கோடிஸ்வரன்தடையாக இருக்கிறார் என்று தப்பித்துக் கொள்ள வேண்டாம்

கல்முனைக்கு மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதற்காக கல்முனைத் தொகுதியின் சாய்ந்தமருது பிரதேச சபைக்கு உட்பட்ட பொலிவேரியன் குடியிருப்பை அண்மித்த பகுதியில் 100 பேச் காணி ஏற்பாடு செய்யப்பட்டு சகல வசதிகளும் உள்ளடங்கலாக கட்டிடம் ஒன்றினை நிர்மாணிக்க போவதாகவும், கடந்த வருடம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தெரிவு செய்யப்பட்ட குறித்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவரப் போவதாகவும், கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை பிரதியமைச்சருமான ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பில் செய்திகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கடந்த வருடம் அமைச்சர் தயாகமகே அவர்களின் இனவாத நடவடிக்கையின் ஒரு அங்கமாக கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அம்பாறைக்கு இடம் மாற்றம் செய்து கொண்டு செல்லப்பட்டாதாக கூறப்பட்ட வேளையில் உல‌மா க‌ட்சி உட்ப‌ட‌ ப‌ல ச‌மூக வ‌லைய‌த்த‌ள‌ அக்க‌றையாள‌ர்களும் முஸ்லிம் காங்கிர‌ஸின் கையாலாக‌ த‌ன‌த்தை க‌ண்டித்த‌தும், குறித்த வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் க‌ல்முனைக்கு வ‌ருவ‌த‌ற்கான‌ பிர‌தான‌ கார‌ண‌மாகும். இருந்த போதிலும் அது மீண்டும் கல்முனைக்கு கொண்டுவரப்பட இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குறியதாக இருந்தாலும், அது கொண்டுவரப்படுவதற்கு  கடைசி நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் அவர்கள் தடையாக இருக்கிறார் என்று அறிக்கையை விட்டு தப்பித்துக் கொள்ள வேண்டாம் என உலமா கட்சி பிரதியமைச்சர் ஹரீஷ் அவர்களை கேட்டுக் கொள்கிறது

அஹமட் புர்கான்
உயர்சபை உறுப்பினர்
உலமா கட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்