Skip to main content

Posts

Showing posts from February, 2017

தென்கிழக்குப் பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு புதிய மாணவர்களின் முதல்நாள் வருகை

-எம்.வை.அமீர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி பயில்தற்காய் உயிரியால் விஞ்ஞான பிரிவுக்கு 97 மாணவர்களும் பௌதிக விஞ்ஞான பிரிவுக்கு 70 மாணவர்களும் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் 2017-02-27 ஆம் திகதி வருகை தந்து ஆரம்ப நாள் நிகழ்வுகளில் பங்குகொண்டனர். பிரயோக விஞ்ஞான பீடத்த்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல்.செயினுடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் இங்கு உரையாற்றும்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு சட்டரீதியாக உள்ள தண்டனைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார். நிகழ்வின்போது உயிரியால் விஞ்ஞான பிரிவின் தலைவர் ஏ.நஸீர் அகமட் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பிரதிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர் மற்றும் பதில் நூலகர் எம்.எம்.மஷ்றுபா உள்ளிட்டவர்களும் கல்விசாரா

கோடிஸ்வரன்தடையாக இருக்கிறார் என்று தப்பித்துக் கொள்ள வேண்டாம்

கல்முனைக்கு மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதற்காக கல்முனைத் தொகுதியின் சாய்ந்தமருது பிரதேச சபைக்கு உட்பட்ட பொலிவேரியன் குடியிருப்பை அண்மித்த பகுதியில் 100 பேச் காணி ஏற்பாடு செய்யப்பட்டு சகல வசதிகளும் உள்ளடங்கலாக கட்டிடம் ஒன்றினை நிர்மாணிக்க போவதாகவும், கடந்த வருடம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தெரிவு செய்யப்பட்ட குறித்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவரப் போவதாகவும், கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை பிரதியமைச்சருமான ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பில் செய்திகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த வருடம் அமைச்சர் தயாகமகே அவர்களின் இனவாத நடவடிக்கையின் ஒரு அங்கமாக கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அம்பாறைக்கு இடம் மாற்றம் செய்து கொண்டு செல்லப்பட்டாதாக கூறப்பட்ட வேளையில் உல‌மா க‌ட்சி உட்ப‌ட‌ ப‌ல ச‌மூக வ‌லைய‌த்த‌ள‌ அக்க‌றையாள‌ர்களும் முஸ்லிம் காங்கிர‌ஸின் கையாலாக‌ த‌ன‌த்தை க‌ண்டித்த‌தும், குறித்த வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் க‌ல்முனைக்கு வ‌ருவ‌த‌ற்கான‌ பிர‌தான‌

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதி, பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

  (ஆர்.ஹஸன்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்ட களத்துக்கு விரைந்தார்.  இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை கேட்டறிந்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மட்டு. காந்தி சதுக்கத்தில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது. இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு சென்றார்.  அத்துடன், தான் கொழும்புக்கு சென்ற பின்னர் அரச உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் அங்கு உறுதியளித்தார்.  இராஜாங்க அமைச்சரின் வருகைக்க

விரைவில் ம‌ஹிந்த‌ பிர‌த‌ம‌ராக‌லாம் என்ப‌தே மைத்ரி த‌ர‌ப்பின் க‌ருத்து.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொது எதிரணியும் இணைந்து செயற்படுவதே கட்சியின் பலமாகும். தனிக் கட்சி ஆட்சியை அமைக்கவே தயாராகின்றோம். எமது வேலை முடிந்ததும் தேசிய அரசை விட்டு வெளியேறியே தேர்தலில் போட்டியிடும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.  பொது எதிரணியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டமும் செயற்குழுக் கூட்டமும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  எதிர்வரும் தேர்தல்களில் பொது எதிரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமாயின் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் வெளியேற வேண்டும். என பொது எதிரணி உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் கூறுகையில்,  ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன உத்தரவிடும் நிலையில் உடனடியாக நாம் தேசிய அரசை விட்டு வெளியேறி கட்சியை பலப்படுத்தும

உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரின் வீட்டு க‌க்கூஸ் பிர‌ச்சினை என்றாலும்

உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரின் வீட்டு க‌க்கூஸ் பிர‌ச்சினை என்றாலும் அத‌ற்கும் முஸ்லிம் காங்கிர‌ஸ்தான் கார‌ண‌மா என‌ ஒருவ‌ர் கேட்டுள்ளார். இன்று வ‌ரை உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் த‌ன‌து சொந்த‌ப்பிர‌ச்சினைக்காக‌ முஸ்லிம் காங்கிர‌சை விம‌ர்சித்த‌தில்லை.  திருகோண‌ம‌லை மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளின் நிலைக்காக‌வே உல‌மா க‌ட்சி குர‌ல் எழுப்பிய‌ போதே முஸ்லிம் காங்கிர‌சின் ஏறாவூர் அபிமாணி ஒருவ‌ர் இப்ப‌டி கூறியுள்ளார். கிழ‌க்கு மாகாண‌த்தின் ஆட்சி அதிகார‌ம் யார் கையில் உள்ள‌தோ அவ‌ர்க‌ள்தான் இவ‌ற்றுக்கு பொறுப்புக்கூற‌ வேண்டும். எம‌க்கு ம‌த்திய‌ அர‌சாங்க‌த்தில் நிதியில்லை என‌ அப்பாவி ம‌க்க‌ளை ஏமாற்ற‌லாம். எம்மை ஏமாற்ற‌ முடியாது. முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ப‌து கிழ‌க்கு மாகாண ச‌பையில் ம‌ட்டும் உள்ள‌ க‌ட்சி என்றால் இத‌னை கொஞ்ச‌ம் ஏற்க‌லாம். ஆனால் இக்க‌ட்சியின் த‌லைவ‌ர் அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர், ப‌ங்காளி. ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை ஆட்சிக்கு அனுப்பி வைத்திருப்ப‌து ஆட்சியாள‌ர்க‌ளின் கக்கூசை க‌ழுவுவ‌த‌ற்க‌ல்ல‌; ம‌க்க‌ள் பிர‌ச்சினைக்கு அர‌சை த‌ட்டிக்கேட்ப‌த‌ற்காக‌த்தான். அர‌சாங்க‌ம் நிதி த‌ர‌வில்லை என்றும் அத‌னை

நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள்

ஒருவ‌ர் கேட்டுள்ளார் நீங்க‌ள் எப்போது முஸ்லிம் காங்கிர‌சில் சேர்ந்தீர்க‌ள் எப்போது வில‌கினீர்க‌ள் என‌. நான் என‌து 14 வ‌ய‌து முத‌ல் த‌லைவ‌ர் அஷ்ர‌பின் சிஷ்ய‌ன். முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ 86ம் ஆண்டு பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து முதல் அக்க‌ட்சியில்தான் இருக்கிறேன். 1988ம் ஆண்டு க‌ட்சி ப‌திய‌ப்ப‌ட்டு 89ல் நான் முஸ்லிம் காங்கிர‌சின் இணைப்பாள‌ராக‌ த‌லைவ‌ர் அஷ்ர‌பால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டேன். என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் சில‌ த‌னிப்ப‌ட்ட‌ முர‌ண்பாடுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. புலிக‌ளால் என‌து த‌ம்பி உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ல்முனை இளைஞ‌ர்கள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌த்தில் அஷ்ர‌ஃப் ச‌ரியான‌ அணுகு முறையை கையாண்டு அவ‌ர்க‌ளை விடுவிக்க‌ முய‌ல‌வில்லை என்ப‌து என‌க்குள் ம‌ன‌ வ‌ருத்த‌ம். அப்போது அஷ்ர‌ஃபால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ பிரேம‌தாச‌வுக்கும் புலிக‌ளுக்குமிடையில் நெருங்கிய‌ ந‌ட்பு இருந்த‌து. ஆனாலும் நான் மு. காவிலிருந்து வில‌க‌வில்லை. அத‌ன் பின் 95ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது என‌க்கும் த‌லைவ‌ருக்குமிடையில் முர‌ண்பாடு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர் ச‌ந்திரிக்காவை ஆத‌ரிக்க‌ வேண்டும் என‌ அறிக்கை விட்டார். ச‌ந

