மகிந்தவிடம் தோற்ற மைத்திரி

நல்லாட்சி அரசிலும் ஊழல் - ஆய்வில் தகவல், மகிந்தவிடம் தோற்ற மைத்திரி (விபரம் இணைப்பு)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல்களை விட இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தான் அதிகம் என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் வெளிவந்துள்ளது.

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இப்புள்ளி விபரங்களின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் உலக ஊழல் தரவில் 2014 ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 85 ஆவது இடத்தில் இருந்தது.

எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற 2015 ஆம் ஆண்டில் 168 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83ஆவது இடமும் 2016 ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 95 ஆவது இடத்திலும் இருக்கின்றது.

இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை விட மோசமானதாக கருதப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள, இலங்கையின் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக ஒபயசேகர,

ஆண்டுகளும், அரசாங்கமும் மாறியிருக்கின்றது. பொதுத்துறையில் ஊழல்கள் குறையவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருந்தும் அது சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகில் ஊழல் அற்ற நாடுகள் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு லட்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி விசாரணைகள் நடந்துவரும் இவ்வேளையில் இந்த புள்ளிவிபரம் வெளிவந்திருப்பது இன்றைய அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியிடம் இந்த விடையத்தில் மைத்திரிபால சிறிசேன தோற்றுவிட்டார்கள் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

ஏனெனில் ஊழலை இல்லாது செய்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்களின் ஆட்சிக்காலத்திலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்