சுத‌ந்திர‌ தின‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் வாழ்த்து

இல‌ங்கையின் சுத‌ந்திர‌ தின‌த்தை ம‌கிழ்ச்சியுட‌ன் கொண்டாடும் இல‌ங்கையின் அனைத்து ம‌க்க‌ளுக்கும் எம‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிறோம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

இந்த‌ நாட்டின் சுத‌ந்திர‌த்துக்காக‌ ச‌க‌ல‌ ம‌க்க‌ளும் போராடின‌ர் என்ப‌தை நாம் அறிவோம். ஆனாலும் இல‌ங்கையில் உள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளோ, இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ளோ,உல‌மா ச‌பைக‌ளோ சுத‌ந்திர‌ தின‌த்தை ப‌கிர‌ங்க‌மாக‌ கொண்டாடுவ‌தை த‌விர்த்தே வ‌ந்த‌ன‌ர். அத‌னை ஒரு ஹ‌ராம் போல‌வும் ப‌ல‌ரும் பார்த்த‌ன‌ர்.

அற‌பு நாடுக‌ளின் சுத‌ந்திர‌ தின‌ விழாக்க‌ள் இல‌ங்கையில் ந‌ட‌ந்தால் அதில் ச‌மூக‌ம‌ளிக்கும் மௌல‌விமார் கூட‌ இல‌ங்கையின் சுத‌ந்திர‌  கொண்டாட்ட‌ம் என்றால் ஹராம் போன்றே பார்க்கும் சூழ‌ல் இருந்த‌து.

இத‌னை மாற்றும் முக‌மாக‌ 2007ம் ஆண்டு முஸ்லிம் உல‌மா க‌ட்சியினால் கொழும்பு அல்ஹிதாயா பாட‌சாலையில் சுத‌ந்திர‌ தின‌ நிக‌ழ்வு ந‌டாத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் பிர‌த‌ம‌ அதிதியாக‌ அல‌வி மௌலானா ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளான‌ ரிசாத் ப‌தியுதீன், அமீர‌லி போன்றோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். நாம் அறிந்த‌ வ‌ரை இதுதான் ஒரு முஸ்லிம் க‌ட்சி என்ற‌ வ‌கையிலும் மௌல‌விமார் த‌லைமையிலான‌ முஸ்லிம் அமைப்பு என்ற‌ வ‌கையிலும் இல‌ங்கையில் கொண்டாட‌ப்பட்ட‌ முத‌லாவ‌து சுத‌ந்திர‌ தின‌க்கொண்டாட்ட‌மாகும். இத்த‌கைய‌ வ‌ழி காட்ட‌லை உல‌மா க‌ட்சி செய்து காட்டிய‌ போது முஸ்லிம் ச‌மூக‌ம் எம்மை விய‌ப்புட‌னும் ந‌க்க‌லாக‌வும் பார்த்த‌து.

ஆனாலும் அத‌னை ப‌ல‌ரும் ஏற்காத‌ நிலையில் பொது ப‌ல‌ சேனா உருவாகி இது ப‌ற்றி க‌ண்டித்து முஸ்லிம்க‌ளின் தேச‌ப்ப‌ற்றில் ச‌ந்தேக‌ம் தெரிவித்த‌ பின்பே முஸ்லிம் ச‌மூக‌ம் விழித்த‌து. நாட்டின் தேசிய‌ கொடியை முஸ்லிம்க‌ள் ப‌ற‌க்க‌ விட‌ வேண்டுமென்று உல‌மா ச‌பையும் சொல்லிய‌து.

ஆக‌வே இத்த‌கைய‌ சுத‌ந்திர‌ தின‌ கொண்டாட்டத்தை த‌ற்போது முஸ்லிம்க‌ளும் முன்நின்று ந‌ட‌த்துவ‌தை ம‌கிழ்ச்சியுட‌ன் பார்க்கிறோம் என‌ முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்