவற்றினால் அஸ்ரப்பின் கொள்கைகள் படிப்படியாக விலை பேசப்பட்டன. இன்றைய
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதல் எல்லா முஸ்லிம் கட்சிகளும் தங்களை
அஸ்ரப்பின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்களாகவே மக்கள் முன் காட்டிக்
கொண்டன. ஆனால், உண்மையில் எல்லா கட்சிளும் அஸ்ரப்பின் கொள்கைக்கு
மாற்றமாகவே செயற்பட்டுக் கொண்டன. தற்போது மிகவும் மோசமாக வகையில்
அஸ்ரப்பின் கொள்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதல் அனைத்து
முஸ்லிம் கட்சிகளும் மீறிக் கொண்டிருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற அஸ்ரப்பின்
சீடர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்து தமது அரசியல் தலைவர் அஸ்ரப்பின்
கொள்கைக்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ஏனும் பெயரில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அஸ்ரப்பின்
கொள்கைகளை மீறிச் செயற்பட முடியாது. ஏனெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸில் பல பிளவுகள் ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்களின் பெரும்பான்மை
ஆதரவு இக்கட்சிக்கே இருந்தது. இதனால், ஏனைய முஸ்லிம் கட்சிகள்
ஆரம்பத்திலேயே அழிந்துவிடுமென்று நம்பப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அஸ்ரப்பின் கொள்கையின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின்
குரலாக துணிச்சலுடன் செயற்படுமென்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால்,
எல்லா முஸ்லிம் கட்சிகளும் சுயநலன்களை முதன்மைப்படுத்திச் செயற்பட்டன.
இதனால், முஸ்லிம்களின் வாக்குகளை எல்லா கட்சிகளும் தங்களின்
செல்வாக்கிற்கு ஏற்றவாறு பங்குபோட்டு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை
சிதைத்துள்ளன.
முஸ்லிம்களின் நம்பிக்கையை பேணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்ப காலங்களில் செயற்பட்டாலும், காலம் செல்லச்
செல்ல அஸ்ரப்பின் கொள்கைகள் தனிப்பட்ட இச்சைகளுக்காகவும், உயர்பீட
உறுப்பினர்களின் பதவிப் பசிக்கு தீனி போடுவதற்காகவும் புதிய கொள்கைகளில்
பயணிக்கத் தொடங்கியது. அஸ்ரப் முன் வைத்த கரையோர மாவட்டம், தனிஅலகு
கோரிக்கைகள் காலத்திற்கு ஒவ்வாத கோரிக்கைகளாக பார்க்கப்பட்டன. அவை பற்றி
பேசுவது பிற்போக்குத் தனமாகவும் கணிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு பல
அநீயாயங்கள் அரசியல் ரீதியாக நடைபெற்ற போதிலும், பௌத்த இனவாத
அமைப்புக்களினால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின்
மதவிழுமியங்களைப் பின்பற்றுவதற்குரிய சுதந்திரத்தில் தலையீடுகள்
இடம்பெற்ற போதிலும், அளுத்கம, தர்கா நகர் போன்ற இடங்களில் வாழ்ந்த
முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட தருணத்திலும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போதிய அளவில் குரல் கொடுக்கவில்லை.
அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. இப்பிரச்சினைகளை சர்வதேச
மயப்படுத்துவதற்குரிய பூரணத்துவமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை
என்று இன்று வரைக்கும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. தனி
மனிதர்களின் குற்றங்களை மறைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் மீதான
தாக்குதல்கள் யாவற்றையும் தட்டிக் கேட்க முடியாத நிலையை முஸ்லிம் அரசியல்
அடைந்து கொண்டது.
அரசியல் தலைவர்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் தன்மானம் அடமானம்
வைக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் அதற்காக கிளர்ந்தெழவில்லை. தங்களை தாங்களே
சுதாகரித்துக் கொண்டார்கள். அரசியல் தலைவர்களை விமர்சித்துக் கொண்டாலும்
தேர்தல்களில் வாக்களித்து அவர்களை வெற்றி பெறவும் செய்தார்கள். இது
முஸ்லிம் சமூகம் வெறும் உணர்ச்சி வார்த்தைகளுக்கு ஏமாந்த கதையாகும்.
