வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா?
வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா?
இனவாதச்சூழலியலாளர்களிடம் முஸ்லிம் எம்பிக்கள் கேள்வி
-          சுஐப்எம்காசிம்
வடமாகாணத்தில்தமது பூர்வீகப்பிரதேசங்களில்குடியேற முயற்சிக்கும்முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச்சூழலியலாளர்களும்இனவாதிகளும்மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குமுஸ்லிம்அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும்சமூகம் சார்ந்தநிறுவனங்களின் பிரதிநிகள்தமதுஒட்டுமொத்தமான எதிர்ப்பைவெளியிட்டதோடு கண்டனத்தையும்தெரிவித்தனர்.
வில்பத்துக்காட்டை அழித்துமுஸ்லிம்கள்அங்குசட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக இனவாதிகள்மேற்கொண்டுவரும்தீவிரமான, பொய்யானபிரசாரம் தொடர்பிலும், வில்பத்துசரணாலயத்தை விஸ்தரித்துவனஜீவராசிகள் வலயமாகபிரகடனப்படுத்தப்போவதான ஜனாதிபதியின்அறிவிப்பினால் முஸ்லிம்சமூகம்எதிர்கொள்ளப்போகும்பாதிப்புகள் குறித்தும்விளக்கும்செய்தியாளர்மாநாடு இடம்பெற்றபோதேமேற்கண்டவாறுதெரிவித்தனர்.
ஸ்ரீலங்காமுஸ்லிம்மீடியாபோரத்தின் ஏற்பாட்டில்அதன்தலைவர்என்எம்அமீன்தலைமையில் இடம்பெற்றஇந்தஊடகவியலாளர்மாநாட்டில்அமைச்சர்களான எச்எம்பௌசி, ரிஷாட்பதியுதீன், பிரதியமைச்சர்அமீர்அலி, இராஜாங்கஅமைச்சர்எம்எல் எம்ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்றஉறுப்பினர்களானமுஜிபுர்ரஹ்மான், இஷாக்ரஹ்மான், எம்எச்எம்நவவி, மாகாணசபைஉறுப்பினர்களானஅர்ஷத், ஜனுபர், தேசியஐக்கியமுன்னனியின்தலைவர்ஆஷாத்சாலி, ஜம்இய்யதுல்உலமா சபையின்பிரதிச்செயலாளர்தாசிம்மௌலவி மற்றும்முஸ்லிம்லீக்கைச்சேர்ந்தசட்டத்தரணிஷஹீட்ஆகியோர் உட்படசமூகநிறுவனங்களின்பிரதிநிதிகள்இந்தஊடகவியலாளர்மாநாட்டில்பங்கேற்றனர்.
பாராளுமன்றஉறுப்பினர்முஜிபுர்ரஹ்மான் இங்குகருத்துத்தெரிவிக்கும்போதுகூறியதாவது,
1990 ஆம்ஆண்டுபுலிகளால் அடித்துவிரட்டப்பட்டவடக்கு முஸ்லிம்கள்மீண்டும்தமதுபரம்பரைக்காணிகளில் குடியேறும்போதுஇனவாதிகளும் இனவாதச்சூழலியலாளர்களும்அவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். தமதுசொந்தக்காணிகளில்வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளைஅழித்துக்குடியேறும் போதுவில்பத்தைஅவர்கள்அழிக்கின்றார்கள் என்றும்இவர்கள்கூக்குரல்இடுகின்றனர். அப்படியானால்அவர்கள்கள்ளத்தோணிகளாக வந்தவர்களா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ,  கொண்டுவரப்பட்டவர்களா? அப்படியில்லையென்றால் அவர்கள்வானத்தில் இருந்துகுதித்தவர்களா? சூழலியலாளர்களிடம்இவற்றைக்கேட்கின்றேன்.
26 வருடக்களாகதென்னிலங்கையில் மூன்றுபரம்பரையாகவாழும்இவர்கள் உடுத்தஉடையோடுநிர்க்கதியாகவந்தவர்களே என்பதைநான்சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். அவர்கள்வாழ்ந்த காணிகள்பல்வேறு வழிகளில்ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அங்குவாழ்ந்தோர்அவர்களின்காணிகளில்ஒருபகுதியைஆக்கிரமித்துள்ளனர்.இன்னும்சிலகாணிகள்புலிகளினால்சூறையாடப்பட்டுமாவீரர்களுக்குபகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் எஞ்சியிருக்கும்காணிகளில்குடியேறும்போதுதான்இனவாதிகளின்கொடுமைதாங்கமுடியவில்லை.
புலிகளின்போராட்டத்திற்குமுஸ்லிம்கள்ஒத்துழைப்புவழங்காததாலேயேஅவர்கள்வெளியேற்றப்பட்டனர். புலிகளுடன்ஒத்துப்போயிருந்தால்அவர்களுக்குஇந்தஅவலம்ஏற்பட்டிருக்காது. அரசாங்கமும், சகோதரசிங்களமக்களும், மீள்குடியேற்றத்திற்குதடைபோடும்இனவாதிகளும்இந்தஉண்மையைதெளிவாகவிளங்கிக்கொள்ளவேண்டும்.யதார்த்தத்தைவிளங்காதுஇனவாதிகள்அமைச்சர்ரிஷாட்டும்முஸ்லிம்களும்காடுகளைஅழிப்பதாககூப்பாடுபோடுகின்றனர்.
முஸ்லிம்கள்வில்பத்துக்காட்டைஆக்கிரமிப்பதாகஒருபிரமையைஏற்படுத்திசிங்களசமூகத்தின்மத்தியில்ஒருபிழையானகருத்தைவிதைத்துவரும்இனவாதச்சூழலியாலாளர்களும், ஊடகங்களும்வவுனியாமாவட்டத்திலுள்ளவனபரிபாலனத்திணைக்களத்திற்குஉரித்தானகலாபோகஸ்வெவபிரதேசத்தில்அம்பாந்தோட்டையிலிருந்துமக்களைக்கொண்டுவந்துவீடமைத்துக்கொடுத்து, தொழில்வழங்கி, அங்குகுடியமர்த்தி ’’நாமல்கம’’ என்றகிராமமாகஅதனைஆக்கியிருப்பதைப்பற்றிஏன்வாய்திறக்கமறுக்கின்றனர்.
வில்பத்துக்காடழிப்புத்தொடர்பில்முஸ்லிம்களையும்அமைச்சர்ரிஷாட்டையும்குற்றஞ்சாட்டிவரும்முன்னாள்அமைச்சர்டலஸ்அழகப்பெருமவிற்குஇந்தவிடயங்கள்கண்ணுக்குத்தெரிவதில்லையா? அல்லதுஇவர்கள்போன்றஅரசியல்வாதிகளின்பின்புலத்தில்இனவாதச்சூழலியலாளர்கள்தொழிற்படுகின்றனரா? இந்தச்சந்தேகம்எமக்குஎழுந்துள்ளதுஎன்றுதெரிவித்தார்.
தேசியஐக்கியமுன்னணியின்தலைவர்அசாத்சாலிஇங்குகூறியதாவது,
முஸ்லிம்களின்மீள்குடியேற்றப்பிரச்சினையைஅரசாங்கம்ஒருசமூகத்தின்பிரச்சினையாகவோ, அல்லதுஒருசாராரின்பிரச்சினையாகவோகருதாமல்தேசியப்பிரச்சினையாகபார்க்கவேண்டும், இந்தவிடயங்களில்அரசுக்கேநிறையப்பொறுப்புகள்உண்டு. முஸ்லிம்களாகியநாம்ஈழம்கேட்கவில்லைஎங்களை,எங்களதுசொந்தஇடங்களில்நிம்மதியாகவாழவிடுங்கள்.
ஒட்டாராகுணவர்த்தனபோன்றவர்கள்எவருடையபின்புலத்தில்செயற்படுகின்றார்கள்என்பதுஅவர்களதுநடவடிக்கைகளில்தெளிவாகவிளங்குகின்றது. வில்பத்துப்பிரச்சினையில்மூக்கைநுழைத்துள்ளடலஸ், உதயகம்மன்பிலபோன்றவர்கள்அதிகாரத்துக்குவரத்துடிக்கின்றார்கள்என்பதுஅவர்களதுஇனவாதக்கருத்துகளிலிருந்துபுலப்படுகின்றது.
ஜனாதிபதியும்பிரதமரும்ஓரிடத்திலிருந்துஅமர்ந்துபேசிமுஸ்லிம்களின்பிரச்சினைக்களுக்குமுடிவுகட்டவேண்டும்.தற்போதுபொதுபலசேனாவும்மகிந்தஅரசின்முக்கியஸ்தர்களும்முஸ்லிம்களுக்குஇழைக்கப்பட்டஅட்டூழியங்கள்தொடர்பில்மாறிமாறிவெளியிடும்கருத்துக்கள்எங்கள்சமூகத்தைஅவர்கள்எப்படிபந்தாடியிருக்கின்றார்கள்என்பதைஉணர்ந்துகொள்வதற்குப்போதுமானது.
அமைச்சர்ரிஷாட்பதியுதீன்இங்குகூறியதாவது,
வடமாகாணமுஸ்லிம்கள்அகதிகளாகதென்னிலங்கையில்வாழ்ந்தகாலத்திலேஅவர்கள்வாழ்ந்தபல்லாயிரக்கணக்கானஏக்கர்காணிகளை, வனவளஅதிகாரிகள் 2012 ஆம்ஆண்டுஒக்டோபர் 10 ஆம்திகதிஜிபிஎஸ்முறையின்கீழ்கொழும்பில்இருந்துகொண்டுவர்த்தமானிப்பிரகடனம்செய்தனர். இதன்மூலம்முஸ்லிம்களுக்குபெரும்அநீதிஇழைக்கப்பட்டது. இந்தப்பிரகடனம்மேற்கொண்டவிடயம் 2015 ஆம்ஆண்டுதான்வெளியேதெரியவந்தது.
முசலிப்பிரதேசசபைக்குட்பட்ட, மருதமடுகிராமசேவகர்பிரிவிலுள்ளமுஸ்லிம்களுக்குச்சொந்தமான 2800 ஹெக்டேயர்காணிகளைவனபரிபாலனத்திணைக்களம்விளாத்திக்திக்குளம்என்றபெயரில்பிரகடனப்படுத்தியது. இதனால்பாதிக்கப்பட்டமக்களுக்காகஅந்தப்பிரதேசமக்களின்பிரதிநிதிஎன்றவகையில்கடந்தஅரசாங்கத்தில்நாம்மேற்கொண்டமுயற்சிகளின்விளைவினாலேயேஅவர்களுக்குஅரைஏக்கர்வீதம்காணிகள்வழங்கப்பட்டது. 2800 ஹெக்டேயர்காணிகளைஇழந்தஅந்தமக்களுக்குஆக 208 ஹெக்டேயரேவழங்கப்படிருக்கின்றது. புலிகளினால்அநீதிஇழைக்கப்பட்டஇந்தமக்களுக்குகடந்தஅரசின்இந்தநடவடிக்கைகள்மேலும்அநியாயத்தைஏற்படுத்தியுள்ளன.நொந்துபோனஇந்தமக்கள்மீளக்குடியேறும்போதுஇனவாதிகள்இவ்வாறுமீண்டும்கொடுமைப்படுத்துகின்றனர்.
2012 ஆம்ஆண்டுவெளியிடப்பட்டவர்த்தமானிஅறிவித்தலுக்குஎதிராகநாங்கள்சட்டநடவடிக்கைஎடுக்கதயாராகின்றோம்எனவும்அமைச்சர்மேலும்குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்