இலங்கை முஸ்லிம்களும் மக்கள் போராட்ட வழிமுறைகளும்

Baseer Segu Davood """""""""""""""""""""""""" ”""""""'"""""'"""""" முஸ்லிம்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது சமூக, மத ரீதியிலோ பெரும்பான்மைப் பலமுள்ள சக்திகளின் செயல்களால் திட்டமிட்ட அடிப்படையில் பாதிப்படையும்  போதோ அல்லாது வேறெந்த உள்நாட்டு சதிகளுக்கு எதிராகவோ பாரிய அளவில் மக்கள் போராட்டங்களைச் செய்து தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலக அரங்குக்கோ, இலங்கையின் முற்போக்கு சக்திகளின் முன்னிலைக்கோ கொண்டு சென்ற வரலாற்றுப் பதிவுகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான  செய்கைகளுக்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்களை நாம் இலங்கையில் செய்திருக்கிறோம் ஆனால், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் சக்திகளின் கொடுமை இழைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை வெளி நாடுகளில், முக்கியமாக முஸ்லிம் நாடுகளிலேதானும் எவரும் முன்னெடுக்கவில்லை. 1985 இல் இருந்

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல-

அட்டைப் பண்ணைக்கான அடிக்கல் விழாவில் அமைச்சர் றிசாட் அமைச்சின் ஊடகப்பிரிவு மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750 மில்லியன் ரூபா  வருமானம் பெறக்கூடிய அட்டைப் பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டார், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் எம்.பிக்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மஸ்தான் ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றனர். அமைச்சர் றிசாட் உரையாற்றிய போது 'மன்னார் மாவட்ட மீனவர் சமூதாயத்தின் மற்றுமொரு மைல்கல்லாகவே நான் இதன

இக்ரா ஆங்கில கல்விநிலையத்தின் சான்றிதழ் வழங்கலும் கௌரவிப்பும்!

-எம்.வை.அமீர்,யூ.கே.காலிதின்- பிரதேசத்தில் புகழ்பெற்ற மாளிகைக்காடு இக்ரா ஆங்கில கல்விநிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாணவர்கள் மற்றும் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில்  2017-02-24  ஆம் திகதி இக்ரா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்வரின் வழிகாட்டலில் கல்வி நிலையத்தின் ஆங்கில கல்விக்கான இணைப்பாளர் ஏ.எச்.அல் ஜவாகிர் தலைமையில் இடம்பெற்றது. கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அபூவக்கர் றமீஸ் அவர்களும் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக விரிவுரையாளர் எஸ்.எம்.சதாத், விரிவுரையாளர் என்.நஹீம், விரிவுரையாளர் எம்.பி.முஹம்மட் சிராஜ், விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஹக்கீம், நிலஅளவையாளர் ஏ.அர்.நைசர்கான் உள்ளிட்டவர்களும் அனுசரணையாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின்போது பிரதம மற்றும் கௌரவ அதிதி விஷேட அதிதிகள் நினைவு

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ச்சொல்லும் ஐ நா.

2016 ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 20ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் மூலம் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக இவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும்,கூறியுள்ளதாவது- 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதற்காக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஐ.நா.வின் இடம்பெயர் மக்கள் தொடர்பான பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலங்கள் அனைத்துலக தரங்களுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டமூலமானது அந்த சமூகத்தின் பெண்களின் ஆலோசனைகளுடன் திருத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான அநீதிகளும் இழைக்கப்படக் கூடாது.

நஸ்ப் லங்காவின் முஸ்லிம் அரசியல் விழிப்பூட்டல் மக்கள் சந்திப்பு…

பொது அழைப்பிதல் நஸ்ப் லங்காவின் முஸ்லிம் அரசியல் விழிப்பூட்டல் மக்கள் சந்திப்பு… தலைப்பு : இன்றைய முஸ்லிம் அரசியலின் சவால்களும் அதற்கான தீர்வுகளும் பிரதம அதிதி: பொறியியலாளர் M.M அப்துல் ரஹ்மான் இடம்: 26-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேரம்: காலை 9 மணி தொடக்கம் முற்பகல் 1மணி வரை ஏற்பாடு: நஸ்ப் லங்கா சமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு தொடர்புகளுக்கு - திரு  Marzook K Lebbe  - 0777157190  தலைப்பின் உள்ளடக்கம் ! 1- அரசியல் யாப்பு சீர் திருத்த விடயத்தில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு ! 2- வட,கிழக்கு இணைப்பு தொடர்பில் உண்மை நிலைப்பாடு ! 3- எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய அலசலும் அது சொல்லும் விடயமும் ! 4- முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையா ? 5- தகவல் அறியும் சட்ட மூலத்தின் முக்கியத்துவம் ! அனைவரும் வருக உங்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு வஸ்ஸலாம் நஸ்ப் லங்கா

ஜனாதிபதியின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

வெலிமடையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு ++++++++++++++++++++++++++++++ +++++++++++ இனங்களுக்கிடையில் ஒற்றுமை- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெலிமைடயில் தெரிவித்தார்.  இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன இணைந்து மாவட்ட மட்டத்தில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு வெலிமடை போகஹகும்பர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மருதமுனை காரியப்பர் வீதி அமைச்சர் றிசாட்டினால் காபட் வீதியாக புனரமைப்பு.

மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்தார். மேற்படி வீதியானது மிக நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாகக் காட்சியளிக்கின்றது. இதனால் இந்தப்பாதையால் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் விசனத்துக்கும் உள்ளாகியிருந்தது. ஏற்கனவே துல்கர் நயீம் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மருதமுனையின் உள்வீதிகளில் முக்கியமான வீதிகள் அனைத்துமே ஜப்பானிய ஜெய்கா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு கொங்கிறீட் வீதிகள் இடப்பட்டிருந்தன. இந்நிலையில் பிராந்திய ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மருதமுனையின் முக்கிய நான்கு வீதிகளையும்  புனரமைக்க போவதாகவும் இவ்வீதிகளை ஜெய்கா திட்டத்தின் கீழ் உள்வாங்க வேண்டாம் என மாற்றுக்கட்சி பிரமுகர்கள் வேண்டிக் கொண்டதை அடுத்து காரியப்பர் வீதி உட்பட அல் ஹம்றா வீதி , லைப்ரறி வீதி , பாக்கியதுஸாலிகா வீதி ஆகியவற்றை உள்வாங்

இந்நாட்டு முஸ்லிம்கள் இலங்கையில் விருந்தாளிகள் போல் வாழ்ந்து விட்டுப் போக முடியாது.

அறிஞர் சித்திலெப்பை நூல் வெளியீட்டு நிகழ்வில்... முஸ்லிம் கட்சிகள் தனித்துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடையாளத்துடன் முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் மட்டும் அக்கறை காட்ட முற்படுவது விரும்பத்தகாத  பின்விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் தேசிய விவகாரங்களில் நீதி நியாயமான நிலைப்பாடுகளை முஸ்லிம் சமூகம் சார் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையே  பெரும்பான்மை சமூகம் எதிர்பார்க்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டார். பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் தலைவரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான  கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய ' முஸ்லிம் அரசியல் முன்னோடி- அறிஞர் சித்திலெப்பை' நூல் வெளியீட்டு விழா மற்றும் அவர் பற்றிய ஆவணப்படம் இறுவட்டு வெளியீடு என்பன கெட்டம்பே ஓக்ரே ரீஜன்சி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,   இன்றைய அரசியலில்  முஸ்லிம் கட்சிகள் தனித்துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடையாளத்துடன் செயற்பட்டு வருகின்றன. ஆனால் இக்கட்சிகள் தேசிய விடயங்களில்

கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை பெற வேண்டிய தேவையில்லை

எதிர்காலத்தில் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் பெற வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் 3 மாதங்களில் இணையத்தினூடாக நகர அபிவிருத்தி அதிகாரச சபையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை அமைக்கப்படும்” என்று மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பம்பலபிட்டியிலிருந்து வௌ்ளவத்தை வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, அநாவசியமான கட்டங்கள், 1,800 அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் பெற வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் 3 மாதங்களில், அனுமதி பெறுவதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதாவது, எந்தவொரு நபரும் இணையத்தினூடாக நகர அபிவிருத்தி அதிகாரச சபை

365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் இன்று குருநாகல் தோரயாய வருகிறார் அமைச்சர் ரவூப் ஹகீம்.. ..............................

  ரிம்சி ஜலீல் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க  பாரிய நீர் விநியோகத்திட்டத்தின் கீழ் தோரயாய நீர் வழங்கல் திட்டம் 365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் (20/2/2017) இன்று 2 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொணடு வேலைகளை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கவுள்ளார்..

. சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்­பா­விட்டால் நான் ஒரு முஸ்­லி­மாக இருக்க முடி­யாது

ARA.Fareel- முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது போதும்' என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்­டார்கள். ஹசன் அலியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பறிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற தகவல் கிடைத்­ததும் பலர் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­விட்­டனர்.  என்ன நடந்­தது சேர்? கூறு­வீர்­களா? என்று கேட்டோம்.அவர் அமை­தி­யாக,  நிதா­ன­மாக பதி­ல­ளித்தார்.'' டிசம்பர் 14 ஆம் திகதி நடை­பெற்ற உச்ச பீட கூட்­டத்தில் பொதுச் செய­லாளர் பதவி விவ­கா­ரத்தில் நானும் தலை­வரும் முரண்­பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிள­வு­ப­டக்­கூ­டாது. கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தலை­வரும், நானும் கதைத்து ஒரு முடி­வுக்கு வர வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக கமிட்­டி­யொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்­பீட உறுப்­பினர் அன்­வரின் தெமட்­ட­கொ­டை­யி­லுள்ள காரி­ய

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட ஜாதிக ஹெல உறுமய

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தின்கீழ், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிட்டது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தரலை முன்னிட்டு, 2015 ஜீலை மாதம் 05 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்தக் கூட்டணயில் ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் போட்டியிட்ட இந்தக் கூட்டணியில் 106 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

ம‌து, மாது, சூது போன்ற‌வ‌ற்றிலிருந்து முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை த‌விர்த்திருக்க‌ வேண்டும்

ம‌து, மாது, சூது போன்ற‌வ‌ற்றிலிருந்து முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை த‌விர்த்திருக்க‌ வேண்டும் என‌ த‌லைமைக்கு க‌டித‌ம் மூல‌ம் தெரிவித்த‌மைக்காக‌ அக்க‌ட்சியின் ம‌சூரா ச‌பை மௌல‌விமார்க‌ளை உல‌மா க‌ட்சி பாராட்டியிருப்ப‌துட‌ன் இத்த‌கைய‌தொரு மோச‌மான‌ த‌லைமையே இன்றைய‌ மு. கா த‌லைமை என்ப‌தை உல‌மாக்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ ஏற்றுக்கொண்டுள்ள‌தையே இது காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைமை மீது அவ‌ர‌து க‌ட்சியின‌ரால் முன் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ம‌து, மாது, சூது, ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை கோடிக‌ளுக்கு விற்ற‌மை ப‌ற்றி மு. காவின் ம‌சூரா ச‌பை மௌல‌விமார் ஹ‌க்கீமையும் ப‌சீரையும் ஒன்றாக‌ வைத்து ப‌கிர‌ங்க‌மாக‌ விசாரிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டிருந்த‌து. இத‌ற்க‌மைய‌ விசாரணை மேற்கொள்ள‌ மேற்ப‌டி மௌல‌விமாருக்கு க‌ட்சியில் அதிகார‌ம் இல்லை என‌ தெரிகிற‌து. இருந்த‌ போதும் இது ப‌ற்றி த‌லைவ‌ருக்கு க‌டித‌ம் எழுதியிருப்ப‌து பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ இருப்பினும் க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் அமைச்ச‌ர‌வை அமைச்ச‌ர்க‌

வை எல் எஸ் ஹ‌மீத் கொச்சிப்ப‌டுத்தியுள்ள‌மை அவ‌ர‌து அர‌சிய‌ல் அறிவுக்குறையை காட்டுகிற‌து

த‌ம‌து க‌ட்சி கிழ‌க்கு மாகாண‌ ச‌பையை கைப்ப‌ற்றுமாயின் ஐந்து வ‌ருட‌ங்க‌ளுள் குடிசை வீடுக‌ளில் ஒழிப்போம் என‌ அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் தேசிய‌ த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் சொல்லியிருப்ப‌தை வை எல் எஸ் ஹ‌மீத் கொச்சிப்ப‌டுத்தியுள்ள‌மை அவ‌ர‌து அர‌சிய‌ல் அறிவுக்குறையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. அக்க‌ட்சி மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, அர‌சிய‌ல் அதிகார‌த்தின் மூல‌ம் ந‌ட‌க்க‌ முடியாத‌ எதையும் சாதிக்க‌ முடியும் என்ப‌தை இந்த‌ நாட்டின் அர‌சிய‌ல் காட்டித்த‌ந்துள்ள‌து. ஒரு ஆளும் க‌ட்சி உறுப்பின‌ர் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராக‌ இருந்தால் அவ‌ர் மாகாண‌ ச‌பையின் ஒதுக்கீடு ம‌ட்டும‌ன்றி ச‌ர்வ‌தேச‌ உத‌விக‌ளையும் பெற‌ முடியும். இத‌னால்தான் க‌ல்முனை முஸ்லிம் காங்கிர‌சின் மேய‌ராக‌ இருந்த‌ நிசாம் காரிய‌ப்ப‌ர் க‌ல்முனையை ஜேர்ம‌ணியுட‌ன் இணைக்க‌ப்போவ‌தாக ம‌க்க‌ளை ஏமாற்றினார். ஒரு மாந‌க‌ர‌ மேய‌ரால் ச‌ர்வ‌தேச‌த்தின் நிதியுத‌வியை பெற‌ முடியாது என்றிருப்பின் ச‌ட்ட‌த்த‌ர‌ணியான நிசாம் காரிய‌ப்ப‌ர் இவ்வாறு சொல்லியிருக்க‌ மாட்டார். உண்மையில் நிசாம் காரிய‌ப்பரால் அவ்வாறு செய்ய‌க்கூடிய‌ அர‌சிய

முஸ்லிம் அரசியலில் எப்படியான மாற்றம் தேவை?

சிராஜ் மஷ்ஹூர் முஸ்லிம் அரசியலில் மாற்றம் தேவை என்கிற குரல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.  இப்போது மு.கா.வின் உள்வீட்டுச் சண்டை ஊரம்பலத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் குடுமிச் சண்டைக்குப் பிறகு, இந்தக் குரலை பரவலாக மீண்டும் கேட்கிறோம். உண்மைதான், மாற்றம் தேவைதான். ஆனால், அது எவ்வாறான மாற்றம் என்பதில்தான்  நமது அடிப்படைப் பிரச்சினையே தங்கியிருக்கிறது. மாற்றம் என்பது மேலெழுந்தவாரியான மாற்றமன்று. அடிப்படை மாற்றமே இங்கு அவசியப்படுகிறது. 1980களின் அரசியல் சூழல்தான் தனிக்கட்சி அரசியலைச் சாத்தியப்படுத்தியது.  அதற்கு முன்னரும் தனிக்கட்சி பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வந்தது. எனினும், அதற்கு வாய்ப்பான அரசியல் சூழல் அப்போதுதான் முதல் முறையாகக் கனிந்தது. முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பியபோதுதான், ஒட்டு மொத்த சமூகமும் பாதுகாப்பின்மையை உணரத் தலைப்பட்டது. அதுவரை சிந்திக்காத ஒரு புதிய கோணத்தின் மீது எல்லோரினது கவனமும் திரும்பத் தொடங்கியது. இந்த அரசியல் வழிமுறை கிழக்கில்தான் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பத்தில் உரிமை அரசியல் என்று தொடங்கி பெரும் கொள்கை முழக்கங்கள் வெடித்து

மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டம்! தேவையான உதவிகளை வழங்கத் தயார்

++++++++++++++++++++++++++++++ +++++++++++++ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு மத்ரஸா மாணவர்களுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன நடத்தப்பட வேண்டும் என நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை பூர்த்தி செய்ய முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க செயலாகும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த முயற்சிக்குத் தேவையான உதவிகளை வழங்கத்; தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். .  இதேவேளை, பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவது சிறப்பாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- இலங்கையில் இயங்கி வருகின்ற மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டங்களோ, பரீட்சைகளோ இல்லை. தத்தமது கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு மத்ரஸாக்களும் இயங்கி வருகின்றன. இது சில சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்

”பெண்ட்ரைவ்”வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன் படுத்தி ” பெண்ட்ரைவ் ” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு . கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து “ எங்கள் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கான முன்னனி ( சுரகிமு ஸ்ரீலங்கா )” என்ற முஸ்லிம் விரோத இனவாத அமைப்புஜனவரி மாதம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ’ பெண்ட்ரைவ் ’ இல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து   அதிகார சபை , கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை (16) முறைப்பாடொன்றை செய்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்பாட்டாளர்களின் இந்த முறை கேடான செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு | பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது . சிங்களப் பத்திரிகை ஒன்றில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் குறித்த செய்தியின் பின்னரேயே இந