ஆயினும், எத்தனை நாட்களுக்கு முஸ்லிம்களை வெறும் உணர்ச்சிகளினால் ஏமாற்ற
முடியும். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எல்லா முஸ்லிம் கட்சிகளும் மஹிந்தராஜபக்ஷவை
ஆதரிப்பதற்குரிய முடிவுகளை எடுத்துக் கொண்டன. ஆனால், அது பற்றி
உத்தியோபூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், முஸ்லிம்கள்
மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிரான தீர்மானத்தை தாங்களாகவே எடுத்துக்
கொண்டார்கள். இதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இறுதிக் கட்டத்தில் மக்களின் வழிக்கு
வந்து தங்களை காப்பாற்றிக் கொண்டன. இலங்கை முஸ்லிம்களின் அரசியல்
வரலாற்றில் இதுவொரு புதியதோர் அத்தியாயமாகும். தலைவர்கள் சரியான
முடிவுகளை எடுக்காது போனால் எங்களினாலும் முடிவுகளை எடுக்க இயலும் என்ற
செய்தியை முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும், பேரினவாத
கட்சிகளுக்கும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
முஸ்லிம் சமூகம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் முஸ்லிம்
அரசியல் கட்சிகள் அதிலிருந்து பாடம் படித்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மிகவும் மோசமான வகையில் அஸ்ரப்பின்
கொள்கைகளுக்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கட்சியின்
தலைவர், செயலாளர் நாயகம், தவிசாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களிடையே
ஒற்றுமையை காண முடியவில்லை. ஆளுக்காள் மிக மோசமான குற்றச்சாட்டுக்களை
முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் சொத்துக்கள்
சூறையாடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
சிரேஸ்ட உறுப்பினர்களை கனிஸ்ட உறுப்பினர்கள் மரியாதைக் குறைச்சலாக பேசிக்
கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஹஸன்அலி
போன்றவர்களை ஓரங்கட்டுவதற்கு முனைப்புக்கள் காட்டப்படுகின்றன.
அஸ்ரப்பினால் வரையப்பட்ட கட்சியின் யாப்பில் குறைகள் காணப்பட்டு
திருத்தப்படுகின்றன. தலைவரின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காக
திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்
வைக்கப்படுகின்றன. இவை போன்று தொடர்ராக குற்றச்சாட்டுக்கள் முன்
வைக்கப்பட்டாலும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளன.
குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள் அளிக்கப்படவில்லை. முன் வைக்கப்படும்
குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை என்று சொல்லப்படுகின்றதே அன்றி, அதற்கான
ஆதாரங்கள் முன் வைக்கப்படவில்லை.
மர்ஹும் அஸ்ரப் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் யாப்பை உருவாக்கினார். யாப்பின் படி தலைவருக்கும், செயலாளர்
நாயகத்திற்குமே அதிகாரங்கள் உள்ளன. ஏனைய பதவிகள் வெறும் அலங்காரமாகவே
உள்ளன. கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன்அலிக்கும், தலைவர் ரவூப்
ஹக்கீமுக்கு இடையே பலத்த கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. ஹஸன்அலி
எப்போதும் கட்சியின் கொள்கைக்கும், அஸ்ரப்பின் சிந்தனைக்கும் முன்னுரிமை
அளிக்கக் கூடியவர். இவர் ரவூப் ஹக்கீமின் பல முடிவுகளுக்கு எதிரான
கருத்துக்களை முன் வைத்துள்ளார். மட்டுமன்றி மஹிந்தராஜபக்ஷவின்
அரசாங்கத்திற்கு கட்டுப்படாத திமிர் கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால்,
ரவூப் ஹக்கீம் பல தடவைகள் மஹிந்தராஜபக்ஷவின் கண்டனத்திற்கு
உட்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
தமது கோட்டிற்குள் நிற்பதற்கு ஹஸன்அலி மறுதலித்துக் கொண்டிருப்பதனால்
அவரை ஓரங்கட்டுவதற்குரிய நடவடிக்கைகளை ரவூப் ஹக்கீம் முடிக்கிவிட்டார்.
முதற் கட்டமாக ஹஸன்அலி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்ட போது
மறுதலிக்கப்பட்;டது. அதற்கு பகிரங்மாக தேசியப்பட்டியலில் வாய்ப்பு
வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக தேர்தலின்
பின்னர் தேசியப்பட்டியல் மறுக்கப்பட்டது. ஹஸன்அலி தேசியப்பட்டியலில்
வாய்ப்பு கேட்டு தொல்லைப்படுத்துகின்றார் என்று மக்களுக்கு காட்டப்பட்டன.
மூன்றாம் கட்டமாக செயலாளர் நாயகத்திற்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
உயர்பீட செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இப்பதவிக்குரியவரை
நியமிக்கும் அதிகாரத்தையும் ரவூப் ஹக்கீம் தமதாக்கினார். இதன் பின்னர்
கட்சிக்குள் பசீர்சேகு தாவூத் உட்பட இன்னும் சில உயர்பீட உறுப்பினர்கள்
செயலாளர் நாயகம் ஹஸன்அலியின் அதிகாரங்களை குறைத்தமை தர்மமல்ல என்று
தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக உயர்பீடக் கூட்டங்களில் விரல்
நீட்டினார்கள். தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக விரல்
நீட்டுகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
சென்றன. இதனால், நான்காம் கட்டமாக ஹஸன்அலியுடன் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றன. இதில் ஹஸன்அலிக்கு மீண்டும் அதிகாரங்களுடன் கூடிய செயலாளர்
நாயகம் பதவி பேராளர் மாநாட்டின் பின்னர் வழங்கப்படுமென்றும், அதற்கு
முன்னதாக தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்
என்றும் உறுதி கூறப்பட்டன.
இப்போது புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் திருத்தங்களை
மேற்கொள்ளப்படவுள்ளதாம்.  செயலாளர் நாயகம் மற்றும் தவிசாளர் ஆகிய பதவிகளை
இல்லாமல் செய்வதற்கு  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள ஒரு
சில உயர்பீட உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றன. ஹஸன்அலியும், பசீர் சேகுதாவூத்தும் தலைவருக்கு
எதிரானவர்கள் என்பதற்கு அப்பால் செயலாளர் நாயகம், தவிசாளர் ஆகிய இரு
பதவிகளும் தலைவருக்கு ஆபத்தானது என்று சிந்திக்கப்படுவதாகவே உள்ளது.
இப்பதவிகளை வழங்குவதாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே
வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகாரங்களுடன்
செயலாளர் நாயகமாக இருந்தால் தலைவரின் இருப்புக்கு ஆபத்தாக அமையலாம்
என்றும் அல்லது தலைவரின் கட்டுக்கு அடங்காத முடிவுகளுக்கு தடையாக
செயலாளர் நாயகம் இருக்கலாம் என்றும் எண்ணுவதன் தாக்கமே செயலாளர் நாயகம்,
தவிசாளர் ஆகிய பதவிகளை இல்லாமல் செய்வதற்குரிய முயற்சிகளின் பின்னணியில்
இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, மேற்படி இருபதவிகளையும் இல்லாமல் செய்வதற்குரிய முயற்சிகள்
உயர்பீட உறுப்பினர்களினால் தோற்கடிக்கச் செய்யப்படுமாயின் சட்டத்தரணி
நிஸாம் காரியப்பரை செயலாளர் நாயகம் பதவியில் அமர்த்துவதற்கும், தவிசாளர்
பதவியை பசீர் சேகுதாவூத்திடம் இருந்து பிடிங்கிக் கொள்வதற்கும்
திட்டங்கள் உள்ளதாகவும் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நகர்வுகள் குறித்து எதிர்வு
கூறல்கள் முன் வைக்கப்பட்டாலும் நடக்கும் போதுதான் எது உண்மை என்று
தெரியவரும். அதுவரைக்கும் இவை ஊகமாகவே இருக்கப் போகின்றன.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்வரும்
12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன் போது கட்சியின் யாப்பில்
பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த மாற்றங்கள்
இது வரைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு
மாற்றமாக செயற்பட்டுக் கொண்டவைகளை விடவும் பாரதூரமானதாக இருக்கப்
போகின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், கட்சியின் அதி முக்கிய
உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பேராளர் மாநாட்டிற்கு
முன்னதாக தீர்க்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எடுக்கப்படாது போகுமாயின்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபடுவதனை தவிர்க்க முடியாது. பேராளர்
மாநாட்டின் பின்னர் பிளவுகள் எற்படுமாயின் நீதிமன்றங்களின் படிகளை
கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏற வேண்டியும் ஏற்படும். கடந்த காலங்களில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல வழக்குகளை சந்தித்துள்ளன. அவற்றில்
வெற்றியும் கண்டுள்ளன. ஆனால், பேராளர் மாநாட்டின் பின்னர் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுமாயின் கட்சியின்
சொத்துக்கள் பற்றிய வழக்குகளும், தனிநபர்களின் கடந்த காலங்களைப் பற்றிய
விவகாரங்களும் வழக்குகளின் கருவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 05.02.2017

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத