ம‌து, மாது, சூது போன்ற‌வ‌ற்றிலிருந்து முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை த‌விர்த்திருக்க‌ வேண்டும்

ம‌து, மாது, சூது போன்ற‌வ‌ற்றிலிருந்து முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை த‌விர்த்திருக்க‌ வேண்டும் என‌ த‌லைமைக்கு க‌டித‌ம் மூல‌ம் தெரிவித்த‌மைக்காக‌ அக்க‌ட்சியின் ம‌சூரா ச‌பை மௌல‌விமார்க‌ளை உல‌மா க‌ட்சி பாராட்டியிருப்ப‌துட‌ன் இத்த‌கைய‌தொரு மோச‌மான‌ த‌லைமையே இன்றைய‌ மு. கா த‌லைமை என்ப‌தை உல‌மாக்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ ஏற்றுக்கொண்டுள்ள‌தையே இது காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை மீது அவ‌ர‌து க‌ட்சியின‌ரால் முன் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ம‌து, மாது, சூது, ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை கோடிக‌ளுக்கு விற்ற‌மை ப‌ற்றி மு. காவின் ம‌சூரா ச‌பை மௌல‌விமார் ஹ‌க்கீமையும் ப‌சீரையும் ஒன்றாக‌ வைத்து ப‌கிர‌ங்க‌மாக‌ விசாரிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டிருந்த‌து. இத‌ற்க‌மைய‌ விசாரணை மேற்கொள்ள‌ மேற்ப‌டி மௌல‌விமாருக்கு க‌ட்சியில் அதிகார‌ம் இல்லை என‌ தெரிகிற‌து. இருந்த‌ போதும் இது ப‌ற்றி த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுதியிருப்ப‌து பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ இருப்பினும் க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் அமைச்ச‌ர‌வை அமைச்ச‌ர்க‌ள் ம‌ஹிந்த‌வுட‌ன் நேர‌டியாக‌ பேசாம‌ல் க‌டித‌ம் எழுதிய‌ கோமாளித்த‌ன‌த்தை நினைவு ப‌டுத்துகிற‌து.

இத்த‌கைய‌தொரு மோச‌மான‌ த‌லைமையின் கீழ் தெரியா த‌ன‌மாக‌ இந்த‌ மௌல‌விமார் இருந்த‌மைக்காக‌ யாரும் அவ‌ர்க‌ளை குற்ற‌ம் பிடிக்க‌ முடியாது. ஆனால் த‌லைமை இப்ப‌டித்தான் உள்ள‌து என்று தெரிந்த‌ பின்னும் அக்க‌ட்சிக்கு ஆத‌ர‌வு வ‌ழ‌ங்குவ‌து ச‌ரியா என்ப‌தை மேற்ப‌டி மௌல‌விமார் சிந்திக்க‌ வேண்டும்.

ர‌வூஃப் ஹ‌க்கீம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி என்றும் அவ‌ர் ச‌மூக‌த்தை ஏமாற்றி பிழைப்பு ந‌ட‌த்துகிறார் என்றும் நாம் 2002ம் ஆண்டு காத்தான்குடியில் ந‌டைபெற்ற‌ கிழ‌க்கு மாகாண‌ உல‌மாக்க‌ள் கூட்ட‌த்தில் ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்தோம். அத்துட‌ன் உல‌மாக்க‌ளால் ம‌ட்டுமே முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு சிற‌ந்த‌ இஸ்லாமிய‌ த‌லைமைத்துவ‌த்தை வ‌ழ‌ங்க‌ முடியும் என்ற‌ எம‌து உறுதியான‌ கொள்கையின் அடிப்ப‌டையில் உல‌மா க‌ட்சியை 2005ம் ஆண்டு ஸ்தாபித்துக்காட்டினோம். எம‌து கொள்கையை மௌல‌விமார் ப‌ல‌ரும் ஏற்றிருந்தால் இன்று த‌ம‌து த‌லைமைக்கு தொழுகை, நோன்பு ப‌ற்றி உப‌தேசிக்கும் கேவ‌ல‌ம் வ‌ந்திருக்காது.

ஆக‌வே இப்போதாவ‌து த‌லைமைக்கு த‌ப்பை சுட்டிக்காட்டிய‌மைக்காக‌ மு. கா ம‌சூரா ச‌பை மௌல‌விமாரை பாராட்டுவ‌துட‌ன் குற்ற‌ச்செய‌ல்கள் உண்மை என்ப‌தை மௌல‌விமார் ஏற்றுள்ள‌தால் உட‌ன‌டியாக‌ ஹ‌க்கீமை த‌லைமை ப‌த‌வியில் இருந்து நீக்க‌ வேண்டும் அல்ல‌து மௌல‌விமார் மு. காவிலிருந்து ராஜினாமா செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்