Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

மஞ்சக் கவரைத் தான் வை.எல்.எஸ் ஹமீதும் பெற்று வந்துள்ளார்

ரிசாத் பிழையென்றால் அஷ்ரபும் பிழைதான் -
YLS ஹமீட் இதனை ஏற்றுக் கொள்வாரா?

ஏ.எச்.எம்.பூமுதீன் -

2000 – 2015 ஆண்டு வரையான 15 வருட முழு நேர ஊடகப் பணியிலிருந்து கடந்த ஒரு வருட காலமாக ஒதுங்கியிருக்கின்ற போதிலும், அவ்வப்போது சிலர் ரிசாதின் ஊடகப் பிரிவோடு என்னையும் தொடர்பு படுத்தி விமர்சனங்கள் செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருவதனை அவதானித்ததன் பேரிலேயேதான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த சின்ன ஆக்கத்தை எழுத வேண்டி ஏற்பட்டது.

கடந்த ஞாயிறு மாலை இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முயன்னர் அமைச்சர் ரிசாத் பங்குபற்றிய அதிர்வு நிகழ்ச்சியின் பின்னர் சகோதரர் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நேரடியாக எனது பெயரை சுட்டிக்காட்டியும் அறிக்கை விட்டும், மறைமுகமாக எனது பெயரை சுட்டிக் காட்டியும் சில கருத்தக்களை வெளியிட்டிருந்தார்.

ரிசாதிடம் பணம் பெற்று  எழுதும் ஊடகவியலாளர் என்றும், ரிசாதின் ஊடகப்பிரிவில் அடுத்தவர்களை கொச்சைப் படுத்துகின்ற செயற்பாடுகளை செய்கி;ன்றவன் என்றும்   அவர் என்னை விமசர்சனம் செய்திருந்தார். இந்த பின்னணியில் தான் இன்று இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.

2000ம் ஆண்டுகளில் ரிசாத் பதியுதீன் துவிச்சக்கர வண்டிக்கு கூட வசதியற்றவர். அவர் சகோதரர் ஆட்டோ ஓட்டியவர். இன்று அவர்கள் பெரும் சொத்துப்பத்துக்களுக்கு அதிபதியாளர்களாகவும் பலகோடிகளுக்கு சொந்தக் காரர்களாகவும் காணப்படுவதாக கடந்த மின்னலில் ஹமீத் குறிப்பிட்டிருந்தார்.

1970 அல்லது 1975ம் ஆண்டுக்கு உட்பட்ட காலப்பகுதிகளில் சிறிமா ஆட்சிக் காலத்தில் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்த போது உள்ளுர் உற்பத்தியான மருதமுனை சாரண் அதிஉச்ச விற்பனையில் காணப்பட்டது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்த முகா ஸ்தபாகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், தனது குடும்ப ஜீவனோபாயத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அந்த மருதமுனை சாரண்களை கொழும்பில் உள்ள பாய் கடைகளில் விற்பனை செய்து அதில் வரும் வருமாணத்தினூடாக தனது படிப்பை மேற்கொண்டார். இதனை நீண்ட காலமாகவும் அவர் செய்தும் வந்தார்.

அதே அஷ்ரப் தான் பிற்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைமைத்துவத்தை கையேற்று பெறுமதிமிக்க அமைச்சுப்பதவிகளைப் பெற்று முஸ்லிம்களின் தானைத் தளபதி என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார். அதன் பிறகு அவர் அந்த தொழிலில் ஈடுபடவுமில்லை. அவ்வாறு செய்வது அவரது பதவி நிலைமைக்கு பொருத்தமுமாகாது.

