Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்து முடிக்கும் வரை தூங்கிய அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரஊப் ஹக்கீம்



எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்து முடிக்கும் வரை தூங்கிவிட்டு இப்போது மேற்படி அறிக்கையின் அடிப்படையில் உடனடி தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதம் என  சில சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கும் அரசாங்கத்தின்; ஜனநாயக விரோத போக்குக்கு விலை போவதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு பயந்து அதற்கு சாட்டாக எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்பதில் பலத்த சிக்கல்கள் உள்ளதாக தொடர்ந்து சொல்லி வந்தது. பின்னர் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் அது அரசின் கையில் கிடைத்து விடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தது.

இந்த வேளைகளில் இது பற்றி காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரஊப் ஹக்கீம் போன்றோர் தலைமையிலான சிறுபான்மை கட்சிகள், தற்போது எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் கையில் ஒப்பiடைக்கப்பட்ட பின் அருண்டெழுந்தவர்கள் போல் மேற்படி எல்லை நிர்ணய  அறிக்கையின் படி உடனடியாக தேர்தல் நடத்த வேண்டாம் என அரசை கோரியுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்படும் போது அதில் சிறு பான்மை மக்களின் பாதக நிலைகளை முறையாக சுட்டிக்காட்டாமல் அவ்வப்போது அரசுக்கு சார்பான ஓரிரு கட்சிகளை மட்டும் அழைத்து பேக்காட்டியவர்களுக்கு இப்போதுதான் வட்டார முறைப்படியான தேர்தலும் எல்லை நிர்ணய அறிக்கையும் பாதகம் என்பது தெரிந்தள்ளதா?. அதுவும் அரசுக்கு சார்பான சிறு கட்சிகள் மட்டுமே கூடி இதனைத்தெரிவித்திருப்பதை பார்க்கும் போது இவர்கள் தேர்தலை வேண்டுமென்றே தள்ளிப்போடுவதற்குரிய அரசின் ஏஜன்டுகளாக செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

வட்டார முறை பிழை என்பது இவர்களுக்கு தெளிவாக தெரிந்த நிலையில் பழைய விகிதாசரப்படியாவது உடனடியாக தேர்தலை நடாத்துவதே ஜனநாயகத்தை மதிப்பதாகும் என இவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் தேர்தலை பின்போடும் அரசின் தந்திரத்துக்கு துணை போவது இவர்களின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.





Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத