அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
உலமா கட்சித்தலைவரின் வீட்டு கக்கூஸ் பிரச்சினை என்றாலும் அதற்கும் முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணமா என ஒருவர் கேட்டுள்ளார். இன்று வரை உலமா கட்சித்தலைவர் தனது சொந்தப்பிரச்சினைக்காக முஸ்லிம் காங்கிரசை விமர்சித்ததில்லை. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்களின் நிலைக்காகவே உலமா கட்சி குரல் எழுப்பிய போதே முஸ்லிம் காங்கிரசின் ஏறாவூர் அபிமாணி ஒருவர் இப்படி கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் யார் கையில் உள்ளதோ அவர்கள்தான் இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டும். எமக்கு மத்திய அரசாங்கத்தில் நிதியில்லை என அப்பாவி மக்களை ஏமாற்றலாம். எம்மை ஏமாற்ற முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் என்பது கிழக்கு மாகாண சபையில் மட்டும் உள்ள கட்சி என்றால் இதனை கொஞ்சம் ஏற்கலாம். ஆனால் இக்கட்சியின் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர், பங்காளி. மக்கள் இவர்களை ஆட்சிக்கு அனுப்பி வைத்திருப்பது ஆட்சியாளர்களின் கக்கூசை கழுவுவதற்கல்ல; மக்கள் பிரச்சினைக்கு அரசை தட்டிக்கேட்பதற்காகத்தான்.
அரசாங்கம் நிதி தரவில்லை என்றும் அதனை கேட்டுப்பெறும் ஆளுமை தமது தலைவருக்கும் இல்லை என்றால் ஏன் இவர்கள் இன்னமும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருக்க வேண்டும்?
சும்மா சுக போகம் அனுபவிக்கவும், பந்தா காட்டவும், படம் காட்டவும் மக்கள் இவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்கவில்லை. மஹிந்த ஆட்சியில் எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என அன்று சாக்கு போக்கு சொன்னார்கள். இன்று மத்திய அரசு நிதி தரவில்லை என சாக்கு சொல்லிக்கொண்டு தமது சாக்குகளை மட்டும் நிரப்பிக்கொள்கிறார்கள்.
ஆகவே உலமா கட்சித்தலைவரை விமர்சிப்பதை விடுத்து மக்கள் அதிகாரம் பெற்றவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முன் வர வேண்டும் அல்லது தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
- அஹமட் புர்கான்.
உலமா கட்சி உயர் சபை உறுப்பினர்
Comments
Post a comment