மின்னலில் வை.எல்.எஸ் ஹமீட், அமைச்சர் ரிசாத் தொடர்பில் கூறுகின்ற கூற்றைப் பார்க்கின்ற போது அஷ்ரபும் அவர் மரணிக்கும் வரை சாரண் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதையே வை.எல்.எஸ் இன் கருத்து நிரூபிக்கின்றது. அவ்வாறா வை.எல்.எஸ் கூறவருகின்றார்?
ஆனால் அஷ்ரப் பலம்பொருந்திய ஒரு தலைவனாக மாறிய போது இந்த வை.எல்.எஸ். அவரின் இணைப்பாளராக இருந்து   அஷ்ரபின் அமைச்சிலிருந்தே மாதா மாதம் மஞ்சக் கவரையும் ( சம்பளம்) பெற்று வந்தார் .

அப்படியென்றால் இன்று ரிசாத் செய்வது பிழையென்றால் அன்று அஷ்ரப் செய்ததும் பிழைதான். அஷ்ரபின் அமைச்சிலிருந்து வை.எல்.எஸ்  சம்பளத்தை பெற்றதும் பிழைதான்.

2000ம் ஆண்டுகளில் துவிச்சக்கர வண்டிக்கூட ரிசாதுக்கு வசதி இல்லை என்பது வை.எல்.எஸ் இன் வாதம். அவரது சகோதரர் ஆட்டோ ஓட்டினார் என்றும் வை.எல்.எஸ் கூறுவதையும் உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மரணிக்கும் வரை அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்றா வை.எல்.எஸ் விரும்புகின்றார்?

அன்று துவிச்சக்கர வண்டியில்லாத ரிசாத், ஆட்டோ ஓட்டிய அவரது சகோதரர் இன்று தத்தமது  முயற்சிகளினால் அமைச்சராகவும் வசதி படைத்தவராகவும் உருவாகியிருக்கிறார்கள். இது தான் யதார்த்தம். புத்தகம் ஒன்றுக்கே வழியில்லாத ஆபிரிகாம் லிங்கன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியானார். இதுவும் பிழை என்று வை.எல்.எஸ் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கணிதபாட ஆசிரியராக கடமையாற்றியமை அனைவரும் அறிந்த விடயம்.  அன்று ஆசிரியராக ரிசாத் பதியுதீன் தான் இன்று அமைச்சராக மாறியுள்ளார் என்று ஏன் இன்று வரை இந்த வை.எல்.எஸ் ஹமீதுக்கு கூற முடியாமல் உள்ளது?

அன்று அஷ்ரப் பலம்பொருந்திய காலத்திலும் அவருக்கு  சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டமும், லண்டன் மாநகரில் பங்களாவும் கொழும்பில் பல இடங்களில் பலவகையான சொத்துக்களும், அரபு நாடுகளிலிருந்து பெரும் தொகை பணம் பெற்றுக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவைகள் உண்மையென்று இந்த நிமிடம் வரை யாராலும் நிரூபிக்க முடியாமலே போய்விட்டது. அப்போதும் இந்த வை.எல்.எஸ் ஹமீதும் அஸ்ரப் கூடத்தானே இருந்தார்.

இதே போன்று தான் இன்று ரிசாத் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களாகும்.
அமைச்சர் ரிசாதிடம் மித மிஞ்சிய சொத்துக்களும் பணமும் இருப்பதாக கூறும் வை.எல்.எஸ்.ஹமீத், ஆகக்குறைந்தது அவரது சொத்து இந்த இடத்தில் இருப்பதாக ஆதாரபூர்வமாக ஏன் நிரூபிக்க முடியாமல் உள்ளது. 10 வருடங்கள் ரிசாதுடன் நெருக்கமாக இருந்தவர் வை.எல்.எஸ்.ஹமீட். அந்த காலத்தில் ரிசாதிடமிருந்த ஒரு சொத்தையாவது கண்டு கொள்ள முடியாமல் போனது அவரது துரதிஷ்டவசமே. ஊழல் வாதி, பொய்யன் என்றெல்லாம் வை.எல்.எஸ் இந்த நிமிடம் வரை விமர்சித்துக் கொண்டிருக்கும் போதிலும் கூட – அவரைப் பற்றி இதுவரை ஓர் இடத்திலாவது ரிசாத் கழங்கப்படுத்தவே இல்லை. தலைமைக்குரிய பண்புக்கு இது போதாதா?

ஊடகவியலாளர்களை ரிசாத் கைக்குள் போட்டுக் கொண்டுள்ளார். போலி முகநூல்களை வைத்துள்ளார். பொய்யான கருத்துக்களை எழுதுவதற்கு எனக்கு (கட்டுரை ஆசிரியருக்கு) பணம் தருகின்றார்; என்றெல்லாம் வை.எல்.எஸ்.ஹமீட் குற்றம் சுமத்துகின்றார். அதைக் கூட அவரால் நிரூபிக்க முடியாமல் உள்ளது.

எடுகோள் ஒன்றுக்காக அமைச்சர் ரிசாத் பணம் எனக்கு தந்ததாக வைத்துக் கொள்வோம். அவரின் கீழுள்ள ஊடகப் பிரிவில் சம்பளம் பெற்றதைப்  போன்று தான், அதே ரிசாத் பதியுதீன் கீழ் பணியாற்றிய வை.எல்.எஸ் ஹமீதும் நிறுவனத் தலைவர் பதவியை பெற்று சம்பளம் பெற்றுக் கொண்டார்;. ரிசாத் - அவர் பணிக்கும் கட்சி வேலைகளை வை.எல்எஸ். ஹமீத் செய்தும் வந்தார். எனவே நான் மஞ்சக் கவர் பெற்றுள்ளேன் என்றால் அதே மஞ்சக் கவரைத் தான் வை.எல்.எஸ் ஹமீதும் பெற்று வந்துள்ளார். இது ஒரு தெளிவான விடயம்.

நாங்கள் எல்லோரும் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்களாக  இருக்கும்போது, இந்த நிமிடம் வரை எம்பியாகவோ அல்லது கெபினட் அமைச்சராகவோ வர முடியாமல் உள்ள நிலையில் - மன்னார் தாராபுரத்தில் பிறந்த ரிசாத் என்னும் இளைஞன் 28 வயதில் எம்பியாகி, கெபினட் அமைச்சராகி, அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸிற்கு சவால் விடுமளவுக்கு கட்சியொன்றின் தலைவராக மாறியதுதான்; அவர் மீதான வை.எல்.எஸ் போன்றோரின் இந்தளவு காழ்ப்புணர்ச்சிக்கு பிரதான காரணியாகவுள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

இறுதியாக ரிசாத் பதியுதீன் போலி முகநூல்ளையும் பணம் கொடுத்து எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார் என்றால்  அவற்றை அடையாளம் காட்டுங்கள்.

அஷ்ரப் காலத்திலும் சில பத்திரிகைகளின் பெயர்களை சூட்டிக் காட்டி அவைகள் அஷரபின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பத்திரிகைள் என கூறப்பட்டன. அன்று முகநூல்கள் இருந்திருந்தால் அம்முகநூல் தொhடர்பிலும் அஷ்ரபுக்கு எதிராக குற்றசாட்டுக்கள் வந்திருக்கும்.

அதே குற்றச்சாட்டுத் தான் இன்று ரிசாத் மீதும் சுமத்தப்படுகின்றது. சமுக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் இன்று பல்கிப் பெருகியுள்ளதால் ரிசாதின் ஆதரவாளர்கள் ரிசாதுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவது அதிகரித்துக் காணப்படுகின்றது. அதற்காக ரிசாத் தான் அந்த முகநூல்களை நடத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு அடிப்படை அற்றதாகும்.

இறுதியாக, அன்று அஷ்ரப் - இன்று ரிசாத  - நாளை மற்றுமொரு தலைவர் மீதும் இதே குற்றச்சாட்டுக்கள் தொடரத்தான் செய்யும். அதே போல் வை.எல்.எஸ். போன்ற வைரஸ்களும் அக்குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத