முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ச்சொல்லும் ஐ நா.

2016 ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 20ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் மூலம் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக இவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும்,கூறியுள்ளதாவது-

1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதற்காக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஐ.நா.வின் இடம்பெயர் மக்கள் தொடர்பான பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலங்கள் அனைத்துலக தரங்களுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டமூலமானது அந்த சமூகத்தின் பெண்களின் ஆலோசனைகளுடன் திருத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான அநீதிகளும் இழைக்கப்படக் கூடாது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்